AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

மீனம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Meenam

February 8, 2021 | Total Views : 567
Zoom In Zoom Out Print

மீனம் மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப் பலன்கள்:

மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் முதல் பாதி வரையில் சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிலையான நீடித்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காண்பீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது சிறப்பான மாதமாக இருக்கும். குடும்பம், காதல், மற்றும் பண விஷயங்களில் நீங்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். உங்கள் இளைய உடன் பிறந்த சகோதரர்களுடன் நல்லுறவு மேம்படும். ஆரோக்கியம் சார்ந்த சிறிய பிரச்சினைகள் எழும் வாய்ப்பு உள்ளது எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.

காதல் / குடும்பம்:

நீங்கள் வாழ்க்கையில் அன்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான நிலையை தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் உங்கள் நேரம் மற்றும் பணத்தை செலவு செய்வீர்கள். என்றாலும் சில சமயங்களில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : விஷ்ணு பூஜை 

நிதிநிலை:

இந்த மாதம் நீங்கள் பணவிஷயங்களில் சில ஆதாயங்களைப் பெறுவீர்கள். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சற்று ஆறுதலான விஷயமாக இருக்கும். உங்களில் சிலர் குடும்பத் தொழிலில் முதலீடுகளைச் செய்வீர்கள். ஆடை ஆபரணங்கள் மற்றும் வாகனங்களை வாங்குவீர்கள். என்றாலும் செலவுகளை நீங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பட்ஜெட் அமைத்து அதன்படி செலவுகளை மேற்கொள்ள வேண்டும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை 

வேலை:

இந்த மாதம் நீங்கள் பணியில் பிரகாசிப்பீர்கள். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். அவர்களுடன் இணைந்து குழுவாகப் பணியாற்றி சிறப்பாக செயலாற்றுவீர்கள். இதன் காரணமாக இந்த மாதத்தின் நடுப்பகுதியில் உங்கள் வேலையில் நீங்கள் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் நட்பு வட்டம் விரியும். பணியில் முன்னேற்றம் காண இது உங்களுக்கு உதவும். 

தொழில்:

உங்களிடம் இருக்கும் பணத்தை ஒரே தொழிலில் முதலீடு செய்யாதீர்கள். அதைப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் உங்கள் தொழில் விரிவடைவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர் என்றால் அதன் மூலம் லாபம் காண்பீர்கள். ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள். நீடித்த லாபம் இல்லை என்று வருத்தப்படுவதை தவிர்த்து உங்களுக்கு வரும் பணத்தை எதிர் கால நலன் கருதி சேமிப்பது நல்லது.

தொழில் வல்லுனர்கள் :

மீன ராசி தொழில் வல்லுனர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். தொழில் மாற்றம் செய்ய வேண்டி விருப்பம் இருப்பவர்கள் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து அதன் பிறகு முடிவுகளை எடுப்பது உசிதமாக இருக்கும். உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை நீங்கள் நன்கு அறிந்து நடந்து கொள்வதன் மூலம் உங்களால் சிறப்பாக செயலாற்ற இயலும்.  

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிய உடல் உபாதைகள் வந்தாலும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நலம். மாசு காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. முறையான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். 
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

மாணவர்களின் எதிர்காலம் நம்பிக்கை தரும் வகையிலும் பிரகாசமாகவும் இருக்கும். உங்கள் கனவுகளை நனவாக்கும் நம்பிக்கை உங்களிடம் இருக்கும். நீங்கள் தேர்வுகளை சிறப்பாக எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கல்வி உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்து இருந்தால் அது விரைவில் உங்களுக்கு கை கூடும். 

கல்வியில் மேன்மை அடைய : குரு பூஜை 

சுப நாட்கள் :  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 16, 21, 23, 24, 25, 26, 27, 28, 31
அசுப நாட்கள் :  7, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 22, 29, 30

banner

Leave a Reply

Submit Comment