மேஷ ராசி - பொதுப்பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே! காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்பதனை கருத்தில் கொண்டு உங்கள் காரியங்கள் யாவற்றையும் நீங்கள் உரிய காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் சுறுசுறுப்புடனும் பெருந்தன்மையுடனும் செயல்படுவீர்கள். அதன் காரணமாக சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடக் காண்பீர்கள்.
குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நீங்கள் அவர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். உங்கள் தனித்தன்மை வெளிப்படும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கேற்ப நீங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் திறமைகள் யாவும் வெளிப்படும் வகையில் நீங்கள் பணியாற்றுவீர்கள். உங்கள் செயல்திறன் கண்டு மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் மற்றும் வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறிதளவான பாதிப்பே இருக்கும் என்றாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மேஷ ராசி - காதல்/திருமணம்
உங்கள் காதல் துணையுடன் அன்பை வளர்த்துக் கொள்ள இந்த மாதம் மிகவும் உகந்த மாதமாக இருக்கக் காண்பீர்கள். மனதில் திருப்தி இருந்தால் உறவில் அன்பு பெருகத்தானே செய்யும். அதனை கருத்தில் கொண்டு நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதோடு மட்டுமன்றி அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பீர்கள். உங்கள் அன்பும் அனுசரணையும் அவர்களுக்கு திருப்தி அளிக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மேஷ ராசி - பொருளாதாரம்
இந்த மாதம் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு அதிர்ஷ்டமான நேரம் என்று கூறினால் மிகை ஆகாது. அனைத்து வகையிலும் நீங்கள் சிறந்த பலனைக் காண்பீர்கள். தேவையற்ற செலவுகள் குறைந்ததால் பாரம் குறைந்தது போல உணர்வீர்கள். பண விஷயம் சார்ந்த உங்கள் பொறுப்புகளை நீங்கள் எந்த வித கஷ்டமும் இன்றி எளிதாக சமாளிப்பீர்கள். வீட்டு பராமரிப்பு விஷயமாக பணம் செலவு செய்வீர்கள். பயணங்களுக்கு பணம் செய்ய வேண்டிய சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை
மேஷ ராசி - வேலை
உங்கள் பணியிடச் சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும் என்பதால் நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயலாற்ற முற்படுவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நீங்கள் பிறரைக் கலந்து ஆலோசிக்காமல் சுயமாக முடிவெடுத்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை எல்லா விதத்திலும் உங்களுக்கு சிறந்த பலன்கள் அமையக் காண்பீர்கள். நீங்கள் வேலையை தேடிக் கொண்டிருப்பவர் என்றால் உங்களுக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை மாற்றம் தேவை என்றாலும் அதுவும் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது பொன்னான நேரமாக அமைந்து வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: கணேச பூஜை
மேஷ ராசி - தொழில்
சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் குறுகிய காலத்திற்குள் சிறந்த முன்னேற்றம் காணும் வாய்ப்பு உங்களைத் தேடி வரும். தொழிலில் வாடிக்கையாளர்களுக்குத் தானே முக்கியத்துவம். நீங்கள் வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கு சிறந்த சேவை அளிப்பதன் மூலம் அவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் நல்லுறவு பராமரிப்பதன் மூலம் உங்களால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க இயலும். உங்களின் அறிவுத் திறனைக் கொண்டு நீங்கள் பிரச்சினைகளை சரியான விதத்தில் சமாளிப்பீர்கள்.
மேஷ ராசி - தொழில் வல்லுனர்கள்
தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும் போது வரவேற்றால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். பணியில் சிறப்பாக செயலாற்றி நீங்கள் ஊதிய உயர்வினைப் பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நீங்கள் நல்ல விதமாக நடந்து கொள்வதன் காரணமாக அவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
மேஷ ராசி - ஆரோக்கியம்
ஆரோக்கியமாக இருக்க சரியான நேரத்தில் முறையான உணவும் ஓய்வும் அவசியம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இந்த மாதம் உங்கள் உணவு முறையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் மற்றும் இரும்பு சத்துள்ள உணவை உட்கொள்வதன் மூலம் மந்தமான நிலையிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். நீங்கள் மேற்கொள்ளும் சிறிய பயணம் கூட உங்கள் உடல் அசதிக்கு காரணமாக அமைய வாய்ப்பு உள்ளது. உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாகாமல் கவனமாக இருங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
மேஷ ராசி - மாணவர்கள்
மேஷ ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறந்த முறையில் கல்வி பயில்வதற்கு தொடங்குவார்கள். கல்வி பயில்வதில் ஆர்வமும் சுறுசுறுப்பும் காணப்படும். மாணவப் பருவத்தில் தான் சிறந்த நண்பர்களைப் பெற முடியும் என்ற கூற்றை நீங்கள் நிரூபிப்பீர்கள். நீங்கள் அனைவரிடமும் நட்புறவுடன் பழகுவதன் காரணமாக அதிக நண்பர்களைப் பெறுவீர்கள். அந்த நட்பு நீடித்த நட்பாக அமையும் என்பது அதன் சிறப்பாகும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,6,8,9,12,13,14,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 2,3,4,7,10,11,15,16,17,18,21,25,26.

Leave a Reply