AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் மாத கடக ராசி பலன்கள் 2018 (July Matha Rasi Palan for Mesha 2018)

dateSeptember 19, 2018

மேஷ ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் சாதரணமாக காணப்படும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் நன்மை காணப்படும். ஆனால் சிறிது பொறுமை தேவைப்படும். உங்கள் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவார்கள். அவர்களுடன் நல்லுறவு காணப்படும். கவலை மற்றும் பயம் உங்களை பாதிக்காத வகையில் அவைகளை ஒதுக்கித் தள்ளுங்கள். இந்த மாதம் முக்கிய பொறுப்புகள் ஏற்பதை தவிர்த்திடுங்கள். விருந்து விசேஷங்களினால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் சமூக பழக்க வட்டாரத்தை விரிவு படுத்த வேண்டும். புதிய மனிதர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் பண விஷயத்தில் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த முடங்கிப் போன பணம் வந்து சேரும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் மிதமாக காணப்படும். மேஷ ராசி – காதல் / திருமணம் உங்கள் காதல் துணையை தேர்ந்தடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இப்பொழுது காணப்படும் உறவு சாதரணமாக இருக்கும். உங்கள் துணைக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்த்திடுங்கள். தம்பதிகளிடையே சந்தேகப் போக்கு காணப்படும். அதனை சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் நம்பிக்கை குறைந்து காணப்படும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சுக்கிரன் பூஜை’ 2018-july-matha-rasi-palan-for-mesha மேஷ ராசி – நிதிநிலைமை இந்த மாதம் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகம் நன்மை அளிக்கும். அதன் மூலம் பண வரவு காணப்படும். நீங்கள் உங்களின் பழைய வீட்டை புதுப்பித்து அதனை வாடகைக்கு விட்டு நிரந்தரமான வருமானம் காண வாய்ப்புள்ளது. இந்த மாதம் புதிய சொத்து வாங்குவதை தவிர்க்கவும். உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை மேஷ ராசி – வேலை பணியைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக காணப்படும். உங்கள் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பண வரவு காணப்படும். நீங்கள் தைரியமாக செயலாற்றுவீர்கள். உங்களிடம் நல்ல கிரகிப்புத் தன்மை காணப்படும். உங்கள் படைப்பாற்றல் திறமை நன்மை பெற்றுத் தரும். சாதகமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள உங்கள் திறமைகளை மெருகூட்டி ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : கணபதி பூஜை மேஷ ராசி – தொழில் இந்த மாதம் தொழில் வளர்ச்சிக்கான செயல்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்கள் பொருட்களை சந்தைப்படுத்த வாடிக்கையாளர்களை சந்தியுங்கள் அல்லது அவர்களை வரவேற்று உங்கள் சேவைகளை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் புதிய எண்ணங்களும் புதுமைகளும் நன்மை பெற்றுத் தரும். மேஷ ராசி – தொழில் வல்லுநர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இது அனுகூலமான மாதம். உங்கள் முயற்சிகள் சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும். உங்கள் நன்மதிப்பு உயரும். உங்கள் தகுதி மற்றும் திறமைகளை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உங்கள் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். மேஷ ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். நரம்பு அல்லது தோல் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் தோள் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை மேஷ ராசி – மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் விளையாட்டாக இருப்பீர்கள். படிப்பு விஷயத்தில் சோம்பலை தவிர்க்க வேண்டும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனை கேட்டு வாழ்வில் முன்னேறுங்கள். உங்கள் எளிமை உங்களுக்கு மதிப்பை பெற்றுத் தரும். நீங்கள் உங்கள் கிரகிக்கும் தன்மையை மேம்படுத்திக் கொள்வீர்கள். அதனால் உங்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1st, 2nd, 3rd, 8th, 11th, 17tz, 18th 21st, 27th, 29th 30th and 31st அசுப தினங்கள்: 5th, 6th, 7th, 10th, 15th, 19th, 22nd, 26th and 28th


banner

Leave a Reply

  • sathish


    excelent

    July 7, 2018