• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    சரஸ்வதி ஹோமம்

    சரஸ்வதி ஹோமம்

    சரஸ்வதி ஹோமம், கலை வாணி என்றும் கலைமகள் என்றும் போற்றப்படும், சரஸ்வதி தேவி குறித்து செய்யப்படும் ஹோமம் ஆகும். பத்மாசனம் எனப்படும். தாமரையை தன் ஆசனமாகக் கொண்டு கையில் வீணை ஏந்தியிருக்கும் சரஸ்வதி தேவி, கல்வி மற்றும் கலைகள் அனைத்துக்கும் சொந்தமானவள். ஒலி, இசை, பாடல், ஞானம், மொழி ஆகியவற்றின் வடிவாக இருப்பவள். புத்தி கூர்மை மற்றும் ஞாபக சக்தி பெறவும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும் இந்த ஹோமம் செய்யப்படுகின்றது.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    சரஸ்வதி ஹோமம்
    (அறிவை வளர்க்கும் அற்புத ஹோமம்)

    அறிமுகம்

    Saraswati Homa

    கலை வாணி என்றும் கலைமகள் என்றும் போற்றப்படும், சரஸ்வதி தேவி குறித்து செய்யப்படும் ஹோமம் சரஸ்வதி ஹோமம் ஆகும். பத்மாசனம் எனப்படும். தாமரை மலரில் அமர்ந்து கையில் வீணை ஏந்தியிருக்கும் சரஸ்வதி தேவி, கல்வி அனைத்துக்கும் சொந்தமானவள். ஒலி, இசை, பாடல், ஞானம், மொழி ஆகியவற்றின் வடிவாக இருப்பவள். புத்தி கூர்மை மற்றும் ஞாபக சக்தி பெறவும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும் இந்த ஹோமம் செய்யப்படுகின்றது.

    ஆய கலைகளுக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி தேவி, ஞானத்தின் வடிவானவள். கல்விக் கடவுளாம் சரஸ்வதியை ஆராதிப்பதற்காக செய்யப்படும் ஹோமம் இந்த சரஸ்வதி ஹோமம். இதன் மூலம் சரஸ்வதி தேவியை வழிபட்டு, சிறந்த புத்தி கூர்மை, ஞாபக சக்தி போன்றவற்றைப் பெறலாம். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு அன்னை சரஸ்வதியின் அருளைப் பெற்று கலை, கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்குங்கள். தவிர, ஹோமத்திலிருந்து வெளிப்படும் சக்தி மிக்க ஆற்றல் உங்கள் படைப்பாற்றலையும் மேம்படுத்த வல்லது.

    சரஸ்வதி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    சரஸ்வதி ஹோமம், தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த ஹோமம் உங்களுக்குத் திறமை மற்றும் நம்பிக்கையை அளிக்கும். இதனால், கல்வி, அறிவு, மற்றும் இசை போன்ற அனைத்துத் துறைகளிலும், உங்கள் முயற்சிகள் எல்லாம், அசாதாரண வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த ஹோமத்தின் மூலம் கிடைக்கும் ஆற்றல், உங்கள் தனித்தன்மையை நன்கு விளக்கிக் காட்டும் வல்லமை வாய்ந்தது. முயற்சிகள் வெற்றி பெறவும், உங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும், அன்னை சரஸ்வதியின் அருளைப் பெற, இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    சரஸ்வதி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, சரஸ்வதி தேவியின் அருளால் தடைகளைக் கடந்து, திறன்களை வளர்த்து, உங்கள் கல்வி மற்றும் பிற முயற்சிகளில் வெற்றி காணுங்கள். .

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    சரஸ்வதி ஹோமத்தின் நற்பலன்கள்

    கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவியை வழிபடுவதன் மூலம், கீழ்கண்ட பலன்கள் கிடைக்கின்றன என புனித நூல்கள் பறைசாற்றுகின்றன:

    • நினைவாற்றல் அதிகரிக்கும்

    • அறிவாற்றல் மற்றும் உரையாடல் திறன் பெருகும்

    • வெற்றிக்கான நம்பிக்கை மேம்படும்

    • இலக்குகளை அடைவதற்கான சக்தி பிறக்கும்

    • உங்கள் கல்விப் பயணம் மேன்மையுறும்

    • மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்று, தேர்வில் வெற்றி பெற இயலும்

    • உங்கள் திறமைகள், பட்டை தீட்டப்பட்டு மெருகடையும்

    • இலக்கிய முயற்சிகள் முன்னேற்றம் பெறும்

    • பெருமையும், புகழும் சேரும்

    சரஸ்வதி ஹோம மந்திரம்

    ஓம் அர்ஹம் முக கமல் வாசினீ பாபாத்ம க்ஷயம் காரி வாத் வாத் வாக்வாதினீ சரஸ்வதி ஐங் ஹ்ரீங்க் நமஹ ஸ்வாஹா

    சரஸ்வதி ஹோமம்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here