Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Thulam Rasi Palan 2020

November 10, 2020 | Total Views : 609
Zoom In Zoom Out Print

துலாம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மாற்றங்கள் ஏற்படும் மாதம் என்று கூற முடியும். வெளி உலகத் தொடர்புகளை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள விரும்பும் காலக்கட்டமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் வாழ்வில் யாருக்கு எந்த அளவிற்கு இடம் அளிக்கலாம் என நீங்கள் கண்டறிய குரு பகவான் உங்களுக்குத் துணையாக இருப்பார். உங்கள் நலம் விரும்பும் நல்லவர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். மற்றவர்களுடன் நடந்து கொள்ளும் விதம் பேசும் விதம் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து உங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் நீங்கள் நட்புணர்வு பாராட்டி அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள முயல்வீர்கள்.இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

துலாம் ராசி இளம் வயதினருக்கு காதல் கை கூடும் காலம் வர இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.  திருமணமான தம்பதிகளுக்கு இடையே அன்பு ஒன்றே உறவை வலுப்படுத்தும்.  நீங்கள் வெளிப்படுத்தும் அன்பு ஒன்றே உங்கள் அன்பை உங்கள் வாழ்க்கைத் துணை  மதிக்கப் போதுமானதாக இருக்கும். உங்கள் காதலை வெளிப்படுத்த நீங்கள் விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் வாங்கித் தர வேண்டிய அவசியம் இருக்காது. பொருள் ஈட்டுவதிலேயே உங்கள் கவனம் அதிகம் செல்லும் என்பதால் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம்.  

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை

நிதி:

துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பண வரவும் கையில் பணப் புழக்கமும் சிறப்பாக இருக்கும். உங்கள் தொழில் மூலம் வருமானமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு,  பணத்தை முதலீடு செய்வது குறித்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணை சில பண விஷயங்களில் உங்களை அவர் கருத்திற்கேற்ப செயல்பட நிர்பந்தப் படுத்தலாம். எனவே கூட்டுத் தொழிலில் இந்த மாதம் கவனம் தேவை.

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: குபேர பூஜை   

வேலை:

துலாம் ராசி அன்பர்கள் பணியிடத்தில் கவனமாகச் செயல்பட வேண்டிய காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும். குறிப்பாக உங்கள் பேச்சில் கவனம் தேவை. உங்கள் சொல் மற்றும் செயலால் நீங்கள் கட்டிக் காத்த உங்கள் நற்பெயருக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மீது பொறமை கொள்ளும் சக பணியாளர்கள் உங்களைக் குறித்த தவறான தகவலை உங்கள் உயர் அதிகாரிகளிடம் கூற வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பழக்க வழக்கங்களில் கவனமாக இருங்கள். சரியான நபர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள். தவறான நபர்களிடம் இருந்து விலகி இருங்கள். 

தொழில்:

கூட்டுத் தொழில் இந்த மாதம் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அளிக்காது. மேலும் தொழில் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தை விட வீண் விரயங்கள் அதிகமாக இருக்கும். மேலும் அலைச்சல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 

தொழில் வல்லுநர்கள்:

துலாம் ராசி தொழில் வல்லுனர்கள் தங்கள் திறமை மூலம் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள். நீங்கள் ஆர்வமுடன் பணியாற்றுவீர்கள். உங்கள் படைப்புத் திறன் அதிகரிக்கும். இவை யாவும் உங்களுக்கு பெயரும் புகழும் பெற்றுத் தருவது மட்டுமன்றி பிறர் உங்களை முன் மாதிரியாகக் கருதி உங்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவார்கள்.

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை   

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். சிறிய உடல் உபாதை என்றாலும் நீங்கள் மருத்துவர் ஆலோசனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும் உங்களுக்கு கவலை அளிக்கும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து உங்கள் ஆரோக்கியத்தை அன்பின் மூலம் மேம்படுத்திக் கொள்ள இயலும். அன்பை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.   

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை     

மாணவர்கள்:

துலாம் ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்து வந்த தடைகள் யாவும் விலகும். உங்கள் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும். நீங்கள் சந்தித்து வந்த தடைகள் யாவும் விலகும். சவாலான காலக் கட்டம் முடிந்து சாதகமான காலமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். நீங்கள் பள்ளி மாணவராக இருந்தாலும் சரி கல்லூரி மாணவராக இருந்தாலும் சரி ஆர்வமுடன் கல்வி பயில்வீர்கள்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை  

சுப தினங்கள்:  1, 2, 3, 4, 5, 6, 8, 14, 21, 22, 24, 25, 28, 29, 30, 31
அசுப தினங்கள்:  9, 10, 11, 12, 13 15, 16, 17, 18, 19, 20, 23, 26, 27

banner

Leave a Reply

Submit Comment