Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கன்னி மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Kanni

February 17, 2020 | Total Views : 1,017
Zoom In Zoom Out Print

கன்னி ராசி பொதுப்பலன்கள் :

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பல நல்ல பலன்கள் உண்டாகும். தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் பல தாமதங்களை சந்தித்த பின்னர் தொழிலில் லாபங்கள் பெறக் காண்பார்கள். வேலை செய்யும் கன்னி ராசி அன்பர்கள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வார்கள். வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. நீங்கள் விடா முயற்சியுடன் செய்லபடுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியில் பலன்களை அடைவீர்கள். தாய் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிறு கஷ்டங்கள் இடையிடையே வந்து போகும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

கன்னி ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் காதல் உறவில் சிறிது மந்த நிலை காணப்படும். காதலர்களுக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து விலகும்.வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். திருமணமான தம்பதியர்களுக்கு இந்த மாதம் வாழ்க்கை சீரான போக்கில் செல்லும். கன்னி ராசியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

கன்னி ராசி நிதி :

இந்த மாதம் நிதி நிலைமை சுமாராக இருக்கும். தொழில் மூலமாக வருமானங்கள் பெருகும். அரசாங்கம் மூலமாக லாபம் அடைவீர்கள். உங்களுடைய வருமானம் உங்கள் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கன்னி ராசி வேலை :

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் ஏற்படும். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். என்றாலும் அதனை சமாளித்து உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பொறுமையாக செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

கன்னி ராசி தொழில் :

தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் தொழில் மூலம் இந்த மாதம் சாதாரணமான பலன்களைக் காண்பார்கள். என்றாலும் நீங்கள் தைரியமாகவும் சுதந்திர உணர்வுடனும் செயல்படுவீர்கள். உங்களின் இந்த குணாதிசயம் நீங்கள் தொழிலில் வெற்றி மற்றும் வளர்ச்சி காண உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். தாமதமான வெற்றி என்றாலும் நிலையான நீடித்த வெற்றி பெறுவீர்கள் என்பது உறுதி.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கன்னி ராசி தொழில் வல்லுநர் :

கன்னி ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தடைகள் மற்றும் தாமதங்களுக்கு இடையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் செயல் திறன் மேம்படும் மாதமாக இந்த மாதம் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் திறமைகள் பளிச்சிடும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள்.

கன்னி ராசி ஆரோக்கியம் :

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதற்கு முன் உடல் நல உபாதைகளை நீங்கள் சந்த்தித்து இருந்தாலும் அவையெல்லாம் இப்பொழுது குணமாகும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷம் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். இந்த காலகட்டத்தில் சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளியுங்கள். சந்தோஷமான மன நிலை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள்.

கன்னி ராசி மாணவர்கள் :

கன்னி ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். உங்கள் பரந்த மனப்பான்மை உங்களுடைய தனிப்பட்ட திறமைகளையும், உங்கள் நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல் திறனால் பெற்றோர்கள் மனமகிழ்ச்சியடைவார்கள்.சிறந்த அனுபவங்களை இந்த மாதத்தில் நீங்கள் பெறலாம்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

சுப நாட்கள் : 2,3,7,8,19,20,21,29,30,31

அசுப நாட்கள் : 1,9,10,22,23,27,28.

கன்னி ராசி பரிகாரம்:

ஸ்ரீ நரசிம்மர் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

புதன், சனி, குரு, ராகு, கேதுவுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்தல், ரத்த தானம் செய்தல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் செய்தல்.

banner

Leave a Reply

Submit Comment