Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

June Month (Matha) Rasi Palan 2019 in Tamil

April 19, 2019 | Total Views : 16,118
Zoom In Zoom Out Print

கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Kumbam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள் 

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே! இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். முடிக்கப்படாமல் இருக்கும் காரியங்களை முக்கியத்துவம் கொடுத்து செய்வீர்கள். அதில் நல்ல பலனையும் காண்பீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலையை தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள். நீங்கள் நிறுத்தி நிதானமாக காரியங்களை செய்து முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஆதரவாக நடந்து கொள்வீர்கள். இது அவர்களுக்கு திருப்தியை அளிக்கும். நீங்கள் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவீர்கள். அது உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும். தம்பதிகளுக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். நீங்கள் வாங்கும் புதிய பொருட்களால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். தம்பதிகள் குழந்தைப் பேறு பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். உங்களது பொருளாதார நிலை தேவைக்கேற்ப அனுகூலமாக இருக்கும். வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். அதனால் உங்கள் மனம் பாதிக்கப்படலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில் சிறிது கவனம் செலுத்துங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Mesham Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் செயல்கள் யாவையும் குறித்த நேரத்தில் செய்வதற்கு உகந்த நேரம். நீங்கள் சுறுசுறுப்பாக காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் முக்கியமான விஷயங்களில்  பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் ஒரு தனித்தன்மை இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். உங்கள் பெருந்தன்மையான செயல்கள் மூலம் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை பயன்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.  பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் விவேகமாக செயல்பட்டு உங்கள் செலவுகளை குறைப்பீர்கள். வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வீட்டுக்குத் தேவையான மரச்சாமான்களை வாங்குவீர்கள். சிறிய அளவிலான ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

கடகம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Kadagam Rasi Palan in Tamil 2019​​​​​​​

பொதுப்பலன்கள் 

இந்த மாதம் உங்களுக்கு சாதாரணமான பலன்கள் காணப்படும். உங்கள் சுய முன்னேற்றத்திற்காக நீங்கள் இடைவிடாது பாடுபடுவீர்கள்.மற்றவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பணம் கிடைப்பதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பு உள்ளது. நீங்கள் லட்சியத்துடன் செயல்படுவீர்கள். பொறுப்புகளை சுமப்பீர்கள். உங்கள் உறவினர்களுடன் இனிமையான உறவை பராமரிப்பீர்கள். பலர் கூடியிருக்கும் இடத்தில் நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருப்பீர்கள். நீங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் தகுதி வாய்ந்த நபராக விளங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வீர்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மகரம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Makara Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். உங்கள் நன்மதிப்பு அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை செழிப்பாக இருக்கும். இந்த மாதம் மேலும் நற்பலன்களைக் காண உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் நேர்மறை போக்கு சரியான முடிவுகளை எடுக்க உதவிகரமாக இருக்கும். புத்துணர்வு பெறுவதற்காக நீங்கள் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் சர்ச்சைகளை தவிர்த்தால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அண்டை அயலார் மற்றும் உறவினர்களிடம் கவனமாகப் பழகுங்கள். அவர்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது.  உங்கள் நெருங்கிய உறவினர்களில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அந்த பயணம் உங்கள் அனைவருக்கும் ஓர் நல்ல அனுபவமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். உங்கள் உடல்  எடை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதில் கவனமாக இருங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Mithunam Rasi Palan in Tamil 2019

பொதுப் பலன்கள் 

இந்த மாதம் நன்மை தீமை என இரண்டு பலன்களும் கலந்து காணப்படும். சமூக வட்டத்தில் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். நீங்கள் லௌகீக இன்பங்களை அனுபவிப்பீர்கள். நிதிநிலைமை சாதாரணமாக இருக்கும். அவசியமற்ற பொருட்களை வாங்குவதை  தவிர்ப்பது நல்லது. லாபம் அளிக்காத ஆபத்தான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவு எடுக்கவும். தகவல் சேகரிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் நல்ல பலன்களை அளிக்கும். நீங்கள் மற்றவர்களுடன் உரையாடும் போது குழப்பங்கள் ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் மனோதிடம் பாதிக்கப்படும். நீங்கள் சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். சந்தோஷமான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் மிதமாக இருக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Simha Rasi Palan in Tamil 2019

பொதுப் பலன்கள் 

இந்த மாதம் மிதமான பலன்களே காணப்படும்.  உங்கள் மீது ஏற்படும் குற்றச்சாட்டுகளை நீங்கள் களைவீர்கள். இதனால் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட அனைத்து செயல்களிலும் நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். சொத்துக்களை  வாங்கும் மற்றும் விற்கும் விஷயங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் என்பதால் அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். வாகனங்களை ஓட்டும் போது வேகக் கட்டுப்பாடுடன் கவனமாக ஓட்டுங்கள். அலுவலக விஷயமாக நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Thulam Rasi Palan in Tamil 2019

பொதுப் பலன்கள் 

இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மனதில்  அமைதி நிறைந்து காணப்படும். நீங்கள் பிறருக்கு உதவிகளைப் புரிவீர்கள். மற்றவர்கள் உங்களை மரியாதையுடன் நடத்துவார்கள். பணியில் மேலதிகாரிகளின் உதவி மற்றும் ஆதரவுகளைப் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எல்லா பக்கங்களிலிருந்தும் உங்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்லுறவு மேம்படும். நீங்கள் மேலும் நற்பலன்கள் காண உங்கள் போக்கை சிறிது மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களிடம் நம்பிக்கை நிறைந்து இருக்கும். சரியான முடிவுகளை எடுக்க அது உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலம் புத்துணர்வு பெறுவீர்கள். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மீனம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Meenam Rasi Palan in Tamil 2019

பொதுப் பலன்கள்

இந்த மாதம் நீங்கள் வாழ்வில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்களின் பொறுப்புணர்வு காரணமாக பணியில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய நட்பு வட்டாரங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். தொலை தூர பிரயாணங்களை மேற்கொள்வீர்கள்.  புதிய மனிதர்களின் தொடர்பு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சமூக அந்தஸ்து மற்றும் செல்வாக்கு உயரும். நீங்கள் உங்கள் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் வாழ்விற்கான திட்டங்களை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவு காணப்படும். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். அதிகம் யோசிக்காதீர்கள். அதன் மூலம் குழப்பம் மிஞ்சுமே தவிர தீர்வு கிடைக்காது. உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். மேலும் அதனை பேணிக் காத்துக்கொள்ளுங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

தனுசு ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Dhanu Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் சிறந்த பலன்கள் கிடைக்கும்  மாதமாக இருக்கும். சிறிய அளவிலான பிரச்சினைகளே ஏற்படும். அவைகளை நீங்கள் புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். பல்வேறு வகைகளில் உங்கள் நிதிநிலையை மேம்படுத்திக் கொள்ள இது உகந்த மாதம். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எந்த விஷயத்தையும் ஆழமாகப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் சரி வேலையின் போதும் சரி, நீங்கள் எதிர் கொள்ளும் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க உங்கள் பெருந்தன்மையான குணம் உதவிகரமாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் உங்கள் தரத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் சிறந்த முறையில் தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் தரத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் முயற்சிக்கும், திறமைக்கும் அங்கீகாரம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுறுசுறுப்பாகவும் ஆற்றலோடும் இருப்பீர்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

விருச்சிகம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Viruchigam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கும்.உங்கள் மனதில் இரண்டு  விதமான எண்ணங்களுக்கு இடம் அளிக்காதீர்கள். உங்கள் வழக்கமான காரியங்களை மேற்கொள்ளுங்கள். சூழ்நிலையை திறமையாக சமாளிக்க நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பண விஷயத்தில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசியுங்கள். பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் உங்கள் செயல்களை நிறுத்தி நிதானமாக செய்ய வேண்டும். தொழில் / பணியில் உயர் நிலையை அடைவீர்கள். கௌரவமான அந்தஸ்து பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறிய வகையிலான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

ரிஷபம் ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Rishabam Rasi Palan in Tamil 2019

பொதுப் பலன்கள்

இந்த மாதம் பல்வேறு ஆதாரங்களின் மூலம் உங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள உகந்த மாதம். உங்கள் கவனிப்பு திறன் அதிகரிக்கும். நீங்கள் சமூக வட்டாரத்தில் புதிய உறவுகளையும் நட்புகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். தொலை தூர இடங்களுக்கு பிரயாணம் செய்வீர்கள். புதிய மனிதர்களுடனான தொடர்புகள் உங்களுக்கு நன்மை அளிக்கும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை நீங்கள் புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். உங்கள் உரையாடல் திறன் மூலம் நீங்கள் சமூகத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் நீங்கள் விரும்பும் முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கன்னி ஜூன் மாத ராசி பலன் 2019 - June Matha Kanni Rasi Palan in Tamil 2019

பொதுப் பலன்கள் 

இந்த மாதம் உங்களுக்கு மத்திமமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் உணர்ச்சி வசப்பட நேரலாம். இதனால் குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். நீங்கள் புனித யாத்திரை மேற்கொண்டு உங்கள் ஆன்மீக ஆற்றலை வளர்த்துக் கொள்வீர்கள். பணியில் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். நீங்கள் குறுகிய பயணங்களை மேற்கொண்டு புதிய நபர்களை சந்திப்பீர்கள். பிறரிடம் கடன் வாங்காதீர்கள். அவசியம் தேவைப்பட்டால் குறைந்த தொகையை கடனாகப் பெறுங்கள். வாழ்வில் வெற்றி காண்பதற்கு நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் வாழ்க்கை சிறக்கும். வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

banner

Leave a Reply

Submit Comment
  • Naveenkumar.T
    Nalla velai kitaikanum
    June 5, 2019
    • Sales

      Namaste,

      Thank you for your query.

      Please find the link to talk to one of our senior Astrologer online for your current issues, they will analyze your birth chart and provide remedies as a solution to overcome from your problem.

      https://www.astroved.com/AstrologerScheduler.aspx?id=115&promo=avd0009




      Thanks,

      For your Health, Wealth, and Prosperity,

      With Kind Regards.
      Astroved Member Support.
      http://www.Astroved.com.

      June 13, 2019