Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

மேஷம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Mesham Rasi Palan 2021

March 4, 2021 | Total Views : 459
Zoom In Zoom Out Print

மேஷம் ராசி ஏப்ரல் 2021 பொதுப்பலன் :

மேஷ ராசி அன்பர்களே ! இந்த மாதம் நீங்கள்  அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சில் மிடுக்கு இருக்கும். அதன் மூலம் நீங்கள் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சில பிரச்சினைகளை நீங்கள் எதிர் கொள்ள நேரும் என்றாலும் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் சிறந்த பணிக்கான அங்கீகாரமும் பெறுவீர்கள். உத்தியோகப் பாதுகாப்பையும் நீங்கள் உணர்வீர்கள். கடின உழைப்பின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள் 

காதல் / குடும்ப உறவு :

அன்பு மற்றும் அன்னியோன்யம் காரணமாக குடும்பத்தில் குதூகலம் இருக்கும். சமரசமான பேச்சு வார்த்தைகள் சுமுகமான நல்லுறவை வளர்க்கும்.  வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் செலவு செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் நட்புறவுடன் பழகுவீர்கள். உங்கள் நடத்தை எதிர் பாலினத்தவரைக் கவரும் வகையில் அமைந்திருக்கும். 

உங்கள் திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெற : லக்ஷ்மி பூஜை 

நிதிநிலை :.

உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் நிதிநிலையை சிறந்த முறையில் நிர்வகிப்பீர்கள். உத்தியோகம் அல்லது தொழில் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். பண விஷயத்தில் மிகச் சிறந்த முக்கியமான மாற்றங்களைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு மூலம் பணம் கிடைக்கப் பெறுவார்கள்.  

நிதிநிலையில் நீங்கம் மேன்மை பெற : குபேரன் பூஜை 

வேலை :

உங்கள் உத்தியோகத்தின் மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள்  மேலதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தின் மூலம் கணிசமான வருமானம் பெறுவீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பிறரிடம் பேசும் போது  உங்கள் பேச்சில் கவனம் தேவை.

தொழில்:

நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர் என்றால்  இந்த மாதம் உங்கள் தொழில் வெற்றிகரமாக நடக்கும். என்ற போதிலும் தொழில் குறித்த எந்தவொரு நடவடிக்கையிலும்  நீங்கள் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கிணங்க  நீங்கள் பொறுமையுடன் செயலாற்ற  வேண்டும். உங்கள் பொறுமையை இழப்பதன் மூலம் தொழிலில் பாதிப்புகள் ஏற்படும்.  வெளிநாடு  தொடர்புடைய  தொழில் வாய்புகள் உங்களை நாடி வரும் என்றாலும் அதிலும் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டும்.  

தொழில் வல்லுனர்கள் :

மேஷ ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் கடுமையான உழைப்பை மேற்கொள்வார்கள். உழைப்பு உயர்வு தரும் என்ற நம்பிக்கை  உங்களின் தன்னம்பிக்கையாகி  உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும்.  கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் பெறுவீர்கள் உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். தொழிலில் பெயரும் புகழும் பெறுவீர்கள். தொழில் தொடர்பான  அலைச்சல்கள் இருந்தாலும் அவை  உங்களுக்கு நன்மை அளிக்கும். 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் முழுவதும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான பாதிப்புகள் அல்லது நோய்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் உங்கள் உணவில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.  கண்கள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே கவனம் தேவை.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரக பூஜை 

மாணவர்கள் :

கல்வி பயிலும் மேஷ ராசி மாணவர்களுக்கு இது மிகவும் சிறந்த மாதமாக இருக்கும். அவர்கள் தைரியமாகச் செயல்படுவார்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.  வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி காண்பார்கள். கல்விக்கான உதவித் தொகை வேண்டி விண்ணப்பிப்பவர்கள் இப்பொழுது தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள். 

கல்வியில் நீங்கள் மேன்மை பெற : ஹனுமான் பூஜை 

சுப நாட்கள் :  1, 2, 3, 4, 7, 8, 9, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 30.
அசுப நாட்கள் :   5, 6, 10, 11, 12, 13, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 31.

banner

Leave a Reply

Submit Comment