AstroVed Menu
AstroVed
search
search
x

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்

dateJune 9, 2023

மூல முதற்கடவுளான ஆணை முகம் கொண்ட விநாயகப் பெருமானை எளிய முறையில் வணங்கினாலும் நமது வேண்டுதலை ஏற்று நமக்கு அருள்புரிவார். பெரிய பெரிய அளவில் பூஜை செய்து தான் அவரை மகிழ்விக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஒரு கைப்பிடி மண்ணில் கூட பிள்ளையாரை பிடித்து வணங்கி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆகம விதிப்படி மண், மரம், செம்பு முதலியவற்றால் மட்டுமே இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும்.

ஆனால் விநாயகரை மட்டும் மண், மாக்கல், கருங்கல், பளிங்குக்கல், பசுஞ்சாணம், மஞ்சள், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்னங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம்,வெண்ணெய், சந்தனம்,  சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் வடிவமைத்து வழிபடலாம்.

எந்தெந்த பிள்ளையார் பிடித்து வைத்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி கிட்டும்.

குங்குமப் பிள்ளையார்

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

சர்க்கரை பிள்ளையார்

சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட நீரிழிவு நோய் குணமாகும் வாய்ப்பு கிட்டும்.

கல் பிள்ளையார்

கல்லால் பிள்ளையாரை செய்து வழிபட்டால் வாழ்வில் எடுத்த காரியத்தில் வெற்றி தருவார்.

புற்று மண் பிள்ளையார்

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.

விவசாயம் செழிக்கும். வியாபாரத்தை பெருக வைப்பார்.

வெல்லப் பிள்ளையார்

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளங்கள்) கரையும். ஆரோக்கியம் கிட்டும்.

உப்பு பிள்ளையார்

உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் துரோகிகள், எதிரிகள் சூழ்ச்சிகளை  இந்த பிள்ளையார் வழிபாடு முறிக்கும்.

வெள்ளெருக்கு பிள்ளையார்

வெள்ளெருக்கு  வேரினால் செய்த  பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும். பில்லி, சூனியம் விலகும். புண்ணியம் பெருகும். செல்வச் சிறப்பு கிட்டும்.

வெண்ணெய் பிள்ளையார்

வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

மண் பிள்ளையார்

நமக்கு வருகிற துன்பங்களும் மண்ணோடு மண்ணாகிப் போகும்.

விபூதி பிள்ளையார்

விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

சந்தனப் பிள்ளையார்

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

பசுஞ்சாணப் பிள்ளையார்

பசுஞ்சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும். நோய்கள் நீங்கும். .

வாழைப்பழ பிள்ளையார்

வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.


banner

Leave a Reply