AstroVed Menu
AstroVed
search
search

துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Viruchigam Rasi Palan 2020

dateNovember 10, 2020

துலாம் டிசம்பர் மாத பொதுப்பலன்:

இந்த மாதம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெற முடியும். துடிப்புடன் காணப்படுவீர்கள். வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும்.  உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சிறந்த லாபமும் காண்பீர்கள். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். நீங்கள் பிறருடன் சுமுகமாக கலந்து பழக விரும்புவீர்கள். பழகும் விதம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற படிப்பினையையும் இந்த மாதம் நீங்கள் பெறுவீர்கள். உங்கள் தோற்றம் பொலிவு பெரும். உங்கள் செயல்கள், நடவடிக்கைகள் பிறரை உங்கள் பால் எளிதில் ஈர்க்கும் வகையில் இருக்கும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

விருச்சிக ராசி இளம் வயதினர் மனதில் இப்பொழுது காதல் அரும்பு மலரும். உங்கள் காதலில் நீங்கள் வரம்பு மீறாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்; இது உங்களின் எதிர் கால வாழ்க்கைக்கு நன்மை அளிக்கும்.  எனவே கவனமாக நடந்து கொள்ளவும். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும். நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். உங்களில் சிலர் உடன் பிறந்தவர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். இது உங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். 

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை

நிதி:

இந்த மாதம் உங்கள் நிதிநிலை ஓரளவு சாதகமாக இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். பணப் புழக்கம் சரளமாகவும் தாராளமாகவும் இருக்கும்.  உங்கள் குழந்தைகள் தங்களின் கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்காக உங்களிடம் பணம் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் நீங்கள் நடந்து கொள்ள சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்காக நீங்கள்  பணம் செலவு செய்ய இயலும். மேலும் அவர்களின் எதிர் கால நலன் கருதி பணத்தை சேமிக்க இயலும். 

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை   

வேலை:

பணி செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் செயல் திறன் கண்டு உயரதிகாரிகள் வியப்பார்கள். உங்கள் சக பணியாளர்கள் உங்களின் ஆலோசனையை நாடுவார்கள். பணியிடத்தில் கோபத்தை தவிர்க்க வேண்டும். பிறர் மனம் கோணாத வகையில் நடந்து கொள்ளுங்கள்.  வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். பிரச்சினை ஏற்படுத்துபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். இதன் மூலம் உங்கள் பணியிடத்தில் நீங்கள் சுமூகமாக பணியாற்ற இயலும்.

தொழில்:

மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் கூட்டுத் தொழில் நல்ல பலன்களை அளிக்கும். புதிய கூட்டாளி அல்லது புதிய கூட்டு ஒப்பந்தங்களை நீங்கள் இந்த மாதம் மேற்கொள்வது அல்லது அதைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் நீங்கள் சிறந்த நல்ல வாய்ப்புகளைப் பெற இயலும். தொழில் நிமித்தமான பயணங்கள் மூலமாகவும் நீங்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெற முடியும். 

தொழில் வல்லுநர்கள்:

தொழிலில் நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகத் திறமைகளை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்ள உங்கள் உயர் அதிகாரிகள் கூட உங்களிடம் நெருக்கமாகப் பழகுவார்கள். என்றாலும்  உயரதிகாரிகள், சக ஊழியர்கள் போன்றவர்களுடன் நீங்கள் ஓரளவு இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அளவுக்கு அதிகமாக நட்பு பாராட்ட வேண்டாம். இது, எதிர்காலத்தில், சில தவறான புரிதல்களுக்கும், வேலையில் சில பிரச்சனைகளுக்கும் வழிவகுப்பதற்கான சாத்தியம் உள்ளது.    

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை   

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு சளி, ஜுரம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான உடல் நலக் கோளாறாக இருந்தாலும், அதை உடனடியாகப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. பெற்றோர், உடன்பிறந்தவர்கள் போன்றவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.  இந்த மாதம் உங்களின் உதவி அவர்களுக்கு தேவைப்படும். இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது உங்கள் கடமையாகும். அதுபோலவே, தேவை ஏற்பட்டால், அவர்கள் உதவியும் உங்களுக்குக் கிடைக்கக்கூடும்; அல்லது உங்கள் துணைவர் உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளக் கூடும். எண்ணெய் அதிகமுள்ள அல்லது காரசாரமான உணவுகளைத் தவிர்த்து, சத்துள்ள உணவை உட்கொள்வது நல்லது.   

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை     

மாணவர்கள்:

விருச்சிக ராசி மாணவர்கள் இந்த மாதம் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் படிப்பு சம்பந்தமான பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். படிப்பில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் உடன் பிறப்புகளுடன் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் வீட்டிலோ, பள்ளி, கல்லூரியிலோ எந்த சச்சரவிலும் ஈடுபடாமல், நீங்கள், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.  

படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை  

சுப தினங்கள்: 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 13, 20, 23, 26, 27 

அசுப தினங்கள்: 6, 8, 14, 21, 22, 24, 25,15, 16, 17, 18, 19, 28, 29, 30, 31


banner

Leave a Reply