ரிஷப ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். மற்றவர்களை கவனிப்பதன் மூலம் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் புதிய வித்தியாசமான கருத்துக்களை வளர்த்து அவற்றை நடைமுறைப்படி செயலாக்க முயற்சிப்பீர்கள். எனினும், கடினமான சூழ்நிலைகள் காணப்படுவதால் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பங்கு வர்த்தகம் உங்களுக்கு இழப்பைத் தரலாம். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் நல்ல திறமைகளை உடையவராக இருக்கலாம். ஆனால் உங்களுடைய நிலையற்ற மனது காரணமாக அதைச் சரியான முறையில் பயன்படுத்த இயலாது. உங்கள் அதிர்ஷ்டம் நிலையற்றதாக இருக்கும். நீங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டியிருக்கும். உங்கள் துணையுடன் வைத்திருக்கும் தொடர்பை கண்காணிக்க வேண்டி இருக்கும். சில நேரங்களில், சிறு பிரச்சினைகள் வெடிக்கும். மற்றும் அதைச் சரி செய்வதற்கான சூழ்நிலைகள் அமையாமல் இருக்கலாம். இந்த மாதம் ஆரோக்கிய நிலை உங்களுக்கு ஆதரவாக இல்லை.
ரிஷப ராசி – காதல் / திருமணம்
உங்கள் செயல்களை பொறுமையுடன் தொடர வேண்டிய மாதமாகும். உங்கள் முயற்சிகள் கடின உழைப்பால் நல்ல முடிவுகளைத் தரும். உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் உங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். காதல் விஷயங்களில் பக்குவமான முடிவுகளை எடுக்க வேண்டும். உங்களுடைய குறுகிய சிந்தனை மற்றவர்களை குழப்பக்கூடும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜைரிஷப ராசி – நிதி நிலைமை
உங்கள் நிதி நிலை இந்த மாதம் திருப்திகரமாக இருக்காது, சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தேவையான நேரத்தில் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களை ஆதரிப்பார்கள். உங்கள் செலவுகளை கவனமாகத் திட்டமிட வேண்டும். உடல்நலக்குறைவால் செலவுகள் இருக்கலாம்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜைரிஷப ராசி – வேலை
இந்த மாதம் உங்கள் பணியில் படிப்படியான முன்னேற்றம் இருக்கலாம். நீங்கள் தகுந்த பதவியைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். சில நேரங்களில், பலன்களைப் பெற தந்திரமாக செயல் பட வேண்டியிருக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். வேலையில் கூடுதல் பணிகள் செய்ய நேரிடும். எனவே உங்களுடைய திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜைரிஷப ராசி – தொழில்
கூடுதல் சேவைகளை வழங்குவதற்கும், உங்கள் வியாபார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்கும் இந்த மாதம் நல்ல நேரம். திட்டமிடலுக்கும் அதைச் செய்து முடிப்பதற்கும் உங்கள் கூட்டாளிகளிடமிருந்து பரிந்துரைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதிக லாபம் பெற உங்கள் வாடிக்கையாளர்களை விரிவுபடுத்த வேண்டி இருக்கும். உங்கள் திறமையை நிரூபிக்கச் சவாலான பணிகள் கிடைக்கும். இந்த மாதத்தில் தொழில் ரீதியான கூட்டங்களால் கடுமையான பணிச்சுமைகள் இருக்கும்.
ரிஷப ராசி – தொழில் வல்லுநர்
இந்த மாதம் தொழிலில் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கு உதவிகரமாக இருக்கும். வாழ்க்கையில் ஒரு அடையாளத்தைப் பெறுவதற்கு நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உங்கள் தொழிலில் வெற்றியைப் பெற வலுவான உத்வேகம் உங்களிடம் இருக்கும். உங்களுடைய வளர்ச்சி படிப்படியாக அமையும். பொறுமையுடன் இருங்கள். முயற்சிகளைத் தொடருங்கள்
ரிஷப ராசி – ஆரோக்கியம்
உடல்நலப் பிரச்சினைகள் உங்களுக்கு உடல் சோர்வை அளிக்கும். சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய முடியாமல் தடுக்கும். வயிற்றுப் பிரச்சினைகள் தொடர வாய்ப்பு உண்டு. இதற்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள். முறையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். கட்டுப்பாட்டு உணவைப் பின்பற்றுங்கள். நீங்கள் மந்தமாக உணர்வீர்கள். இதைத் தவிர்ப்பதற்கு தேவைப்படும் நேரத்தில் காலத்திற்கு ஏற்ற பழங்களை சாப்பிடுங்கள். தியானம் செய்வது உங்களை வலுவாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : சூரியன் பூஜைரிஷப ராசி – மாணவர்கள்
இந்த மாதத்தில், உங்கள் விருப்பமான கல்வியை தொடர்ந்து படித்து அதில் நன்கு பிரகாசிப்பீர்கள். உங்களுடைய தொடர் முயற்சிகள் உங்களைத் தக்க வைக்க உதவும். அதே நேரம் உங்கள் குறிக்கோள்களை அடைய சில தடைகளும் ஏற்படும். உங்களுடைய கஷ்டங்களை சம நிலையில் வைத்துக்கொள்ள அறிவுப்பூர்வமாக முயலுங்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 1, 2, 6, 7, 16 மற்றும் 17
அசுப தினங்கள்: 8, 22, 29 மற்றும் 30 வது
Tags: 2018 Rishabam Rasi Palan August August Month Rishabam Palan 2018 Matha Rasi Palan 2018 Rishabam Rasi Palangal 2018 August Rishabam August Month Rishabam Palan 2018 2018 Rishabam Rasi Palan August Matha Rasi Palan 2018 Rishabam Rasi Palangal 2018 August Rishabam ரிஷபம் மாத ராசி பலன் 2018
Leave a Reply