AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Rishabam Rasi Palan 2021

dateMarch 4, 2021

ரிஷபம் ராசி ஏப்ரல் 2021 பொதுப்பலன்:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம்   நீங்கள் சிறந்த பல நல்ல பலன்களைக் காண்பீர்கள். குடும்பம், வேலை,  தொழில், என அனைத்து அம்சங்களிலும் நீங்கள் சிறந்த வளர்ச்சியைக் காண்பீர்கள். வேலை மற்றும் தொழிலில் நீங்கள் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.  வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் அதற்கான நல்ல பலன்கள் கிட்டும். புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வீர்கள்.  தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கருத்து ஒருமித்து வாழ்க்கை நடத்துவார்கள். நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். இளம் வயது ரிஷப ராசி அன்பர்கள் தங்கள் காதல் உறவு சிறப்பாக இருக்கக் காண்பார்கள். 

திருமண உறவில் நல்லுறவு பேண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பண வரவு அதிகரிக்கும். பணப் புழக்கமும் சரளமாக இருக்கும். பொதுவாக உங்கள் நிதிநிலையில் ஒரு மேம்பட்ட நிலை இருக்கும். உங்கள் சேமிப்பின் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். குறிப்பாக  உங்கள் முதலீடுகளின் மூலம் வருமானம் பெறுவீர்கள். பழைய கடன்கள் இருந்தால் அவற்றை அடைத்து முடிப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் புதிய கடன்கள் எதுவும் வாங்குவது சிறப்பல்ல. பண விஷயங்கள் குறித்த அவசர முடிவுகள் எதையும் இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். 

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை 

வேலை :

இந்த மாதம் நீங்கள் ஆற்றலுடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள்.  பணியிடத்தில் மேலதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகளிடம் தெரிவிப்பீர்கள்.  நீங்கள் கடினமாக உழைப்பதன் மூலமும் சக பணியாளர்களிடம் நல்லுறவு பேணுவதன் மூலமும் பணியிடத்தில் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் உங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவீர்கள். 

தொழில் :

கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆபத்தான வகையில் முயற்சிகளை எடுப்பதை தவிர்க்க  இந்த மாதம் தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் நீங்கள் அமைதியாக முடிவு எடுக்க வேண்டும். புதிய கூட்டுத் தொழில் செய்ய விரும்புபவர்கள் புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவார்கள்.  தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். கண் மூடித் தனமாக யாரையும் நம்பிப் பின் ஏமாற்றம் அடையாதீர்கள். 

தொழில் வல்லுனர்கள் :

ரிஷப ராசி தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். குறிப்பாக படைப்புத் துறை மற்றும் அரசுத் துறையில் பணி புரிபவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் அதிர்ஷ்டம் காரணமாக திடீர் ஆதாயங்களைப் பெறுவீர்கள். எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் பொறுமையுடன், ஒன்றிற்கு இரண்டு முறை  யோசித்து எடுப்பது நல்லது 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : குரு பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் ஒற்றைத் தலைவலி போன்ற சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும். பதட்டம் ஏதுமின்றி மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். சரியான உணவு உண்ணுங்கள். உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ருத்ர பூஜை 

 மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். பதட்டம் ஏதும் இன்றி காணப்படுவார்கள். தெளிவான மனதுடன் கடினமாக முயற்சி மேற்கொள்வார்கள்.  கல்வியில் அதிக ஈடுபாடு மூலம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கருத்துக்கு மாற்றுக் கருத்து உரைக்காமல் அவற்றை ஆலோசனையாக மேற்கொள்ளுங்கள். 

கல்வியில் மேன்மை பெற :புதன் பூஜை 

சுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 16, 17, 20, 21, 22, 23, 26, 27, 28, 31.
அசுப நாட்கள் : 8, 9 10, 11, 12, 13, 14, 15, 18, 19, 24, 25, 29, 30.


banner

Leave a Reply