Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

மேஷம் மாத கும்பம் ராசி பலன்கள் 2018 (July Matha Rasi Palan for Kumba 2018)

May 11, 2018 | Total Views : 1,868
Zoom In Zoom Out Print

கும்ப ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த அவர்களுடன் ஒரு சில மணி நேரங்களை செலவிட முயலுங்கள். கலாச்சாரம் மற்றும் சம்பிரதாயத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். பதட்டத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள நீங்கள் சில அவசர முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் வார்த்தைகள் பிறரை தாக்கா வண்ணம் கவனமாக இருங்கள். பிறரிடம் அளவோடு பழகுங்கள். சண்டை சச்சரவுகளை தவிர்த்திடுங்கள். உங்கள் பேச்சின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் தேவை. கும்ப ராசி – காதல் / திருமணம் இந்த மாதம் காதலுக்கு ஏற்ற மாதம். காதலில் நீங்கள் நம்பிக்கையான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். விஷயங்கள் தாமதமாக நடைபெறும் என்பதால் பொறுமை தேவை. தம்பதியர்களின் உறவு சாதாரணமாக இருக்கும். அவர்கள் தங்கள் அன்றாட அலுவல்களில் பிஸியாக இருப்பார்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம். : புதன் பூஜை 2018-july-matha-rasi-palan-for-kumba கும்ப ராசி – நிதிநிலைமை நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் கடனை அடைப்பீர்கள். நிதிச் சுமை குறைந்து காணப்படும். நீங்கள் பணத்தை சேமிக்க ஆரம்பிப்பீர்கள். குடும்பத்தாரின் நிதித் தேவைகளை தாமதமின்றி நீங்கள் நிறைவேற்றும் விதம் பாராட்டைப் பெறும். இந்த மாதம் செலவுகள் சாதரணமாக காணப்படும். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : கேது பூஜை கும்ப ராசி – வேலை உங்கள் செயல்களில் குறியாக இருங்கள். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள். பணிகளை முடிக்காமல் பாதியில் வைத்திருந்து அதற்கு காரணம் கூறிக் கொண்டிருக்காதீர்கள். சக பணியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் அது உங்களை எதிர்காலத்தில் தாக்கும் என்பதை நினைவில் கொண்டு அவ்வாறு செய்வதை நிறுத்துங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : சனி பூஜை கும்ப ராசி – தொழில் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் சாதரணமாக காணப்படும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பணிகளை முடித்துக் கொடுங்கள். தொழில் வளர்ச்சிக்கான யுத்திகளை உருவாகும் பொழுது கூட்டாளிகளையும் அதில் உட்படுத்துங்கள். உங்கள் வெளிப்படையான தன்மை சில சமயங்களில் திறமையாகச் செயல்படும். ஆவணங்களை கையெழுத்திடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். முடிக்கப்படாத பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து முடிக்க வேண்டும். கும்ப ராசி – தொழில் வல்லுநர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றகரமாக இருக்கும். உங்கள் புன்சிரிப்பால் அனைத்தையும் சாதகமாக்கிக் கொள்வீர்கள். தொழிலில் நிலையான வளர்ச்சிக்கு ஸ்திரத்தன்மை பராமரிக்க வேண்டும். கும்ப ராசி – ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியம் பாதிக்காத வகையில் உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் வேண்டும். நீங்கள் வழுக்கி விழுந்து காயமடைய வாய்ப்புள்ளது. உடல் வலி, தூக்கமின்மை, ஓய்வின்மை போன்ற பாதிப்புகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது சிறிய விபத்து அல்லது காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக ஓட்ட வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை கும்ப ராசி – மாணவர்கள் அதிக நேரம் எடுத்து கவனம் செலுத்தி படிக்க வேண்டும். குழுவாகப் படிப்பதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். கல்வியில் வெற்றி பெற சிறப்பாக திட்டமிட்டு அட்டவணைப்படி படிக்க வேண்டும். படிப்பில் கவனம் கூட தியானம் மேற்கொள்ள வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 2nd, 3rd, 8th, 14th, 15th, 16th, 22nd, 24th, 25th and 26th அசுப தினங்கள்: 6th 7th, 9th, 17th, 19th, 23rd, 28th and 30th

banner

Leave a Reply

Submit Comment