Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

சிம்மம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Simmam Rasi Palan 2020

April 9, 2020 | Total Views : 724
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி பொதுப்பலன்கள்

சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை எட்டும் காலம் இது. வேலை, தொழில் தொடர்பான உங்கள் எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக அமையும். உங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். தொலைதூரத் தொடர்புகள் புதிய நட்புகளை உருவாக்கக் கூடும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். எனினும், வெளியூர்ப் பயணங்களை இந்த மாதம் ஒத்தி வைப்பது நல்லது. உடல் ஆரோக்யத்திலும் கவனம் தேவை. பயணம் மேற்கொள்ளும் பொழுதும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவும். சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆயினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். எனவே இது உங்களுக்கு, நன்மையும், சவால்களும் கலந்த மாதமாக அமையும்.இந்த மாத சிம்ம ராசி பலனை மேலும் அறிய  கிளிக் செய்யவும்.

சிம்ம ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை

காதலுக்கு இது ஒரு முற்போக்கான காலமாகும். உங்கள் காதலும், உறவும் உண்மையானதாக இருக்கும் அன்பானவர்களுடன் நேரத்தை இனிமையாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு, புண்ணியத் தலங்களுக்கு சென்று வர திருமணம் நடக்கும்.

சிம்ம ராசி நிதி

நிதி நிலை சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் படிப்படியான முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். செய் தொழிலிலும் அதிக லாபங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் சேமிப்பைப் பெருக்குவதற்கு இது சரியான நேரம்.

சிம்ம ராசி வேலை

பணியில் இருப்பவர்களுக்கு சாதாரணமான மாதமாக இருக்கும். முடிந்தவரை உங்கள் அனைத்துப் பணிகளையும், நிலுவையில் வைக்காமல், விரைவாக செய்து முடிக்க முயலுங்கள். சிலர், புதிய தொழில் நுட்பங்களால், நல்ல அனுபவம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நட்புடன் பழகுவது நல்லது.

சிம்ம ராசி தொழில்

உங்கள் சுதந்திர இயல்பும், தைரியமான அணுகுமுறையும், உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதனால் உங்கள் முன்னேற்றம் சிறப்பாக அமையும். இப்பொழுது நீங்கள் எது போன்ற வேலையை எடுத்துச் செய்தாலும், அதில் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்புள்ளது.

சிம்ம ராசி தொழில் வல்லுநர்கள்

பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டும் வகையில் உங்கள் செயல்பாடு அமையும். அவ்வப்போது சில தாமதங்கள் ஏற்பட்டாலும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

சிம்ம ராசி ஆரோக்கியம்

சிம்ம ராசி அன்பர்களின் உடல்நிலை சுமாராக இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. உடலில் சிறு பிரச்சனை என்றாலும் அதை உடனே கவனித்து விடுவது நல்லது. உடல் பலவீனம், சக்தி குறைபாடு போன்றவை காரணமாக சிலர் மந்தமாக உணர்வார்கள்.

சிம்ம ராசி மாணவர்கள்

மாணவர்களைப் பொறுத்தவரையில், இது ஒரு சாதாரண காலமாக இருக்கும். உங்கள் படிப்பு சீராகச் செல்லும். நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதும், தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து விலகி இருப்பதும், இந்தக் காலகட்டத்தில் நன்மை தரும்.

banner

Leave a Reply

Submit Comment