Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

12 ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2024 | Rahu Ketu Peyarchi Palangal 2022 to 2024 Tamil

December 14, 2021 | Total Views : 7,020
Zoom In Zoom Out Print

12 ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024

ராகு-கேது நிழல் கிரகங்கள் ஆகும். அவை தாங்கள் இணைந்து இருக்கும் கிரகங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. ராகு கேது கிரகங்கள் பெயர்ச்சி அடையும் காலங்களிலும் அவ்வாறே பலன் தருகின்றன. இந்த கிரகங்கள் எப்பொழுதும் நூற்றி எட்டு பாகை வித்தியாசத்தில் இடம் வலமாக சுற்றி வருகின்றன. மற்ற கிரக சேர்க்கை என்பது, பார்வை, இணைவு மற்றும் பிற கிரகங்களுக்குரிய நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வதையும் குறிக்கும். 

ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் ஏப்ரல் 12, 2022 முதல் அக்டோபர் 30, 2023 வரை சஞ்சரிப்பார்கள்.  ராகுவின் பெயர்ச்சி மேஷ ராசியில் நடக்கும். அதன் அதிபதி செவ்வாய். இது முக்கியமாக எதிர்மறையான பலன்களைத் தரும். என்றாலும் பொருள்சார்ந்த வகையில் சிறப்பான விரைவான பலன்களை அளிக்கும். குறுகிய காலத்தில் வெற்றி மற்றும் புகழ் சேர்க்கும்.  அதேசமயம், கேது சுக்கிரன் அதிபதியான துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் நடுநிலையான அல்லது மிதமான நல்ல பலன்களை அளிக்கும். இருப்பினும், துலாம் ராசியில் கேதுவின் சஞ்சாரம் நீண்ட கால காதல் உறவில் குறுகிய கால பிரிவினைகள் மற்றும் முறிவுகளை ஏற்படுத்தும்.

 

ராகு கேது பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள்

ராகு சந்திரனின் வடக்கு முனை என்றும், கேது சந்திரனின் தெற்கு முனை என்றும் அழைக்கப்படுகிறது. எனவே அடிப்படையில் அவை முதலில் உங்கள் மனதையும், உங்கள் எண்ணங்களின் செயல்பாடு  மற்றும்  உங்கள் புத்தியையும் பாதிக்கின்றன மற்றும் மிக உயர்ந்த நம்பிக்கையையும், பகல் கனவுகளையும், உயர் கற்பனைத் தரத்தையும், பொருள்சார்ந்த ஏக்கத்தையும்  தருகின்றன. இருப்பினும், இது தேவையற்ற போதைக்கு அடிமையாதல், அவதூறுகள், கெட்ட பெயர்கள் மற்றும் வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளை அளிக்கிறது. வாழ்க்கையில் தோல்விகள், குழப்பங்கள், மோதல்கள், வழக்குகள் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றையும் தருகிறது.

ராகு தனது பெயர்ச்சியின் போது அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கின்றது.  அஸ்வினி கேதுவின் நட்சத்திரமாக இருப்பதால் நன்மை தீமை இரண்டும் கலந்த கலவையான பலன்களைத் தரும். ஆனால் பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரங்களின் மீது ராகு பெயர்ச்சி எதிர்மறையான பலன்களை அளிக்கும். தனிப்பட்ட வாழ்வில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை குலைக்கும். இருப்பினும், இது குறுகிய காலத்திற்கு விரைவான உலக அளவிலான வெற்றியை அளிக்கும். 

கேது துலாம் ராசியில் சித்திரை,  சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்களின் மீது சஞ்சரிப்பார், இது பொதுவாக நன்மை மற்றும தீமை கலந்த  பலன்களைத் தரும். மற்றும் சில நேரங்களில் மோசமான முடிவுகள் அதிக அளவில் அளிக்கும். சுவாதி ராகுவின் சொந்த நட்சத்திரம். எனவே சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிப்பது பலரின் திருமண வாழ்க்கையிலும் இல்லற வாழ்விலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

மேஷ ராசியில் ராகு சஞ்சரிக்கும் காலக்கட்டம் முழுவதிலும் சனியின் பார்வை ராகுவை நோக்குவதால் ராகுவின் தோஷ பலன்கள் ஓரளவு குறையும். இருப்பினும், ஏப்ரல்-மே 2022, மற்றும் ஏப்ரல்-மே 2023 மாதங்களில் ராகுவின் மீது சூரியன் சஞ்சாரம் இருப்பதால் கிரகண தோஷம் ஏற்படுகின்றது. அதன் காரணத்தால் இந்த நேரத்தில் உலக அளவில் தீமையான பலன்களை அளிக்கின்றது. 

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? 

  • ராகு   12 ஏப்ரல் 2022 முதல் 30 அக்டோபர் 2023 வரை மேஷ ராசியில் சஞ்சாரம் செய்கின்றது.
  • கேது  12 ஏப்ரல்  2022 முதல் 30 அக்டோபர்  2023 வரை துலாம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றது.  

ராகு கேது பெயர்ச்சி 2022 - ல் எந்த ராசிகளுக்கெல்லாம் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்...

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 மேஷம் :

அன்பான மேஷ ராசி அன்பர்களே! ஏப்ரல் 12, 2022 முதல் ராகு உங்கள் ராசியிலேயே பெயர்ச்சி ஆகி அங்கு  சஞ்சரிக்கிறார். ராகுவின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு நன்மை, தீமை இரண்டும் கலந்த  கலவையான பலன்களைத் தரும். குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் சமூக செல்வாக்கு உயரும். ஆனால் உங்கள் அசாத்தியமான லட்சியம் மற்றும் சுயநல இயல்பு உங்கள் வாழ்க்கையில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் சில நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள நேரும். அல்லது உங்கள் தவறான செயல்களால் உங்கள் பணியிடத்தில் உங்கள் நற்பெயர் பறிபோகலாம். இருப்பினும், சிலருக்கு குறுகிய காலத்திற்கு திடீர் அதிர்ஷ்டம், பணம் மற்றும் புகழ் கிடைக்கும்.

ராகு கேது பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்   

கேது உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கும் உங்கள் காதல் துணைக்கும் இடையே குழப்பம் ஏற்படலாம். உங்கள் வியாபாரத்தில் திடீர் லாபங்கள் மற்றும் திடீர் இழப்புகள் ஏற்படலாம் மேலும் உங்கள் காதலர் அல்லது வாழ்க்கைத்துணையுடனான உங்கள் உறவு இனிமையாகவும் நெருக்கமாகவும் இருக்காது. கணவன்/ மனைவி பிரிவு மற்றும் மற்றும் விவாகரத்து போன்றவைகளை சந்திக்க நேரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நம்பிக்கையின்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வில் குறைபாடு இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களே !ராகு உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம்  வீட்டில் பெயர்ச்சி ஆகி அங்கு  சஞ்சரிக்கிறார். இந்தப் பெயர்ச்சி காரணமாக உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.. உங்கள் வாழ்க்கையில் கொண்டாட்டங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கலாம். நீங்கள் வெளிநாடு அல்லது வெளி நகரங்களில் வெற்றியைக் காண்பீர்கள். நீங்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். எதிர்பாலினத்தவருடனான மோகம் உங்களை தவறான வழியில் கூட்டிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கேது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீதிமன்ற வழக்குகள் மற்றும் மறைந்த எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் போட்டியாளர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புகள் ஏற்படும்.  சிலர் தங்கள் வாழ்க்கையில் விபத்து மற்றும் காயங்களால் பாதிக்கப்படலாம். இருப்பினும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் பெரும்பாலானவர்களுக்கு நன்றாக இருக்கும்.  மேலும்  காயங்கள் மற்றும் பிற நோய்களிலிருந்து விரைவாக குணமடையலாம்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். ராகுவின் இந்த சஞ்சாரம் உங்கள் தொழிலில் சிறப்பான வெற்றியைத் தரும். குறிப்பாக சமூக ஊடகங்களில் உங்கள் புகழ் அதிகரிக்கும். நீங்கள் சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்பு கொள்ளலாம். உங்கள் வேலை மற்றும் வியாபாரம், லாபம் மற்றும் புகழுடன் நன்றாக இயங்கும். உங்கள் வருமான ஆதாரம் அதிகரிக்கும் மற்றும் பலர் தங்கள் தொழில் வாழ்க்கையில் அதிக வளர்ச்சி மற்றும் பதவி உயர்வுகளைப் பெறுவார்கள்.

ராகு கேது பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள் 

கேது உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். சிலருக்கு காதல் கசப்பு அல்லது காதல் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறு ஒருவர் மீதான காதல் நாட்டம் உங்கள் வாழ்க்கையில் துயரத்தை ஏற்படுத்தலாம். மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை ஏமாற்றலாம்.  சிலர் ஏமாற்றப் படலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் விசுவாசப் பிரச்சினைகள் இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 கடகம் :

கடக ராசி அன்பர்களே! ஏப்ரல் 12, 2022 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10வது ராசியில் சஞ்சரிப்பதால், அரசாங்க வேலை அல்லது டிஜிட்டல் மற்றும் மின்னணு ஊடகத் துறையில் வெற்றி பெறலாம். சிலர் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மற்றும் அந்தஸ்து பெறலாம். சிலர் அரசு வேலையில் உயர் பதவி  அல்லது அரசியல் மூலம் உயர் பதவியை அடைவார்கள். ராகுவின் இந்த சஞ்சார நேரத்தில் சிலர் அரசியல் வெற்றியை சுவைப்பார்கள். ஒரு சிலர் இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருள் மேம்பாடு மற்றும் ஐடி, பொறியியல் போன்ற துறைகளில்  அங்கீகாரம், வெற்றி மற்றும் வளர்ச்சியைப் பெறலாம்.

கேது உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும். உங்கள் இல்லற வாழ்வில் நிம்மதி குறையும். சிலர் தங்கள் காதல் வாழ்க்கையில் பிரிவினையால் பாதிக்கப்படலாம். நிலம் அல்லது சொத்து இழப்பு ஏற்படலாம். ரியல் எஸ்டேட், ஊக வணிகங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் நீங்கள் சில பண இழப்பை சந்திக்க நேரிடும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களே! ஏப்ரல் 12, 2022 முதல் ராகு உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டில் குடியேறலாம். உயர்கல்விக்கான உங்கள் பாதையில் சில தடைகள் மற்றும் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் உங்கள் நிதி நிலையில்  ஏற்ற இறக்க நிலை இருக்கும். உங்கள் வாழ்க்கையில் குறுகிய காலத்திற்குள் நீங்கள்  செல்வம் சேர்ப்பீர்கள். உங்கள் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம் மற்றும் உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்காது. இருப்பினும், உங்கள் தந்தையின் சமூக மரியாதை உயரும். உங்கள் வாழ்க்கையிலும் அரசியல் வெற்றி கிடைக்கும்.

கேது உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சஞ்சரிப்பதால், கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி மூலம் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களின் கூடுதல் முயற்சிக்குப் பிறகு உங்கள் நிதி நிலை மேம்படும். நீங்கள் நல்ல பலன்களைக் காண ஒவ்வொரு துறையிலும் கூடுதல் முயற்சி தேவைப்படும். உங்கள் உடன்பிறந்தவர்கள் மூலம் ஓரளவு செல்வம் பெறலாம். இருப்பினும், சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவு சில நேரங்களில் பாதிக்கப்படலாம்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 கன்னி :

கன்னி ராசி அன்பர்களே!  ராகு ஏப்ரல் 12, 2022 முதல் உங்கள் ராசிக்கு 8வது வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். ராகுவின் இந்த பெயர்ச்சி லாட்டரி, பரம்பரை சொத்து அல்லது மாமியார் மற்றும் உறவினர்கள் மூலம் திடீர் மற்றும் எதிர்பாராத பணத்தை கொண்டு வரக்கூடும். நீங்கள் சில சொத்துக்களையும் பெறலாம். உங்கள் திருமண வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கையில் பதற்றம் இருக்கலாம் மற்றும் சிலர் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படலாம்.  நீதிமன்ற வழக்குகளில் இழு பறி இருக்கலாம் மற்றும் உங்கள் சகாக்கள் மற்றும் மறைந்திருக்கும் எதிரிகள் சிலர் பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். 

உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகமாகும். உங்கள் வருமானம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்காது. உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மை மற்றும் மோதல்கள் இருக்கும். உங்கள் காதல் துணை அல்லது வாழ்க்கைத் துணை உங்களை கடினமான நேரத்தில் விட்டுச் செல்லக்கூடும். சிலர் தங்கள் காதல் வாழ்க்கையில் மனவேதனை மற்றும் பிரிவினையால் பாதிக்கப்படுவார்கள். காதல் வாழ்க்கை மந்தமாகவும், தொழில் வாழ்க்கை பரபரப்பாகவும் சவாலாகவும் இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 துலாம் :

அன்புள்ள துலாம் ராசி அன்பர்களே! ஏப்ரல் 12, 2022  முதல் ராகு உங்கள் ராசிக்கு 7வது வீட்டிற்கு மாறுகிறார்.  இது வணிகம் மற்றும் கூட்டாண்மை நடவடிக்கைகளில் ஆதாயங்களை பெற்றுத் தரும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுப் பணிகள் சிறப்பாக நடக்கும். சிலர் சமூகத்தில் பெயரும் புகழும் பெற்று  பிரபலமாகலாம். பலர் தங்கள் உத்தியோகம் அல்லது தொழிலில் தங்கள் கடின உழைப்பால் பிரகாசிப்பார்கள். வருமானம் நன்றாக இருக்கும்.  செலவுகள் கட்டுக்குள் இருக்கும். இருப்பினும், கணவன் /மனைவி அல்லது காதல் துணை  உடல்நலக்குறைவால் பாதிக்கப்படலாம். உங்கள் காதல் வாழ்க்கையிலும் சில தவறான புரிதல்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் அவநம்பிக்கைகள் இருக்கலாம்.

கேது உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும்  சர்வவல்லமைக்கான  ஆசீர்வாதங்களும் கிட்டும். துலாம் ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விலகி இருங்கள். சில ரகசிய விவகாரங்கள் உங்கள் திருமண வாழ்க்கையை அழிக்கக்கூடும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே சில மனக்கசப்புகள் இருக்கும். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல உணவு மற்றும் பொருள் வசதியைப் பெறலாம்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களே!  ராகு உங்கள் ராசிக்கு  6ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ராகுவின் இந்த சஞ்சாரம் எதிரிகள், போட்டிகளில்  வெற்றியைத் தரும், மேலும் நீங்கள் நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெறலாம். அரசியலிலும் வெற்றி உண்டாகும். சிலர் வழக்கறிஞராகவும் மருத்துவராகவும் ஆகலாம். விருச்சிக ராசிக்காரர்கள் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுவார்கள், மேலும் சிலர் அரசு வேலையில் உயர் பதவியைப் பெறுவார்கள்.

ராகு கேது பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள் 

கேது உங்கள்ராசிக்கு  12வது வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டில் குடிபெயர்வதில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  உங்களில் சிலர் சொந்த ஊருக்கு மீண்டும்  வரலாம். இருப்பினும் விருச்சிக ராசிக்காரர்கள் வெளிநாட்டில் அதிக செல்வம் சம்பாதிப்பார்கள். இந்த நேரத்தில் உங்கள் கணவன் / மனைவி அல்லது காதல் துணையுடன் மிக நெருக்கமான பிணைப்பை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். சிலர் ஆன்மீகத்திலும் நாட்டம் கொள்வார்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 தனுசு :

தனுசு ராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு  5வது வீட்டில் ராகு சஞ்சரிப்பார்.  இந்த சஞ்சாரம் உங்களுக்கு  ஊடகங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் மூலம் செல்வம், வெற்றி மற்றும் புகழை பெற்றுத் தரும்.  உங்கள் வருமானம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் உங்கள் அதிர்ஷ்டத்தில் திடீர் உயர்வு இருக்கும். இருப்பினும், தனுசு ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள் அல்லது கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், 2022-2023ல் ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும், செழிப்பும், மகிழ்ச்சியும் உங்கள் நிழலைப் போல உங்களைத் துரத்தி சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்கும்.     

கேது உங்கள் ராசிக்கு  11 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இந்த காலக் கட்டத்தில்  நண்பர்கள், சக நண்பர்கள், அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களின் தொழில் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் இருக்கும். உங்கள் கனன்வன் / மனைவி அல்லது காதல் துணை  அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் இருப்பார்கள் ஆனால் உங்களில் சிலர் தங்கள் கூட்டாளிகளை ஏமாற்றலாம். மொத்தத்தில் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 மகரம் :

மகர ராசி அன்பர்களே ! மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு  நான்காம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். ராகுவின் இந்த சஞ்சாரம் குடும்பத்தில் குழப்பத்தையும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தும். உங்கள் குடும்ப உறுப்ப்பினர்க்ளுக்கும்  உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும், ஆனால் வருமானம் எப்போதும் அதிகமாக இருக்கும். நீங்கள் புதிய வீட்டிற்கு மாறலாம் அல்லது சில புதிய சொத்துகளையும் வாங்கலாம். சிலர் புதிய வாகனமும் வாங்கலாம். இருப்பினும், உங்கள் திருமண வாழ்க்கையில் அமைதியின்மை இருக்கும் மற்றும் உங்கள் கணவன் / மனைவி அல்லது காதலருடன் சில மோதல்கள் இருக்கலாம்.

உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டில் கேதுவின்  சஞ்சாரம் உங்கள் தொழிலில் சில புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். ஆனால் பணிச்சுமை மற்றும் தொடர் பணிகள் உங்கள் உத்தியோகம் மற்றும் தொழிலில் மகிழ்ச்சியற்ற  நிலை ஏற்படுத்தும். உங்கள் வியாபாரத்தில் சில இழப்புகள் இருக்கலாம் ஆனால் உங்கள் செயல்பாடுகள்  இந்த நேரத்தில் சரியாக இருக்கும். சிலருக்கு வருமானமும் உயரும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 கும்பம் :

கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் உங்கள் படைப்பாற்றல் மற்றும் சிறப்புத் திறன்களால் வெற்றியையும் புகழையும் பெறுவார்கள். ஏப்ரல் 2022 முதல் ராகு உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் வருமானத்தில் வளர்ச்சி மற்றும் பதவி உயர்வு இருக்கும். இருப்பினும், அங்கீகாரம், வெற்றி மற்றும் செல்வத்தைப் பெற உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் கடின உழைப்பையும் கூடுதல் முயற்சியையும் எடுக்க வேண்டும். . இருப்பினும், சிலர் குறுகிய காலத்திற்கு எளிதான பணத்தை அனுபவிக்கலாம். சிலர் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகலாம்.

கேது உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆன்மீகம், யோகா மற்றும் தியானம் ஆகிய துறைகளில் வெற்றியைத் தரும்.  சர்வவல்லமையுள்ள சக்தி மற்றும் இறை ஆசீர்வாதங்கள் உங்களை ஆபத்து மற்றும் மோதல்களில் இருந்து காப்பாற்றும். உறவினர்கள், குருக்கள், சகாக்கள், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆதாயம் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2024 மீனம் :

மீன ராசி அன்பர்களே! ராகு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் செல்வம் பெருகும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். 2022-2023 இல் நீங்கள் சோம்பலுடனும் வசதி வாய்ப்புகளை குறித்து அதிக கவனம் கொண்ட போதும் பல வகையிலும் நீங்கள் ஆதாயங்களையும் வருமானத்தையும் பெறுவீர்கள்.  ஆனால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில மன அழுத்தங்கள்  ஏற்படும்.  உங்கள் குடும்பத்தில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் உங்கள் குடும்பத்தில் சில மகிழ்ச்சியான  கொண்டாட்டங்கள் இருக்கலாம். குடும்பத்தில் குழந்தை பிறப்பு மிகவும் சாத்தியம். மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி மற்றும்  வெற்றி காண்பார்கள். 2022-2023 இன் இந்த கட்டத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக நீங்கள் ஒரு வளமான வாழ்க்கையை நடத்துவீர்கள்.

கேது உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத லாபமும், எதிர்பாராத நஷ்டமும் உண்டாகும். அமானுஷ்யம், ஆன்மிகம், ஜோதிடம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் தங்கள் தொழிலில் புகழையும் வெற்றியையும் பெறுவார்கள். சிலர் மத மற்றும் ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறலாம். வெளியூர் பயணமும் பலன் தரும். உங்கள் வசதி, ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கு பணிச்சுமை இடையூறாக இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

banner

Leave a Reply

Submit Comment