Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

April Month (Matha) Rasi Palan 2020 in Tamil - ஏப்ரல் மாத ராசி பலன் 2020

March 11, 2020 | Total Views : 1,230
Zoom In Zoom Out Print

கும்பம் பொதுப்பலன்கள் :

இந்த மாதம்  சிறுது கடினமான மாதமாகும். தொழில் துறையில் கவனம் தேவை. நிதி மற்றும் தொழில்துறை தொடர்பான நடவடிக்கைகள் கும்ப  ராசிக்காரர்களுக்கு சுமாராகத்தான் இருக்கும். தொலை தூரங்களிலிருந்து உங்களுக்கு வரவேற்பு அழைப்புகள் வரும். இதனால் நீண்ட பயணங்களை நீங்கள் மேற்கொள்ளுவீர்கள். நீங்கள் புனித யாத்திரை செல்ல நேரிடலாம். உங்கள் வருவாய், அதிக செலவுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும். பணம் போட்டு புதிய தொழில்கள் தொடங்குவீர்கள்.  உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். பிரயாணங்களில் அதிக கவனம் தேவை. உங்களுடைய கவனமற்ற எண்ணங்கள் காரணமாக, சில சமயங்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் ஏற்படாமல் போகலாம். கவனமாக இருங்கள்.

 

 

மேஷம் பொதுபலன்கள் :

இந்த மாதம் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் நல்ல சந்தோஷம் நிலவும். பணவரவு மிகச்சிறப்பாக காணப்படும். சகோதரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் சிறிது மனக்குழப்பங்கள் ஏற்ப்படலாம். தாய் உங்களிடம் பாசமாக இருப்பர்கள். வேலை உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பெண்களால் லாபம் உண்டாகும். தொழில் துறையில் தடங்கல்களுக்கு பின் முன்னேற்றம் ஏற்படும். பக்திமார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கோவில் தரிசனத்திற்காக வெளியூர் செல்ல நேரிடும். ஜீவனம் நன்றாக இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

கடகம் பொதுப்பலன்கள் :

இந்த மாதம் பல்வேறு பணிகள் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலையில் கவனமாக நடந்து கொள்ளவும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா  செயல்களிலும் சாதாரண பலன்களே கிட்டும்.  உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.  பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஆனாலும் உங்களால் அவற்றைச் சிறந்த முறையில் கையாள முடியும். தேவையான நேரங்களில் உங்களுடைய கூர்மையான அறிவாற்றல் உங்களுக்கு கை கொடுக்கும். குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் அணுகுமுறையால் சுமுகமாக்கிவிடுவீர்கள். கடுமையான வேலைப்பளுவால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கலாம். 

மகரம் பொதுப்பலன்கள் :

இந்த மாதம் சிலருக்கு தெய்வீக வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு கவலை உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.  அடிக்கடி தலைவலியும், மன குழப்பங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் கவனம் தேவை. உடல்நிலையில் சிறுபாதிப்புகள் உண்டாகும்.  இளையசகோதரர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படலாம். தாய் வழி பாசம் உண்டாகும். நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். காதல் மலரும். குழந்தைகளும்  நன்மை அடைவார்கள். தெய்வீகத்தில் நாட்டம் அதிகமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிக்கும்.

மிதுனம் ராசி பொதுப்பலன்கள் : 

இந்த மாதம்  உங்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் அக்கறை தேவை. பலவிதமான குழப்பங்கள் ஏற்ப்படும். எந்த ஒரு தொழிலிலும், செயலிலும் தெளிவு இல்லாமல் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மற்றவர்களிடம் மனகசப்பு ஏற்ப்படலாம். இருந்தாலும் இதை எல்லாம் சமாளிப்பீர்கள். குழந்தைகளினால் செலவுகள் அதிகரிக்கும்.   உடல் நலனில் சிறப்பு கவனம் தேவை. எதிரிகளால் தொல்லை ஏற்படும். நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படலாம். தற்போது செலவுகள் அதிகரிக்கக்கூடும், எனவே கட்டுப்பாடு அவசியம். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும். ஆரோக்கியம் படிப்படியாக சீரடையும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் பயணங்கள் போக வாய்ப்பு ஏற்படும். 

சிம்மம் பொதுப்பலன்கள் :

இந்த மாதத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும். பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். தொழில் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக  அமையும்.  வெளியூர் பயணங்கள் இந்த மாதம் தள்ளிபோடுவது நல்லது. தொலைதூரத் தொடர்புகள் புதிய நட்புகளை உருவாக்கக் கூடும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆயினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை அடையும் காலம் இது. குடும்ப விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. 

துலாம்  பொதுப்பலன்கள் :

இந்த மாதம் மிதமான பலன்களை தரும். தன வரவு நன்றாக இருக்கும். தொழில் துறையில் அதிகமான உழைப்பும், கடுமையான முயற்சியுடனும்   லாபங்களை பெறுவீர்கள். இருந்தாலும் சிறுது மந்தமாகவும் காணப்படும். இளைய சகோதரனால் நன்மைகள் ஏற்படும். தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையும். காதல் விவகாரங்களில் இந்த மாதம் கவனமாக இருக்கவேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர்பதவிகள் வர வாய்ப்பு அதிகம். கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தகப்பனாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வகையில் லாபம் உண்டாகும்.

மீனம் பொதுப்பலன்கள் :

இந்த மாதம் உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். உணவு கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளியுங்கள். தைரியசாலிகளாக இருப்பீர்கள். தாயின் உடல் நிலையில் கவனமாக இருக்கவும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா  செயல்களிலும் சாதாரண பலன்களே கிட்டும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான நேரம். ஊதிய உயர்வு உங்களுக்குத் திருப்தியை அளிக்கும். விருந்துகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்யலாம். ஆன்மீக குருமார்களையும் சந்திக்கலாம் இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள்.  

தனுசு பொதுப்பலன்கள் :

இந்த மாதம் சுமாரான மாதமாகும். உங்கள் விருப்பப்படி ஒரு சொத்தை வாங்குவீர்கள். அன்றாட நடவடிக்கைகளில் உங்களுடைய  தீவிரமான ஈடுபாடு, எல்லோரையும் ஈர்த்து உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு மிகச் சரியான நேரம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். வேலையில் உங்கள் மதிப்பை நிரூபித்து நீங்கள் எதிர்பார்த்த சாதகமான முடிவுகளையும் பெறுவீர்கள்.  உங்களுடைய உற்பத்தித்திறன், நீங்கள் விரும்பிய உயர்ந்த நிலை அல்லது அந்தஸ்தை உங்களுக்கு பெற்றுத் தரும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாகரீகமான பொருட்களில் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

விருச்சிகம் பொதுப்பலன்கள் :

இந்த மாதம் பலன்கள் உங்களுக்கு அனுகூலமாக அமைய ஒவ்வொரு  சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.  உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் தொழிலிலும் சவால்கள் நிறைந்து காணப்படும்.  வேலையில் உங்கள் கவனக்குறைவு காரணமாக நீங்கள் சில வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். எல்லா விஷயங்களிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது  அமைதியான முறையில்  நடந்துகொள்ள வேண்டும்.  சமூக வாழ்வில் ஏற்படும்  மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பலத்தை அதிகரிக்கும்.  உங்கள் சக ஊழியர்கள் உங்கள் நம்பகத்தன்மையை சந்தேகிக்கலாம்.  உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் முறையான கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தலாம்.

ரிஷபம் பொதுப்பலன்கள் :

இந்த மாதம்  நீங்கள் எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.  மற்றவர்கள் உங்கள் செயல்களினால், உங்களுக்கு எதிரிகளாவர்கள். தன வரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மனநிம்மதி இன்மை ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஆன்மீக சுற்றுபயணம் செல்ல நேரிடும். குழந்தைகள் நன்றாக படிப்பதால், அதனால் ஆனந்தம் அடைவீர்கள். உங்கள் குழந்தைகளின் செயல்கள் பலரால் பாராட்டப்படும். தாய் வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் செலவு அதிகமாக செய்வீர்கள்.

கன்னி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் சுமாரான பலன்கள் தான் நடைபெறும். உடல் நலனில் அக்கறை தேவை. பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியில் பலன்களை அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்கும். மனைவியின் உடல் நிலையில் கவனம் தேவை.  சிறுது கஷ்டங்கள் இடையிடையே வந்து போகும். தந்தையின் உடல் நலம் நலமாக இருக்கும்.  தொழில் சாதாரணமாக நடை பெறும். செய்யும் தொழிலில் லாபங்கள் தடைபடும். குடும்பத்துடன்  வெளியூர் பயணங்கள் ஏற்படும். மனைவியின் உடல் நிலையில் கவனம் தேவை. 

banner

Leave a Reply

Submit Comment