Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
AstroVed Menu
AstroVed
search
search

2018 August Month’s Rasi Palan for Kanni

June 21, 2018 | Total Views : 2,468
Zoom In Zoom Out Print

கன்னி ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதத்தில் நீங்கள் கலவையான பலன்களைப் பெறலாம். அனுசரனையான நிதிநிலை உங்களுக்கு ஆறுதலை அளிக்கும் மற்றும் உங்கள் சமூக வட்டம் பரவலாக அதிகரிக்கும். உங்களுடைய பொதுவான காரியங்களைச் செய்யும் போது நீங்கள் நட்பு சூழலை அனுபவிப்பீர்கள். உங்களுடைய தொடர்பாடலில் காணப்படும் வெளிப்படைத்தன்மை உங்களுடைய செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பத்தோடு பயணம் செய்ய நேரிடும். அது மிகச் சிறந்த திருப்தியைத் தரும். மன அமைதியும், சக்தியும் பெறுவதற்கு யாத்திரை தலங்களுக்கு செல்வீர்கள். உங்களுடைய நிலுவையிலுள்ள பணிகளுக்கு சிறந்த கவனம் கொடுப்பதால் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் சமூக வட்டத்தில் புனித விழாக்களில் பங்கு பெற வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியிலான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற்று பெரும்பாலும் சுறுசுறுப்புடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். 2018-august-months-rasi-palan-kanni கன்னி ராசி – காதல் / திருமணம் காதல் வாழ்க்கை இந்த மாதத்தில் சிறப்பாக இருக்காது. உங்கள் துணை உங்கள் அன்பையும் கவனத்தையும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் சொந்தமாக திட்டங்களை மேற்கொள்ளதீர்கள். முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து அதைத் ஒத்திப் போடுங்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் நல்ல தொடர்புடன் இருப்பீர்கள். இந்த மாதத்தில் முக்கிய மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை

 

கன்னி ராசி – நிதி நிலைமை இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை, தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். உங்கள் நிதி நிலை படிப்படியாக அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் செய்த முதலீடுகளிலிருந்து நீங்கள் சில நிதி நலன்களைப் பெறலாம். இந்த மாதத்தில் தேவையில்லாத செலவுகளைக் குறையுங்கள். உங்கள் வாகனத்தைப் பழுது பார்த்தல் அல்லது சொத்துக்களை புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சூரியன் பூஜை கன்னி ராசி – வேலை இந்த மாதம், நீங்கள் சுமூகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். உங்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியைப் பெறுவீர்கள். உங்கள் ஊதியத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் வேலையில், நீங்கள் புதிய மாற்றங்களைக் கொண்டு வர நேரிடும். இது பாராட்டத்தக்கதாக இருக்கும். பெரும் சோதனைகளுக்குப் பிறகு, உங்கள் லட்சியங்களில் சில நிறைவேறும். தகவல்தொடர்பில் வெளிப்படையாக இருங்கள். அது உங்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன் பூஜை கன்னி ராசி – தொழில் வியாபாரத்தில் உயர் மட்ட நபர்களுடன் புதிய தொடர்புகளைப் பெறலாம், இது உங்களுக்கு உதவலாம். பயணங்கள் பயனுள்ளதாய் இருக்கும். புதிய வேலைகள் மற்றும் கடமைகளை செய்வீர்கள். நீங்கள் ஒரு சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள், உங்கள் பங்குதாரர் மற்றும் கூட்டாளிகளின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுக்கு இருக்கும். ஆதாயத்தைத் தரும் வெளிநாட்டு இணைப்புகளை உருவாக்குவீர்கள். கன்னி ராசி – தொழில் வல்லுநர் நீங்கள் தொழில் ரீதியான பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும். பொறுமையாக இருங்கள். தேவையற்ற கிசுகிசுக்களை தவிர்க்கவும். இது உங்களுடைய நன்மதிப்பைக் குலைக்கும். நீங்கள் உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைவருடனும் ஒரு நல்ல உறவைப் பராமரிக்கவும். பணியில் உள்ள உங்கள் அணுகுமுறை உங்கள் மதிப்பை நிரூபிக்கச் சிறந்த வாய்ப்புகளை வழங்கும். உங்கள் நிர்வாகம் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பைத் தரும். கன்னி ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் ஆரோக்கிய ரீதியாக ஒரு வளமான காலத்தை அனுபவீப்பிர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தாரோடு நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள். சுறுசுறுப்பாக இருக்க உடற் பயிற்சிகளை செய்யுங்கள். ஓய்விற்கும், தூக்கத்திற்கும் போதுமான நேரம் கொடுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை கன்னி ராசி – மாணவர்கள் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் நோக்கங்களை நிறைவேற்ற முடியும். நல்ல சக்திகள் நீங்கள் வளர உதவும். வெற்றியை அடையத் தேவையான உறுதிப்பாட்டை நீங்கள் பெற்றிருப்பீர்கள். எனவே, நீங்கள் சிகரங்களை அடைந்து திறம்பட உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 2, 3, 4, 8, 15, 16, 26, 28, 29 மற்றும் 30வது அசுப தினங்கள்: 6, 7, 9, 11, 17, 24, 27 மற்றும் 31 வது

banner

Leave a Reply

Submit Comment