Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கன்னி ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Kanni

March 11, 2020 | Total Views : 989
Zoom In Zoom Out Print

கன்னி ராசி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் சுமாரான பலன்கள் தான் நடைபெறும். உடல் நலனில் அக்கறை தேவை. பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியில் பலன்களை அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்கும். மனைவியின் உடல் நிலையில் கவனம் தேவை. சிறுது கஷ்டங்கள் இடையிடையே வந்து போகும். தந்தையின் உடல் நலம் நலமாக இருக்கும். தொழில் சாதாரணமாக நடை பெறும். செய்யும் தொழிலில் லாபங்கள் தடைபடும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் ஏற்படும். மனைவியின் உடல் நிலையில் கவனம் தேவை.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

கன்னி ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

இந்த மாதம் காதலர்கள் சிறுது மந்தமாக காணப்படுவார்கள். காதலர்களுக்குள் மனகசப்பு ஏற்படலாம். ஒரு சில காதல் திருமணத்தில் முடிய வாய்ப்பு உண்டாகும். மனைவியின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கவேண்டும். திடீர் வெளியூர் பிரயாணங்கள் ஏற்படலாம்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கன்னி ராசி நிதி :

இந்த மாதம் நிதி நிலைமை நன்றாக இருக்கும். தந்தை மூலமாக வருமானங்கள் பெருகும். அரசாங்கம் மூலமாக லாபம் அடைவீர்கள். உங்களுடைய வருமானம் உங்கள் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும்.

கன்னி ராசி வேலை :

இந்த மாதம் நீங்கள் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் பணி புரிவீர்கள். உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இருந்தாலும் ஒரு சிலருக்கு வேலை இழக்கக் கூடிய நிலை உருவாகலாம். ஆகவே, சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பொறுமையாக செயல்படுங்கள்.

கன்னி ராசி தொழில் :

இந்த மாதம் உங்கள் தொழில் வகையில் சில மனசஞ்சலங்கள் ஏற்படும். எண்ணங்கள் ஒரே சீராக செயல்படாது. முன்னேற்றம் தாமதமாக அமையும். உங்கள் தைரியமான அணுகுமுறையும் சுதந்திரமான இயல்பும் உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். உங்களுக்கு வெற்றி தாமதமாக கிடைக்கலாம்..

கன்னி ராசி தொழில் வல்லுநர் :

இந்த மாதம் உங்களுக்கு சாதாரண மாதமாக இருக்கும். உங்களுடைய செயல்திறன் மூலம் உங்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டும் வகையில் அதிக முயற்சி எடுப்பீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் அதிக தன்னம்பிக்கையை பெறுவீர்கள்.

கன்னி ராசி ஆரோக்கியம் :

இந்த மாதத்தில், உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்தால், நீங்கள் மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க இயலும். இந்தக் காலகட்டத்தில் தியானம் மற்றும் சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

கன்னி ராசி மாணவர்கள் :

இந்த மாதம் படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் இது சரியான நேரம். உங்கள் பரந்த மனப்பான்மை உங்களுடைய தனிப்பட்ட திறமைகளையும், உங்கள் நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல்திறனால் பெற்றோர்கள் மன மகிழ்ச்சியடைவார்கள்.

உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.

சுப நாட்கள் : 3,4,16,17,26,27,30

அசுப நாட்கள் : 5,6,18,19,20,23,24,25.

banner

Leave a Reply

Submit Comment