Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

2018 September Month’s Rasi Palan for Kanni

August 20, 2018 | Total Views : 2,331
Zoom In Zoom Out Print

கன்னி ராசி – பொதுப்பலன்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக தோன்றும். உயர் தரமான வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறீர்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும் உங்களைத் தேடிவரும். நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளும் உங்களுக்கு ஒரு வலுவான பாதையை வகுத்துத்தரும். நீண்ட தூர பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாகப் பயணம் மேற்கொள்ளப் போகிறீர்கள். உறவினர் மற்றும் சுற்றத்தாருடன் புதிய நட்புகள் உருவாகும். இந்த மாதம் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்று சொல்லலாம். சரியான நேரத்தில் உங்கள் நண்பர்களிடமிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பீர்கள். உங்கள் தோற்றம் பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். உங்கள் வாழ்க்கையைச் சந்தோஷமாகவும்,, யதார்த்தமாகவும் அமைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் முறையாகக் கவனம் செலுத்துங்கள். 2018-september-months-rasi-palan-kanni கன்னி ராசி – காதல் / திருமணம் கன்னி ராசிக்காரர்களுக்கு காதல்/ திருமணத்தைப் பொறுத்தவரையில் உங்கள் துணையுடன் நல்ல உறவு ஏற்படும். உறவினர்களுடனான அன்பு அதிகமாகும்.அது மட்டுமல்ல கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அதிக இணக்கம் ஏற்பட்டு இல்லறத்தில் இன்புற்று இருப்பீர்கள். சில சூழ்நிலைகளை தவிர்க்கும் நோக்கில் பொய்யான தகவலைச் சொல்ல வேண்டாம். நேர்மையை கடைப்பிடியுங்கள். உங்களது உணர்ப்பூர்வமான ஆதரவை அளிக்கத் தவறாதீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை

 

கன்னி ராசி – நிதி நிலைமை கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலைமை பொறுத்தவரையில் நிதியில் உறுதியான தன்மை உருவாகும். ஏற்ற இறக்கம் இருக்காது. உங்கள் சேமிப்பு அதிகமாகும். அதற்கு உங்கள் புத்திக்கூர்மையே முழுமுதற்காரணம். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். பணம் அதிகமாக இருக்கிறதே என்று நினைத்து நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ எந்த வகைலும் உறுதி அளிக்க வேண்டாம். குடும்பத்தாரிடம் பண வரவு செலவுகளை பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள். பண விஷயத்தைப் பொறுத்தவரையில் பொறுப்புடன் செயல்படுங்கள். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சூரியன் பூஜை கன்னி ராசி – வேலை கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் ஏற்பட்ட சிக்கல்கள் மறையும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வேலையில் முன்னேற்றம் காண போகிறீர்கள். உங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதற்கு இது சரியான தருணம். பொறுமையுடன் செயல்படுங்கள். செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம். சரியான நேரத்தில் உங்கள் வேலைகளை முடித்துவிடுங்கள். இழுத்தடிக்க வேண்டாம். உங்கள் உயர் அதிகாரிகளுடன் நட்புடன் இருந்து காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன் பூஜை கன்னி ராசி – தொழில் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் என்பது சாதாரணமாக இருக்கும். புதிய திட்டங்களை வகுப்பீர்கள். ஆனாலும் நீங்கள் எதிர்பார்த்த தொழில் வளர்ச்சி இருக்காது. அதனால் உங்களுடைய இலக்கை அடைய முடியவில்லையே என வருத்தம் கொள்ள வேண்டாம். அதற்குச் சிறிது காலம் பிடிக்கும். உங்கள் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை மனதில் வைத்துச் செயல்படுங்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அது உங்களுக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தலாம். யாருக்கும் வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து விடாதீர்கள். கன்னி ராசி – தொழில் வல்லுநர் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை சற்று மெதுவாக நகரும். உங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்ற வகையில் வேலைகளைச் செய்வீர்கள். நல்ல தெளிவான சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும் உங்கள் பணியைத் தொடருங்கள். உங்கள் செயல்திறன் உங்களுக்குச் சந்தோஷத்தை தருவதோடு ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும். சரியான நேரத்தில் வேலைக்குச் செல்லுங்கள். கால தாமதமாக வேலைக்குச் செல்லாதீர்கள். கன்னி ராசி – ஆரோக்கியம் கன்னி ராசிகாரர்களுக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நம் சுற்றுப்புறத்தை எப்போதுமே தூய்மையாக பராமரிப்பதன் மூலம் பல நோய்களை வருவதற்கு முன்னரே தடுத்துவிடலாம். அதனால் உங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள். தெளிவான சிந்தனையைப் பெற தியானப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். பணியில் உங்கள் திறமையான செயல்பாடு உங்களைச் சந்தோஷமாக வைத்திருக்கும். உலர் பழங்கள் விரும்பிச் சாப்பிடுங்கள். ஆற்றல் தரும் பானங்களை அருந்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை கன்னி ராசி – மாணவர்கள் கன்னி ராசி மாணவர்கள் சரஸ்வதி தேவியின் அருளால் படிப்பில் நல்ல நிலையை அடையப் போகிறீர்கள். உங்கள் நம்பிக்கையும், நேர்மையும் வீண் போகாது. கடின உழைப்பு என்றைக்குமே சிறந்த பலன்களைத் தரும் என்பது தெரிந்தது தானே? இந்த நேரத்தில் நீங்கள் நினைத்த இலக்கை அடைவதற்கு, உங்களுடைய தனித்தன்மைகள் கைகொடுக்கும் மேலும் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வதால் அவர்களுடைய நன்மதிப்பையும் பெறுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரை ஏற்றுச் செயல்படுங்கள். மற்றவர்களின் பார்வையில் பரந்த மனப்பான்மையுடன் காணப்படுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 4, 5, 7, 10, 11, 14, 15, 16 , 22 , 23, 24 மற்றும் 26 அசுப தினங்கள்: 3, 8, 12, 13, 17, 19, 25 மற்றும் 28

banner

Leave a Reply

Submit Comment