கும்ப ராசி - பொதுப்பலன்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே! இந்த மாதம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கக் காண்பீர்கள். வேகம் விவேகத்துக்கு தடை என்று உணர்ந்த நீங்கள் உங்கள் செயல்களை நிறுத்தி, நிதானமாக மேற்கொள்வீர்கள். பதறாமல் காரியங்களை மேற்கொள்வதன் காரணமாக நீங்கள் அதில் வெற்றியும் முன்னேற்றமும் காண்பீர்கள். உங்கள் நிதானமான போக்கு காரணமாக நீங்கள் அனைவரிடமும் அனுசரித்து ஆதரவுடன் நடந்து கொள்வீர்கள். குறிப்பாக குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரனையாக நடந்து கொள்வீர்கள். அவர்கள் சந்தோசம் மற்றும் திருப்தி காணும் வகையில் நடந்து கொள்வீர்கள். அதன் மூலம் உங்களுக்கு சந்தோசமும் அவர்களுக்கு ஆத்மதிருப்தியும் கிடைக்கும். சந்தோசமும் திருப்தியும் இருந்தால் உறவில் நெருக்கம் அதிகரிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? குழந்தைப் பேறு பெறுவதன் மூலம் குடும்பத்தில் புதிய உறவு குதூகலம் அளிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரக் காண்பீர்கள். உங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு பொருளாதாரமும் கை கொடுக்கும். வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உலகம் நம்மைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கும். எனவே வதந்திகளைக் கண்டு வருந்தாதீர்கள். அதற்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். சூழ்நிலை சாதகமாக இருக்கும் போது உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாகத் தான் இருக்கும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுங்கள்.
கும்ப ராசி - காதல் / திருமணம்
நல்ல குடும்பம் ஒரு நல்ல பல்கலைக் கழகம் ஆகும். நீங்கள் உங்கள் குடும்பம் சிறந்த பல்கலைக்கழகமாக விளங்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பீர்கள். குடும்ப உறவினர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். அவர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கு தக்க நடவடிக்கை எடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். பிறகென்ன? குடும்பத்தில் கொண்டாட்ட்டம் தான். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தகுந்த வாழ்கைத் துணை கிடைக்கப் பெறுவார்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை
கும்ப ராசி - பொருளாதாரம்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சாதரண பலன்களே காணப்படும். அவசிய தேவை மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற பணம் இருந்தால் அதுவே சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தானே. இருக்கும் பணத்தைக் கொண்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மேலும் பணம் தேவை என்றால் உங்கள் சேமிப்பு உங்களுக்கு கை கொடுத்து உதவும். குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் நீங்கள் பணம் செலவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: கேது பூஜை
கும்ப ராசி - வேலை
இந்த மாதம் நீங்கள் வழக்கமாக செய்யும் பணிகளை விட கூடுதல் பணிகளை மேற்கொள்ளும் சூழ்நிலை இருக்கும். அவற்றை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் உங்கள் மனதில் பதட்ட நிலை இருக்கும். முதலில் வழக்கமாக செய்யும் பணிகளை செய்வதற்கு முக்கியத்துவம் அளியுங்கள். பிறகு கூடுதல் பணிகளை பதட்டமின்றி மேற்கொள்ளுங்கள். உடன் பணி புரிபவர்களுடன் உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். அனைவரிடமும் நல்லுறவு பராமரியுங்கள். பணிகளை பிறருக்கு அளித்திருந்தால் அவற்றை அவர்கள் சரியாக முடிக்கிறார்களா என்று கண்காணியுங்கள். சிறப்பாக பணியாற்றுவதன் மூலம் நீங்கள் நிர்வாகத்தின் பாராட்டைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை
கும்ப ராசி - தொழில்
தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். காலமும் நேரமும் உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் இந்த மாதம் தொழிலில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் தொழில் சம்பந்தமாக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் சிறந்த, நன்மையான பலன்களையே காண்பீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுடன் கண்ணியமான உறவை நீங்கள் பராமரிப்பீர்கள். அவர்களின் பணிகளை சிறப்பாக முடித்து அளிப்பீர்கள். அவர்களின் பாராட்டையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் பங்குதாரர்களுக்கும் அவர்களுக்குரிய லாபத்தின் பங்கை பகிர்ந்தளிக்க வேண்டும்.
கும்ப ராசி - தொழில்துறை
நீங்கள் உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். பணிகள் முடிக்கப்படவில்லை என்பதற்காக நீங்கள் உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் உணரச்சிவசப்படாதீர்கள். அதனால் உங்கள் பதட்டம் அதிகரிக்கும். பணிகளை சரிவர ஆற்ற இயலாது. உங்களுக்கு கூடுதல் பணிகள் அளிக்கப்படும். அவற்றை முடிப்பதற்கு நீங்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும்.
கும்ப ராசி - ஆரோக்கியம்
ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூறி விட முடியாது. சில சில சிறு பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அதிக பணிகளும் அதன் காரணமாக சோர்வும் உங்களுக்கு ஏற்படும். ஆரோக்கியம் என்பதில் நாம் உண்ணும் உணவு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இந்த உணவு முறையை நீங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றால் உங்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உண்ணும் உணவில் கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நீங்கள் யோகா மேற்கொள்ளுங்கள்.
கும்ப ராசி - மாணவர்கள்
இந்த மாதம் உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் பலமாகும். கூடவே சுறுசுறுப்பாகவும் நீங்கள் செயல்படுவீர்கள். சோம்பலை விரட்டி அடிப்பீர்கள். தன்னம்பிக்கையை உறுதுணையாகக் கொண்டு நீங்கள் சிறப்பாக படிப்பீர்கள். அதன் மூலம் உங்கள் மனதில் திருப்தியும் காண்பீர்கள். கல்விப் பாடம் மட்டுமன்றி நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கும் நீங்கள் பயிற்சிகளை சிறப்பாக மேற்கொள்வீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,8,9,14,15,17,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 2,3,4,7,10,11,12,13,16,18,21,25,26
Leave a Reply