x
x
x
cart-added The item has been added to your cart.

2018 September Month’s Rasi Palan for Rishabam

August 21, 2018 | Total Views : 1,382
Zoom In Zoom Out Print

ரிஷப ராசி – பொதுப்பலன்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் முழுமையான ஆற்றல் வெளிப்பட்டு உங்கள் திறமை மேம்படும். சில நேரங்களில் ஒரு வகையான பதட்ட சூழ்நிலைகளை அனுபவிக்க நேரிடலாம். அந்த நேரத்தில் சிந்தித்து செயல்படுவது சிறப்பு. உங்களுடைய அசாத்தியமான அறிவுகூர்மையை சரியாகப் பயன்படுத்தி அதிலிருந்து வெளியே வர முயலுங்கள். உங்கள் வேலையின் மீது அதிக ஈர்ப்பும் விருப்பமும் இருக்கும். எங்குச் சென்றாலும் வேலையைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருப்பீர்கள். அதனால் இயல்பாகவே வேலையில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதன் காரணமாக மேல் அதிகாரிகளின் பாராட்டு உங்களுக்குக் கிடைக்கும். தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் பணியாற்றி உங்கள் இலக்கை எட்டுவீர்கள். இவையனைத்தும் உங்களை மன அமைதியோடு இருக்க வைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெற போகிறீர்கள். அதே வேளையில் சமூக சேவை செய்வதிலும் ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்து கொள்ளாதீர்கள். அது நல்லதல்ல. 2018-september-months-rasi-palan-rishabam ரிஷப ராசி – காதல் / திருமணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் திருமணத்தை பொறுத்தவரையில் எந்த அவசர முடிவு எடுப்பதையும் தவிர்த்து விடுங்கள். அப்படி அவசர முடிவு எடுத்தால் அதனால் எழும் சிக்கல்களை உங்களால் சமாளிக்க முடியாது. மேலும் அதிக சிரமத்திற்கு ஆளாக நேரிடும். உணர்ச்சி ரீதியாக எதையும் சிந்திக்காமல் நடைமுறைக்கு தகுந்தாற் போல் உங்கள் எண்ண ஓட்டங்களைச் சீராக்கி வைப்பதன் மூலம் சிறியளவில் சிக்கல்கள் வந்து பின் அவற்றிற்குத் தீர்வு ஏற்படும். இந்த மாதத்தில் ஏற்படும் உறவு பிரச்சினைக்கு நீங்களே தனிப்பட்ட முறையில் தீர்வு காணப் போகிறீர்கள். காதல் உறவை அப்படியே தொடருங்கள். உங்கள் கர்வமான போக்கு உறவுக்குள் ஒற்றுமையைக் குறைக்கும். அதனால் தீய குணங்களை தவிர்த்திடுங்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை ரிஷப ராசி – நிதி நிலைமை ரிஷப ராசிக்காரர்களே உங்கள் நிதிநிலைமை மிதமாகத் காணப்படுகிறது. எல்லா விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். இருப்பினும் குறிப்பாக மற்றவர்களுக்கு பண உதவி செய்வதை நிறுத்திவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் அதிகமான செலவை செய்வார்கள். நீங்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு அவற்றைத் தடுக்க முயலுங்கள். சேமிப்பு அவசியம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஆனால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாறாதீர்கள். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை
ரிஷப ராசி – வேலை ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையைப் பொறுத்தவரை இது ஒரு கடினமான காலகட்டமாகும். தற்சமயம் வேலையில் ஏற்றத்தை எதிர்பார்த்தால் அதற்கு நாளாகும். வேலையில் மட்டுமே முனைப்போடு இருங்கள். அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். ஆனாலும் முக்கியமான பணிகளை கையாளும் போது நல்ல தரத்துடன் முடித்தளிக்க முயற்சி செய்யுங்கள். வேலையில் உங்கள் திறமைகளை காட்டுவதற்கு ஏற்ற வாய்ப்பு உங்களைத் தேடிவரும். இந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலையில்லாத நபர்கள் வேலையில்லையே எனக் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை ரிஷப ராசி – தொழில் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொழிலை பொறுத்தவரை சுமூகமாகச் செல்லும். அவ்வவ்போது உங்கள் கவனம் திசைமாற வாய்ப்பு உண்டு. சோர்வடையாமல் விறுவிறுப்பாகச் செயல்பட்டு உங்கள் வேலையை முடிக்க வேண்டும். உங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உங்கள் கூட்டாளிகள் தொழிலில் ஒத்தாசையாக இருந்து ஆதரவு தருவார்கள். பண விவகாரங்களில் வரவு செலவுகளை கண்காணியுங்கள். செலவுகள் வரம்பு மீறிப் போகலாம். இதனால் எதிர்காலத்தில் பணத் தேவைகளுக்காக நீங்கள் அலைய நேரிடலாம். எனவே இப்பொழுதே உங்கள் செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள். ரிஷப ராசி – தொழில் வல்லுநர் இந்த மாதம் தொழிலில் அதிக சுமை ஏற்படும். பணிச்சுமை காரணமாக உங்கள் எண்ணத்தில் மாற்றம் உண்டாகும். குறிப்பாக உடல் வலிமை குறைந்தது போன்று உணர்வீர்கள். தொழில் முன்னேற்றம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் சில வேலைகளைத் தள்ளிப்போடுங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கும் பணியாளர்களிடம் அன்புடன் ஆதரவும் காட்டுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பார்கள். ரிஷப ராசி – ஆரோக்கியம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். முழு உடல் பரிசோதனை தேவைப்படும் என நினைத்தால் உடனே பரிசோதனைக்கு சென்றுவிடுங்கள். தாமதம் வேண்டாம். சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்லுங்கள். இல்லையென்றால் அதுவே பெரியளவில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுக்கு இந்த மாதம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை ரிஷப ராசி – மாணவர்கள் ரிஷப ராசி மாணவர்களுக்கு இது எளிமையாகக் கடந்து செல்லக்கூடிய காலமாக கருதப்படுகிறது. கல்வியில் அதிக அக்கறை காட்டுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உங்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள் உங்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்திருப்பார்கள். எனவே அவர்களுடைய ஆசையை நிறைவேற்றுங்கள். படிப்பதில் மட்டுமே உங்கள் முழு கவனம் இருக்கட்டும். தேவையற்ற பயணங்கள் வேண்டாம். இதனால் அலைச்சல் மட்டுமல்ல செலவும் அதிகமாகி பளுவை உண்டாக்கும். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 7 , 13, 14, 15, 22, 23, 24, 26 மற்றும் 29 அசுப தினங்கள்: 4 , 6 17 , 19 , 25 மற்றும் 28

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos