மாந்திரீகம் செய்வினை என்பது ஒருவரை அழிப்பதற்கு, அவரின் பொருளாதார நிலையை சீர்குலையச் செய்வதற்கு, உடல் ரீதியாக மன ரீதியாக துன்பப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை வசிய சக்தி ஆகும். தீய சக்திகளை வசியம் செய்வதற்காக செய்யப்படும் ஒரு வகை பூஜை முறையே மாந்திரீகம், செய்வினை, பில்லி, சூனியம் என்கிறோம். இதற்கு தேவைப்படுவது அல்லது பயன்படுத்தப் படுவது அந்த குறிப்பிட்ட நபரின் தலைமுடி, உடைகள், போட்டோ ஆகியவை ஆகும். இந்த முறையில் ஒரு நபரை வசியம் அல்லது மாந்திரீக சக்திகளை பயன்படுத்தி, தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்கள்.
செய்வினை இருப்பதை எப்படி கண்டறியவது?
ஜாதகத்தில் கோள்களின் நிலை மற்றும் கோட்சார கோள்களின் நிலை மூலம் இவற்றை அறிய இயலும். மேலும் ராகு கேதுவின் நிலை கொண்டும் அரிய இயலும். செய்வினை, பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கம் தடைபடும். கெட்ட கனவுகள் மற்றும் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போல், இருட்டான இடத்தில் மாட்டிக் கொள்வது போன்ற துர் சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் கனவில் வரும்.
பொருளாதார ரீதியாக திடீர் சரிவு, பண இழப்பு போன்றவை நிகழும், வேலை மற்றும் தொழிலில் திடீர் சரிவு ஏற்படும்
குடும்பத்தில் தொடர் துர் மரணங்கள் அல்லது தொடர் விபத்துகள் நிகழும்.
இறுக்கமான மன உணர்வு, மன அழுத்தம் துயரம் எப்பொழுதும் குழப்பம் போன்ற உணர்வு தொடர்ந்து இருக்கும்
தலைவலி, விசித்திரமான நடவடிக்கைகள், விரக்தியான மனநிலை, எப்போதும் பயம், குழப்பமான மனநிலை, எந்த காரியத்தை செய்தாலும் அதில் கெட்ட விளைவுகள் மட்டுமே ஏற்படும்.
* வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி, தற்கொலை எண்ணங்கள் குடும்பத்தை விட்டு போய் விடலாமா என்ற எண்ணம் தோன்றும்.
* குடும்பத்தில் குழப்பம், தொடர்ந்து சண்டை சச்சரவுகள் போன்றவை ஏற்படும்.
செய்வினையில் இருந்து எப்படி தப்புவது?
* ஒரு கருப்பு நூலில் குறிப்பிட்ட இடைவெளியில் ஏழு முடிச்சுகள் போட வேண்டும். பிறகு ஏழு மிளகாய் வற்றலை எடுத்து இந்த நூலை வைத்து ஏழு சுற்றுகள் கட்டி, அவற்றை கருப்பு துணி கொண்டு மூடி விட வேண்டும். இதை வீட்டிற்கு வெளியில் எடுத்துச் சென்று எரித்து விடலாம் அல்லது சில துளிகள் எண்ணெய் விட்டு, கருப்பு நூலில் இணைத்து வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ளலாம். இதை அமாவாசை அன்று இரவு நேரத்தில் தான் செய்ய வேண்டும்.
* சிறிது உப்பை எடுத்து, செய்வினையால் பாதிக்கப்பட்டவரின் தலையை ஏழு முறை, சுற்றி, அந்த உப்பை ஏதாவது நீர் நிலையில் கரைத்து விட வேண்டும்.
* துர்க்கை பூஜை, அர்ச்சனை வழிபாடு செய்யலாம்.
* ஜோதிடரை பார்த்து கிரக நிலைகளின் பாதக நிலை சரி செய்ய உரிய பரிகாரங்களை செய்து கொள்ளலாம்.
* சிறிய அளவிலான எட்டு வேல் மற்றும் இடம் புரி சங்கு எட்டு வாங்கி மஞ்சள் நீரில் அல்லது பன்னீரில் தூய்மை செய்து வரிசையாக அடுக்கி அதற்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் போன்றவற்றை அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து கந்தர் சஷ்டி கவசம் படித்துக் கொண்டு விபூதியால் அவற்றிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த நாட்களில் கருப்பு உடை அணிதல் கூடாது. பிறகு அதனை ஒரு தூய துணியில் கட்டி எட்டு திசைகளில் புதைத்து விட வேண்டும். புதைக்க இடம் இல்லாதவர்கள் துணியில் கட்டி வீட்டில் மேலே தொங்க விட வேண்டும்.
Leave a Reply