தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Dhanusu Rasi Palan 2020
தனுசு ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
தனுசு ராசி அன்பர்களுக்கு, இது பெருமளவு சாதகமான மாதம் எனலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்றாட நடவடிக்கைகளில் நீங்கள் காட்டும் தீவிரமான ஈடுபாடு, அனைவரையும் ஈர்த்து உங்களுடன் இணைந்து பணியாற்ற வைக்கும். நாகரீகமான பொருட்களில் உங்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படும். பொதுவாக, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு மிகச் சரியான நேரம் எனலாம். ஆனால், .தன வரவு சற்றே மந்தமாகக் காணப்படும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் வரலாம். காதல் வாழ்க்கையிலும் கவனம் தேவை. ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக, வெளியூர்ப் பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க
விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Viruchigam Rasi Palan 2020
விருச்சிகம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களுக்கு, இது ஒரு சராசரியான மாதமாக இருக்கும். பலன்கள் உங்களுக்கு அனுகூலமாக அமைய, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, தொழிலும் சரி, சவால்கள் நிறைந்து காணப்படும். வேலையில் உங்கள் கவனக்குறைவு காரணமாக, நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். இந்த நேரத்தில், குடும்பத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மனைவி மூலம் செலவுகள் ஏற்படலாம். செய்தொழில் லாபங்களில் முடக்கமும் ஏற்படலாம். எனினும், எல்லா விஷயங்களிலும் நீங்கள் உறுதியாக இருப்பது அவசியம். இதன் மூலம், உங்களுக்கு தைரியம் மற்றும் எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். இந்த நேரத்தில் சிலருக்குத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க
துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Thulam Rasi Palan 2020
துலாம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களே! இது உங்களுக்கு ஒரளவு சாதகமான மாதம் எனலாம். தன வரவு நன்றாக இருக்கும். தொழில் துறையில் அதிக உழைப்பும், கடின முயற்சியும் செய்து, உங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி, நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் தொழில், இடையிடையே, சிறிது மந்தமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில், உயர்பதவிகள் வர வாய்ப்பு அதிகம். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக் கூடும். தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையலாம். இளைய சகோதரனால் நன்மைகள் ஏற்படக்கூடும். தகப்பனாரின் உடல்நிலையிலும் முன்னேற்றம் காணப்படும். எனினும், கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இல்லாமல் போகலாம். காதல் விவகாரங்களிலும், கவனம் தேவை. உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க
கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Kanni Rasi Palan 2020
கன்னி ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
கன்னி ராசி அன்பர்களுக்கு, இது, சுமாரான பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். தொழில் சாதாரணமாக நடைபெறும். எனினும், செய்தொழிலில் லாபங்கள் தடைபடலாம். பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியிலும் நீங்கள் நல்ல பலன்களை அடையலாம். சிலருக்கு வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். வேலையில் இடமாற்றங்களும் ஏற்படலாம். சிலர் குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்கள் செல்லக்கூடும். உங்கள் உடல் நலனில் முன்னேற்றம் காணப்படும். தந்தையின் உடல் நலமும் நன்றாக இருக்கும். ஆனால் துணைவர், தாய் போன்றவர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் சில தடங்கல்கள் காணப்படலாம். சிறு கஷ்டங்களும் இடையிடையே வந்து போகக் கூடும். உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க
சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Simmam Rasi Palan 2020
சிம்மம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களுக்கு, இது பயனுள்ள மாதமாக விளங்கும். தொழில் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக அமையும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். தொழில் துறையில் நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். எனவே, கடினமாக உழைத்து, நீங்கள் அதிக உற்பத்தித் திறனை அடைய உரிய காலம் இது. ஆனால், சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். எனினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். பணிபுரிபவர்களும் இப்பொழுது பதவி உயர்வு போன்றவற்றைப் பெறும் வாய்ப்பு உள்ளது. உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். எனினும், ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்தவும். தாயின் உடல்நிலையிலும் அக்கறை தேவை. குடும்ப விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Kadagam Rasi Palan 2020
கடகம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே! பொதுவாக, இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் சாதாரண பலன்களே கிட்டக் கூடும். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். அது போன்ற தருணங்களில், கவனமாக நடந்து கொள்வது அவசியம். கடும் வேலைப் பளுவால், உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்குக் கூட, உங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். மேலும் மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். தொழில் சார்ந்த பணிகளிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களில் சிலர், சிறு பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். இதன் காரணமாகவும் செலவுகள் ஏற்படலாம். எனினும், தேவையான நேரங்களில், உங்களுடைய கூர்மையான அறிவாற்றல் உங்களுக்குக் கை கொடுக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களிலும் முன்னேற்றம் காணப்படும்.
August Matha Mithunam Rasi Palan 2020
மிதுனம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
மிதுன ராசி அன்பர்கள், இந்த மாதம், தங்கள் தொழிலிலும், நடவடிக்கைகளிலும் அதிகத் தெளிவு இல்லாமல் இருக்கக்கூடும். உங்களுக்குப் பலவித குழப்பங்களும் ஏற்படக் கூடும். நீங்கள் பலவீனத்தாலும் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் உடல்நிலையில் மட்டுமின்றி, மனநிலையிலும் கவனம் தேவைப்படலாம். பண விவகாரங்களில், மற்றவர்களிடம் மனக்கசப்பு ஏற்படும் சாத்தியமும் உள்ளது. குழந்தைகள் உடல் நிலையும் பாதிக்கப்படலாம் என்பதால், கவனம் தேவை. தற்போது உங்கள் செலவுகளும் அதிகரிக்கக் கூடும், குழந்தைகளாலும் பல செலவுகள் ஏற்படக்கூடும். எந்த காரணத்திற்காக இருந்தாலும் சரி, செலவுகளைக் கட்டுப்படுத்துவது, அவசியம். எதிரிகளாலும் தொல்லை ஏற்படலாம். எனினும், நீங்கள் இவை எல்லாவற்றையும் நன்றாகவே எதிர்கொண்டு, சமாளிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும்.
ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Rishabam Rasi Palan 2020
ரிஷபம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறந்து விளங்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். காரியத் தடைகள் ஏற்பட்டு விலகும். தன வரவு சுமாராக இருக்கும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். இதனால் நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். தந்தை வழி சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தந்தையின் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களுக்கும் இடமுண்டு. எனினும், உங்களின் சில செயல்களினால், மற்றவர்கள் உங்களுக்கு எதிரிகளாக மாறக்கூடும், எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு உடல் நல பாதிப்புகளும் வந்து விலகலாம். குடும்பத்திலும் சில நேரங்களில் மனநிம்மதி இல்லாமல் போகலாம். வெளியூர்ப் பயணங்களால் நீங்கள் அதிக செலவு செய்ய நேரலாம். சிலர் ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்ளக் கூடும்.
மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Mesham Rasi Palan 2020
மேஷம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சில நேரங்களில், உங்களுக்கு சிறிது மனக் குழப்பங்கள் ஏற்படலாம். சில பிரச்சினைகளாலும், சூழ்நிலைகளாலும் உங்கள் நடவடிக்கைகளில் தன்னம்பிக்கையும், தைரியமும் குறைந்து காணப்படலாம். எனவே, வேலையில் மிகுந்த கவனம் தேவை. ஆயினும், தொழில் துறையில் உங்கள் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும். பணவரவும் நன்றாக இருக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் கைகூடும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். ஜீவனம் நன்றாக நடக்கும். சிலருக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களில் சிலர் ஆன்மீகப் பயணங்களும் செல்லக் கூடும். குடும்பத்தில் மிகுந்த சந்தோஷம் நிலவும். குறிப்பாக, பெண்களால் அதிக மகிழ்ச்சி உண்டாகும். எனினும், சகோதரர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Rishabam Rasi Palan 2020
ரிஷபம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறந்து விளங்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். காரியத் தடைகள் ஏற்பட்டு விலகும். தன வரவு சுமாராக இருக்கும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். இதனால் நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். தந்தை வழி சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தந்தையின் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களுக்கும் இடமுண்டு. எனினும், உங்களின் சில செயல்களினால், மற்றவர்கள் உங்களுக்கு எதிரிகளாக மாறக்கூடும், எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு உடல் நல பாதிப்புகளும் வந்து விலகலாம். குடும்பத்திலும் சில நேரங்களில் மனநிம்மதி இல்லாமல் போகலாம். வெளியூர்ப் பயணங்களால் நீங்கள் அதிக செலவு செய்ய நேரலாம். சிலர் ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்ளக் கூடும்.
மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Mesham Rasi Palan 2020
மேஷம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சில நேரங்களில், உங்களுக்கு சிறிது மனக் குழப்பங்கள் ஏற்படலாம். சில பிரச்சினைகளாலும், சூழ்நிலைகளாலும் உங்கள் நடவடிக்கைகளில் தன்னம்பிக்கையும், தைரியமும் குறைந்து காணப்படலாம். எனவே, வேலையில் மிகுந்த கவனம் தேவை. ஆயினும், தொழில் துறையில் உங்கள் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும். பணவரவும் நன்றாக இருக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் கைகூடும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். ஜீவனம் நன்றாக நடக்கும். சிலருக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களில் சிலர் ஆன்மீகப் பயணங்களும் செல்லக் கூடும். குடும்பத்தில் மிகுந்த சந்தோஷம் நிலவும். குறிப்பாக, பெண்களால் அதிக மகிழ்ச்சி உண்டாகும்.
Leave a Reply