நவகிரங்களில் அசுப கிரகங்களாக வர்ணிக்கப்படுபவர்கள் சனி மற்றும் செவ்வாய் பகவான் ஆவார். இருவரும் ஒருவர்கொருவர் பகை கிரகங்களாகும். இந்த இரு கிரகங்களும் எந்த ராசியில் இணைந்தாலும், ஒருவரையொருவர் பார்த்து கொண்டாலும், இருக்கும் ராசியும், பார்க்கும் ராசியும் பாதிப்படையும். இந்த வருடம் மார்ச் 7 முதல் மே 2 வரை சனி மற்றும் செவ்வாய் பகவான் தனுசு ராசியில் சேர்க்கை பெறுவதால், கிரக யுத்தம் ஏற்படுகிறது. இதனால், உள்நாட்டு கலவரங்கள், போர்கள், மத கலவரங்கள், பெரிய விபத்துக்கள், வாகன போக்குவரத்தில் பிரச்சினைகள், தடைகள், கட்டிடங்களில் சேதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக குற்றங்கள் அதிகரிக்கும். நீரினாலும், நெருப்பினாலும் பாதிப்பு உண்டாகும். பக்கத்து ஊர், அண்டை நாடுகளில் இருப்பவர்களுடன் பிரச்சினைகள் உருவாகும். தொழில் துறையில் இருப்பவர்களுக்கு லாபங்கள் குறைந்து, தொழிலில் முடக்கம் ஏற்படும்.
இந்த சனி, செவ்வாய் பகவான் சேர்க்கையால் பன்னிரண்டு ராசிகளுக்கும் எற்படும் பலன்கள் பற்றி காண்போம்.
மேஷம்:
எதிலும் வேகத்துடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, தற்போது எதிலும் பொறுமை மற்றும் நிதானத்துடன் செயல் படுவது நல்லது. அவசர முடிவுகளை தவிர்த்து சிந்தித்து செயல்படுங்கள். தந்தையுடன் கருத்து மோதல்களை தவிர்க்கவும். தொழில், உத்தியோகம் மற்றும் வியாபார விஷயங்களில் கவனமுடன் செயல்படுங்கள். சில நாட்களாக தனக்கு வழி காட்டியாகவும், குருவாகவும் செயல் படுபவர்களிடம் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
பரிகாரம்:
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் நன்மை தரும். ஸ்ரீ முருகபெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
ரிஷபம்:
எப்போதும் உற்சாகத்துடன் செயல்படும் ரிஷப அன்பர்களே, மற்றவர்களுடன் வீண் பிரச்சினகளை தவிர்க்கவும். வீட்டிலோ, அலுவலகத்திலோ வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. வாகனத்திற்கு தேவையான ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். உடல் நிலையில் கவனம் தேவை. அவசர முடிவுகளை தவிர்க்கவும். பொறுமை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம்:
வெண்மை மற்றும் பச்சை நிறம் நன்மை தரும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
மிதுனம்:
எதிலும் சிந்தித்து செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, கணவன் மனைவிக்குள் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனம் விட்டு பேசி கொள்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்ப பிரச்சினைகளில் அன்னியர் தலையீட்டை தவிர்க்கவும். வியாபாரத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளுடன் வீண் பிரச்சினைகளை தவிர்க்கவும். மன அமைதி பெற இறை வழிபாடு, யோகா, தியானம் அவசியம்.
பரிகாரம்:
பச்சை மற்றும் வெண்மை நிறம் நன்மை தரும். ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
கடகம்:
ஆளுமை திறன் மிக்க கடக ராசி அன்பர்களே, எதிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். போட்டியாளர்கள் தோல்வி அடைவார்கள். இருப்பினும் தூக்கமின்மை, வீண் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக உழியர்களுடன் கவனமுடன் இருப்பதும் நல்லது. உயரதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.
பரிகாரம்:
பால் வெண்மை மற்றும் மஞ்சள் நிறம் நன்மை தரும். ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
சிம்மம்:
அதிகார தோரணை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கவும். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூரவீக சொத்து பிரச்சினைகளை தற்போது தலையிடாமல் இருப்பது நல்லது. இஷ்ட தெய்வ, குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதால் நன்மை பெறலாம்.
பரிகாரம்:
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் நன்மை தரும். சிவபெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
கன்னி:
இனிய பேச்சால் அனைவரையும் கவரும் கன்னி ராசி அன்பர்களே, எதிலும் விழிப்புணர்வுடனும் கவனமுடனும் செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் கவனமுடன் இருந்தால் சிறு விபத்துகளையும் தவிர்க்கலாம். வாகனம் தொடர்பான ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். தாய் மற்றும் உறவினர்களிடம் கவனமாக இருப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்ச்சிகளை தள்ளிபோடுவது நல்லது.
பரிகாரம்:
பச்சை மற்றும் வெண்மை நிறம் நன்மை தரும். ஸ்ரீ நரசிம்ம பெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை பெறலாம்.
துலாம்:
கலையுணர்வு மிக்க துலா ராசி அன்பர்களே, அசட்டு தைரியத்தை கை விடுங்கள். அண்டை அயலார் மற்றும் சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக செல்வது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களில் கவனம் தேவை. சில நேரங்களில் உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். பெரியவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
வெண்மை மற்றும் பச்சை நிறம் நன்மை தரும். ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை பெறலாம்.
விருச்சிகம்:
பிடிவாத குணம் மிக்க விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப விசயங்களில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. பணம் கொடுக்கல், வாங்கலில் எச்சரிகையுடன் செயல்படுங்கள். பொறுமையாகவும், இனிமையாகவும் பேசினால் நன்மை பெறலாம். நீண்டநாளாக தொடர்ந்து இருக்கும் வழக்கு மற்றும் பிரச்சினைகளில் இருந்து விலகி இருங்கள்.
பரிகாரம்:
சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் நன்மை தரும். ஸ்ரீ முருகபெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை பெறலாம்.
தனுசு:
இலட்சியமும், கொள்கையும் மிக்க தனுசு ராசி அன்பர்களே, வீண் குழப்பங்களை தவிர்க்கவும், எதிலும் அவசர முடிவு எடுத்து செயல்பட வேண்டாம். குரோத மனப்பானமையை தவிர்க்கவும். கணவன், மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் தேவை.
பரிகாரம்:
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நன்மை தரும். ஸ்ரீ ராகவேந்தரை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
மகரம்:
உழைப்பால் உயரும் மகர ராசி அன்பர்களே, வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனம் தேவை. சுக போகம் பாதிக்கும். தூக்கமின்மை உண்டாகும். மறை முக எதிரிகளால் பிரச்சினை எற்படும். கணவன் மனைவிக்குள் சஞ்சலங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் யாரையும் நம்பாமல் கவனமாக செயல்படுவது நல்லது. விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றி பெறலாம்.
பரிகாரம்:
வெண்மை மற்றும் பச்சை நிறம் நன்மை தரும். ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
கும்பம்:
எச்சரிக்கையுணர்வுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, நண்பர்களிடம் கவனம் தேவை. பேராசையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் தடை வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை, சச்சரவு எற்பட வாய்ப்புள்ளதால் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்வின் முன்னேற்றமின்மை உண்டாகும். பொறுமையும், நிதானமும் இருந்தால் வெற்றி பெறலாம்.
பரிகாரம்:
வெண்மை மற்றும் பச்சை நிறம் நன்மை தரும். ஸ்ரீ காலபைரவரை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
மீனம்:
அழகை ஆராதிக்கும் மீன ராசி அன்பர்களே, உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனது உயரதிகாரிகளுடன் மற்றும் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கவனமாக இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொறுமை மற்றும் விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றி பெறலாம்.
பரிகாரம்:
மஞ்சள் மற்றும் வெண்மை நிறம் நன்மை தரும். ஸ்ரீ திருச்செந்தூர் முருகபெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.
Tags: Mars and Saturn Conjunction Mars Conjunct Saturn Mars Conjunct Saturn 2 April 2018 Mars Conjunct Saturn 2018 Mars conjunct Saturn Astrology Mars and Saturn Conjunction Mars Conjunct Saturn Mars Conjunct Saturn 2 April 2018 Mars Conjunct Saturn 2018 Mars conjunct Saturn Astrology Saturn–Mars Conjunction
Leave a Reply