Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

சனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோக ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

December 17, 2019 | Total Views : 1,797
Zoom In Zoom Out Print

சிம்மம்:

இதுவரை உங்கள் ராசிக்கு 5 இல் இருந்து உங்கள் புத்தி சதூரியத்தில் மந்த தன்மை, எந்த விஷயத்திலும் முடிவெடுத்து செயல்படுவத்துவதில் தயக்கம், தாமதம், தேவையற்ற மனக்குழப்பம், பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்சினை, பிள்ளைகளால் மனசங்கடம், பிள்ளைகள் உடல்நிலையில் பாதிப்பு தந்த சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6 இல் சஞ்சரிப்பதால் உங்கள் மனம் தெளிவு பெறும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

எந்த விஷயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த குல தெய்வபிரார்த்தனை, வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். விலகி சென்ற உறவுகள், நண்பர்கள் தேடி வருவார்கள்.எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் சீரான முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் புகழ், மரியாதை அதிகரிக்கும். பல வகையில் பணம் வந்து சேரும். தனது எதிரிகளை அடையாளம் கண்டு விளக்குவீர்கள்.

பலரும் உங்களுக்கு பணிந்து செல்லும் சூழ்நிலை உருவாகும். அனைவரையும் அன்பால் அரவணைத்து செல்வீர்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும்.  இதுவரை மன நோயா? உடல் நோயா? என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்த நீங்கள்,  உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். உங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.  புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்:

புனித ஆலயங்களுக்கு திருப்பணி செய்தல், ஏழை, எளியோருக்கு உதவி செய்தல் யோக பலன்களை அதிகரிக்கும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்:

இதுவரை உங்கள் ராசிக்கு 2 இல் ஏழரை சனியில் குடும்ப சனியாக இருந்து குடும்பத்தில் நிம்மதியின்மை, பொருளாதாரத்தில் ஏற்ற, தாழ்வு, மற்றவர்களுடன் வீண் வம்பு, வாக்கு வாதம்,  வாழ்வின் முன்னேற்றத்தில் தடை, எதிர்மறை மனப்பாங்கு, எதிலும் கால தாமதம், எதிர்மறை மனப்பாங்கு, உடல் ஆரோக்கிய குறைவு தந்த சனி பகவான், தற்போது உங்கள் ராசிக்கு ஏழரை சனி விலகி மூன்றாமிடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

இனி வாழ்வில் அனைத்தும் உங்கள் வசமாகும். என்று எனக்கு நல்ல காலம் என ஏங்கிய நிலையில், இதோ இத்தனை நாளாக உங்களை ஏழரை சனியாக வாட்டி வதைத்த சனி பகவான், இனி உங்களுக்கு எல்லா நலன்களையும், வளங்களையும் வாரி வழங்க போகிறார். மனதில், தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். அண்டை, அயலாருடன் இருந்த பிணக்குகள் நீங்கும், சகோதர, சகோதரிகளின் ஆதர்வு கிடைக்கும்.நீண்ட நாளாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பும், ஆதரவும் அதிகரிக்கும். உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி செய்தல். பறவை மற்றும் விலங்குகளுக்கு நீர் மற்றும் உணவு அளித்தல்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

மீனம்:

இதுவரை உங்கள் ராசிக்கு 10 இல் இருந்து அதிக வேலைப்பளுவையும், ஓய்வே இல்லாமல் ஓடி கொண்டிருந்த நிலை,  கடின உழைப்பு, தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறு, சிறு பிரச்சினை தந்தாலும், தொழிலில் ஆளுமையும், விவேகமும், செயல்திறனும், முன்னேற்றமும் தந்த சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு லாபஸ்தானமாகிய பதினோராம் பாவத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

சனி பகவான் ஒரு ராசிக்கு அதிக நன்மைகளை தரக்கூடிய இடமாகிய  11 மிடமான லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல யோகங்களை அனுபவிக்க போகிறீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிர்பாராத தனவரவு அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். புகழ், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நீங்களும் பிரபலமாக கூடிய சூழல் உருவாகும்.

நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விலகி சென்ற உறவுகள் தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. நீண்டநாளாக குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கி கொண்டு இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். உங்கள் நீண்ட கால உழைப்பிற்கான பலனை அனுபவிக்கும் காலம் ஆகும்.

பரிகாரம்:

புனித ஆலயங்களில் அன்னதானம் செய்தல், ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவி, பொருளாதார உதவி செய்தல்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

banner

Leave a Reply

Submit Comment