Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Viruchigam Rasi Palan 2022

November 10, 2022 | Total Views : 440
Zoom In Zoom Out Print

விருச்சிகம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2022

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரித்து காணப்படும்.  உறவினர்களிடம் குறிப்பாக வாழ்க்கைத் துணையின் உறவினர்களிடம் பணம் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமான கருத்து வேறுபாடுகள்  ஏற்படும். நிதிநிலையைப் பொறுத்தவரை சாதகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சிறப்பாகப் பணியாற்றி பாராட்டு பெறுவீர்கள். தொழிலில் லாபம் காண நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும்.  தாயாருக்கு உடல் நலக் குறைவு ஏற்படலாம். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். 

காதல் / குடும்பம்:

 காதலர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். காதல் உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே தாம்பத்திய உறவில் நல்லிணக்கம் கூடும்.  அன்னியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மதிப்பும் மரியாதையும் கூடும். உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு நீடிக்கும். வாழ்க்கைத் துணையின் வீட்டாரிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே தேவையற்ற பேச்சு மற்றும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். 

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

உங்கள் நிதிநிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். அதன் பலனாக உங்கள் கையில் கையிருப்புப் பணம் தாராளமாக இருக்கும். இந்த மாதம் உங்கள் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். நீங்கள் நிதிநிலையை திறமையுடன் கையாளுவீர்கள். நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு வண்ணம் பூசும் பணிக்காக பணத்தை செலவு செய்வீர்கள். நீங்கள் நீண்ட தூர பயணத்திற்காகவும் பணத்தை செலவு செய்ய நேரும். பங்கு மற்றும் பொருள் வர்த்தக துறையில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. உங்கள் கடந்த கால பரஸ்பர சகாய நிதி முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள்.  

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

நீங்கள் அரசுத் துறையில் பணியாற்றுபவர் என்றால் இந்த மாதம் உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் தனியார் துறையில் பணிபுரிபவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு உத்தியோக உயர்வு ஏற்படும். ஆனால் பணியிடச் சூழல் உங்களுக்கு சற்று அனுகூலமற்றதாக இருக்கும்.  உத்தியோகம் செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களுடன் நல்லிணக்கம் காண நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தொழில்:

உங்களில் ஒரு சிலர் இந்த மாதம் புதிதாக தொழிலை ஆரம்பிக்கலாம். ஆனால் அதன் மூலம் லாபம் காண நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். கூட்டுத் தொழிலிலும் இதே நிலை தான்., நீங்கள் புதிதாக தொழிலில் சேர்ந்திருப்பவர் எனில்  தொழில் பற்றிய சிந்தனை சிறிது பதட்டநிலையை உருவாக்கும். வெளிநாட்டு தொடர்பான தங்க ஆபரணம் ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் நடத்துபவர்கள் சிறந்த லாபத்தை காண்பார்கள்.

தொழில் வல்லுனர்கள்:

தகவல் தொழில் நுட்பத்துறையில் உத்தியோகத்தில் உள்ளவர்களின் தன நிலையில் ஏற்றம் ஏற்படும். வயதில் மூத்த தொழில் வல்லுனர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அவர்களுடனான உறவில் அமைதியை தக்க வைத்துக் கொள்ள இயலும். வெளிநாடுகளில் தகவல் தொடர்பு சம்மந்தப்பட்ட வேலை தேடுபவர்களுக்கு  இந்த மாதம் சாதகமாக இருக்கும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் மன ஆரோக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் தூக்கமின்மை மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற உபாதைகளை சந்திக்க நேரலாம்.  ஆரோக்கிய உணவு உண்பதின் மூலமாக வயிறு சம்மந்தப்பட்ட அஜீரணக் கோளாறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் மன அமைதி பெற்று தூக்கமின்மை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதலை பெறுவார்கள். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் தங்கள் முயற்சியின் மூலம்  கல்வியில் வெற்றி பெறுவார்கள். பொறியியல் பட்டம் படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். வெளிநாட்டில் ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவிப் பணம் கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்:

2, 3, 4, 5, 6, 8, 13, 14, 15, 18, 19, 20, 21.

அசுப நாட்கள்:

7, 9, 10, 11, 12, 16, 17.

banner

Leave a Reply

Submit Comment