AstroVed Menu
AstroVed
search
search

August Matha Meenam Rasi Palan 2020

dateJuly 9, 2020

மீனம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:

மீன ராசி அன்பர்களுக்கு நன்மைகள் விளையும் மாதமாக இது இருக்கும். உங்கள் புகழ், கெளரவம் உயர்ந்து காணப்படும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும், நீங்கள் தைரியமாகச் செயல் படுவீர்கள். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கும் இது சரியான நேரம் ஆகும். உங்கள் திறமையால் தொழிலில் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். பணியில் உள்ளவர்களுக்கு, ஊதிய உயர்வு திருப்தி தரும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்களுடன், உறவு வலுப்படும். உங்கள் உடல்நிலையும் சாதாரணமாக இருக்கும். எனினும், உணவுக் கட்டுப்பாட்டிற்கு உரிய முக்கியத்துவம் அளியுங்கள். இப்பொழுது சிலர், குறுகிய காலப் பயணங்கள் செல்ல நேரலாம். தாயின் உடல் நிலையில் கவனம் தேவைப் படலாம். சிலருக்கு அடிக்கடி மனம் சஞ்சலப்படவும் வாய்ப்புள்ளது.  ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.       

 

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் உறவுகளில் கவனமாக இருப்பது நல்லது. காதலுக்குத் தடைகளும் ஏற்படலாம். கணவன், மனைவிக்குள் சிறு பிரச்சனைகள் வந்து விலகலாம். இப்பொழுது நீங்கள், திருமணத்திற்கு ஏற்ற வரன்களைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். 

நிதி:

உங்கள் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். அனால், நிதி தொடர்பான விஷயங்களில் நீங்கள் படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பணத்தைச் சேமிப்பதற்கான உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும், இப்பொழுது எளிதாக வெற்றி பெறும்.  

வேலை:

பணியில் இருப்பவர்களுக்குப் பல வகையிலும், இது முன்னேற்றமான காலமாக இருக்கும். வேலை வளர்ச்சி அடையும். அலுவலகம், பணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை முறையாக நடத்துவதும், அரசாங்கக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தி விடுவதும் நல்ல பலன் தரும். 

தொழில்:

வியாபாரத்தில் எவ்வித முடிவையும் எடுப்பதற்கு முன், ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்துச் செயலாற்றுவது நல்லது. புதிய தொழிலில்  கூட்டு வர்த்தகம் லாபத்தைக் கொடுக்கும். சில நேரங்களில், வெற்றி உங்களுக்குத் தாமதமாகக் கிடைக்கலாம். ஆனால் முன்னேற்றங்கள் கண்டிப்பாக உங்களை வந்தடையும். 

தொழில் வல்லுநர்கள்:

இந்த நேரத்தில், மீன ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களும் உங்களுக்குக் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் உங்கள் முயற்சிகளைத் தொடர்வது, உங்கள் திறமைகளை நன்கு வெளிப்படுத்தி, சிறப்பாகச் செயலாற்ற உதவும். 

ஆரோக்கியம்:

அதிக வேலை காரணமாக, உங்கள் உடல் நலனை நன்கு பராமரிப்பதற்கு,  நீங்கள் உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போகலாம். சத்தான உணவை உட்கொள்வது, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவை மூலம், நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெறலாம். 

மாணவர்கள்:

மாணவர்களுக்கு இந்த மாதம் சுமாராகவே இருக்கக் கூடும். சில நேரங்களில், அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை, உங்களை படிப்பில் கேளிக்கையாக இருக்கத் தூண்டலாம். இது கல்வியில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனால் மனமுடைந்து போகாமல், தொடர்ந்து தீவிரமாகப் படித்தால், நல்ல பலன் கிடைக்கும். 

சுப தினங்கள் : 3,4,18,19,26,27,30,31   
அசுப தினங்கள் : 5,6,7,20,21,24,25 

பரிகாரம்:

  • திருச்செந்தூர் முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
  • மீன்களுக்கு உணவு இடுதல். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல்.

banner

Leave a Reply