April Monthly mesham Rasi Palangal 2018 Tamil,April month mesham Rasi Palan 2018 Tamil

Vasant Navaratri 2023: Invoke the Primordial Goddess for Prosperity, Protection, Wish-Fulfillment, Mental Acuity, Wisdom & Success Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 April Month’s Rasi Palan for Mesham

February 23, 2018 | Total Views : 1,450
Zoom In Zoom Out Print

மேஷ ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் காணப்படும். எனவே சிறந்த பலன்களைக் காண நீங்கள் உங்கள் செயல்களை திட்டவட்டமாகச் செய்ய வேண்டும். இந்த மாதம் உங்கள் சமூக வட்டாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உங்களுக்கான பொறுப்புகளை முறையாக முடிப்பீர்கள். அது உங்களுக்கு மரியாதையைப் பெற்றுத் தரும். சில போராட்டங்களுக்குப் பிறகு உங்களின் சில விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு சிறந்த ஆலோசகராகத் திகழ்வீர்கள். மன உறுதி பெறவும் விஷயங்களை திறமையுடன் கையாளவும் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் விரும்பிய சொத்தை அடை வீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விரும்பிய இடங்களுக்குச் செல்வீர்கள். உங்கள் உடைமைகள் தொலைந்து போக வாய்ப்புள்ளதால் நீங்கள் அவைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு தேவையான ஓய்வை நீங்கள் எடுக்க வேண்டும். மேஷ ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் காதலில் நீங்கள் எதிர்பார்க்கும் பலனை அடைவீர்கள். உங்கள் முயற்சிகளை கவனமுடன் தொடர்வீர்கள். உங்கள் துணை உங்களின் உண்மையான காதலை புரிந்து கொள்வார். தம்பதிகளுக்கு இது சிறப்பான நேரம். திருமணத்திற்கான வரன் தேடிவரக் காண்பீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவரை தேர்ந்தெடுங்கள். தவறான புரிந்துணர்வுகளுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிர பூஜை 2018-april-months-rasi-palan-for-mesham மேஷ ராசி - நிதிநிலைமை நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியடையும். முதலீட்டிற்கான விவேகமான திட்டங்களை திறம்பட தொடங்க இயலும். உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்காமல் நீங்கள் எந்த முதலீட்டையும் செய்யாதீர்கள். இந்த மாதம் நீங்கள் ஆடம்பரப் பொருட்களுக்கு செலவு செய்வீர்கள். நிதி நிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை மேஷ ராசி - வேலை உங்கள் பொறுப்புகளை வலுப்படுத்தவும் மேலதிகாரிகளுடன் உங்கள் தகவல் தொடர்பை மேம்படுத்தவும் இந்த மாதம் சிறந்த மாதம். நீங்கள் உங்கள் பணியில் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். அதற்கு அங்கீகாரம் பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நல்ல ஒத்துழைப்பும் ஆதரவும் காணப்படும்.கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து உங்களின் அமைதியான போக்கிற்கு மரியாதை கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : விநாயகர் பூஜை மேஷ ராசி - தொழில் தொழில் முனைவோர்கள் இந்த மாதம் தங்கள் பணிகளில் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். நீங்கள் முடித்த பணிகளுக்கான பணம் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக பதட்டம் காணப்படும். இந்தச் சூழ்நிலை குறுகிய காலமே காணப்படும் என்பதால் பொறுமையுடன் இருக்க வேண்டும். உங்களின் நோக்கமும் பொறுப்புகளும் உங்களை உண்மையான தொழில் முனைவோராய் ஆக்கும். நீங்கள் தேவைப்படும் இடங்களில் செலவை குறைக்க வேண்டும். மேஷ ராசி - தொழில் வல்லுனர்கள் உங்கள் தகுதி வாய்ந்த நடவடிக்கைகள் நிர்வாகத்திற்கு நம்பிக்கை அளிக்கும். பணிகள் அனைத்தும் உங்களுக்கு சவாலாக காணப்படும். தற்பொழுது காணப்படும் பணிகளைவிட கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொள்ளத் தயாராய் இருங்கள்.விரைவான முடிவுகளை எடுக்காதீர்கள். பணியிடத்தில் உங்கள் தீங்கற்ற நடத்தை சிக்கலான சூழ்நிலையில் உங்களை காப்பாற்றும். மேஷ ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உணவு முறையில் கடுமையாக இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக காணப்பட்டாலும் ஓய்வெடுக்கத் தவறாதீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் மனம் அமைதி பெறும். உங்கள் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை மேஷ ராசி - மாணவர்கள் மாணவர்களுக்கு இது மிகவும் சாதகமான மாதம். ஆசிரியரின் சிறந்த வழிகாட்டுதல் மூலம் உங்கள் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிப்பதற்கான பிரகாசமான வாய்ப்பு காணப்படுகின்றது. தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி ஆதரவு பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 2, 3, 10, 11, 17, 20, 21, 27, 28 and 29 அசுப தினங்கள்: 7, 9, 12, 16, 22, 25 and 30

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos