Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

காசிக்கு போக முடியலையே என்ற கவலையா? பங்குனி அஸ்வினியில் திருக்கடையூர் போங்க

January 1, 1970 | Total Views : 774
Zoom In Zoom Out Print

ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் அனைவர் மனதிலும் சென்று பார்க்க ஆசைப்படும் முக்கிய இடங்களுள் காசியும் ஒன்று என்று கூறினால் மிகை ஆகாது. காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருக்கும். சில சமயம் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட, இந்த சம்சார சாகரத்தில் உழல்வதில் இருந்து தப்பிக்க பேசாம காசி ராமேஸ்வரம் போகலாம் போல் இருக்கு என்று கூறுவார்கள். முக்தி அளிக்கும் ஸ்தலம் காசி ஆகும். ஆனால் விருப்பப்படும் அனைவருக்கும்  காசி செல்லும் பாக்கியம் கிட்டி  விடுகிறதா என்ன? அதற்கெல்லாம்  ஒரு  கொடுப்பினை வேண்டும் அல்லவா?

காசிக்கு போக முடியலையே என்ற கவலையா? 

உங்களுள் பலருக்கு காசிக்கு போக முடியவில்லையே என்ற கவலை இருக்கும். கவலைப் படாதீர்கள். உங்கள் கவலையும் தீரும். ஆசையும் நிறைவேறும். எப்படி என்று கேட்கிறீர்களா? காசிக்கு செல்ல இயலாத  பக்தர்களுக்கும் கங்கையில் நீராடிய புண்ணிய பலனை அருள வேண்டும்' என்று திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அத்தகைய புண்ணிய பலனைப் பக்தர்கள் அடைவதற்காகக் கோயில் கொண்ட திருத்தலம்தான் திருக்கடவூர் மயானம் என்ற புனிதத்தலம். புகழ் வாய்ந்த  அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் திருக்கடவூருக்கு அருகிலேயே அமைந்துள்ளது திருக்கடவூர் மயானம். பங்குனி மாதம் அஸ்வினி அன்று திருக்கடையூர் சென்று வாருங்கள். அவ்வாறு செல்வது காசிக்கு சேரு சென்று வந்ததற்கு சமம் ஆகும்.  

பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர் போல மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் 
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே 
என்கிறார் திருஞான சம்பந்தர் தமது தேவார பதிகத்தில்.

திருக்கடவூர் மயானம்; திரு மெய்ஞானம்

சிவத் தலங்களில் ஐந்து கோயில்கள், 'பஞ்ச மயான தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம், மற்றும் கடவூர் மயானம் ஆகும். மயானம் எனபது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். அதே சமயத்தில்  பிரம்மன் வழிபட்டுப் பேறு பெற்றதலம்.  தான் என்ற அகந்தை மிகும் போது பிரம்ம தேவரை சிவபெருமான் அழித்து விடுவார். அவ்வாறு அவரை அழித்து நீறாக்கியதால் இந்த இடம் திருக்கடவூர் மயானம் எனப்பட்டது. சிவபெருமான் பிரம்மதேவரை இந்தத் தலத்தில் எரித்தபோது, தேவர்கள்  அனைவரும் சேர்ந்து திருக்கடவூர் மயானத்தை அடைந்து அவரிடம் பிரம்ம தேவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். தேவர்களின் பிரார்த்தனைக்கு செவி மடுத்த சிவ பெருமான் பிரம்மாவை மீண்டும் உயிர்ப்பித்து அவருக்கு ஞானத்தை அருளி படைப்புத் தொழிலை வழங்கினார். எனவே இந்த தலத்திற்கு திருக்கடவூர் மயானம் என்ற பெயர் ஏற்பட்டது. 

திருக்கடவூரும் கங்கையும்: 

கங்கை தீர்த்தமாகத் தோன்றிய தலம் என்ற சிறப்பை பெற்றது திருக்கடவூர் மயானம் என்னும் திருக்கடவூர் திரு மெய்ஞானம் திருக்கோவில். இந்த ஆலயத்திற்கு வெளியில்  தெற்குப் புறத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே ஒரு தீர்த்தக் கிணறும் உள்ளது. இந்த கிணற்று நீரைக் கொண்டு தான் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இந்த தீர்தத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. அந்த விசேக்ஷம் நிறைந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாள் ஆகும். 

மார்க்கண்டேயருக்காக பங்குனி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கையே தீர்த்தமாகத் தோன்றினார் எனத் தலபுராணம் கூறுகிறது. இதுவே கடவூர் தீர்த்தக் கிணறு என்றும், காசி தீர்த்தம் என்றும், அஸ்வினித் தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஐதீகத்தினை உறுதிப்படுத்தும் விதமாக பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடைபெறுகிறது. இந்த தீர்த்தத்தைக் கொண்டே திருக்கடவூர் அபிராமி மற்றும் ஈஸ்வரருக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பயன்படுகிறது  

திருக்கடவூர் மயானக் கிணறு :

இந்த தலம் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இந்தக் கோவிலில் இருக்கும் பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் கங்கை பெருகியதாக ஒரு ஐதீகம். சிரஞ்சீவி  என்று அழைக்கப்படும் மார்க்கண்டேயர் சிவ பெருமானுக்கு இந்த தலத்தில் கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய விரும்பினார். பக்தனின் திரு உள்ளம் அறிந்த சிவன் அவனது விருப்பத்தை நிறைவேற்ற கிணற்றில் கங்கையை வரவழைத்தார் என்று இந்த ஆலய தல புராணம் வாயிலாக நாம் அறிய முடிகின்றது. 

இங்கு குடி கொண்டிருக்கும் அமிர்தகடேஸ்வர் அருளால் தான் கங்கை இங்கு கிணற்றில் பெருகியது என்பதால் இந்த கிணற்று நீர் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப் படுகின்றது. அதற்கு காரணம் ஒரு தடவை இந்த இடத்தில் அரசாட்சி செய்து வந்த பாகுலேயன் என்ற மன்னன் ஒருவன், இங்குள்ள இறைவன் பிரம்ம புரீஸ்வரருக்கு  கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்தான், அப்போது திடீரென்று சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த தழும்பு இன்றளவும் சிவலிங்க திருமேனியில் காணப்படுகின்றது. எனவே இந்த நீர் வேறு எதற்கும் பயன்படுத்தப் படுவதில்லை. 

திருக்கடையூரில் பங்குனி அஸ்வினியின் சிறப்பு என்ன ?

''இந்தக் கிணற்றில்தான் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கை பெருகுவதாக ஐதிகம். எனவே அன்றைக்கு மட்டுமே பக்தர்கள் கிணற்று நீரை எடுத்து புனித நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற நாட்களில் நீராட முடியாது. வருடத்துக்கு ஒருமுறை பங்குனி மாதம் வரும் அஸ்வினி நட்சத்திரத்தன்று இந்தக் கோயிலுக்கு வந்து புனித நீராடி இறைவனையும் இறைவியையும் மனமுருக வழிபட்டால், எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைப்பதுடன், பித்ரு தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். இந்த வருடம் வரும் 27 - 3 - 2020, பங்குனி 14, வெள்ளிக்கிழமை புண்ணிய நாளில் பக்தர்கள் அனைவரும் திருக்கடையூர் மயான கிணறு பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராடி புண்ணியம் பெறுங்கள்

காசியில் புனித நீராடினால் என்ன கீர்த்தி கிட்டுமோ அந்த அளவு இங்கும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உங்கள் உள்ளம் மற்றும்  உடல் தூய்மையாகி நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் எளிதாக அடைய இறைவனை சரணாகதி அடைந்து நாம் வாழ்வில் பெரும் அனைத்தும் அவன் தரும் வரம் என வாழ்ந்தால் வாழ்க்கை நமக்கு என்றுமே இனிக்கும். மேலும் AstroVed.com நடக்கும் பங்குனி உத்திரம்  தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணவும் 

banner

Leave a Reply

Submit Comment