Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
AstroVed Menu
AstroVed
search
search

2018 April Month’s Rasi Palan for Kumba

February 23, 2018 | Total Views : 1,679
Zoom In Zoom Out Print

கும்ப ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் முன்னேற்றம் மந்த நிலையில் இருக்கும். ஆனால் இறுதியில் நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் இலக்குகளை முடிப்பீர்கள். நீங்கள் பொறுமையுடன் தன்னம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். வளர்ச்சி படிப்படியாகத் தான் காணப்படும். உங்கள் அண்டை வீட்டாரோடு நீங்கள் கொண்டுள்ள தொடர்பு குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். விஷயங்களை நீங்கள் கையாளும் அணுகுமுறை பாராட்டைப் பெறும். நண்பர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள். புனித யாத்திரைக்கு பணம் செலவு செய்வீர்கள். பதட்டப்படாமலும் உணர்ச்சிவசப்படாமலும் இருங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். அதிகப் பணிகள் காரணமாக இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கும்ப ராசி - காதல் / திருமணம் உங்கள் வாழ்க்கைத் துணையை இந்த மாதம் சந்திப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் மிகுந்த ஆற்றலுடனும் காதலுடனும் காணப்படுவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு வரன் நிச்சயம் ஆகும். தம்பதியர்களுக்கு இது சிறப்பான நேரம். திருமண வாழ்வு சுமூகமாக இருக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : புதன் பூஜை 2018-april-months-rasi-palan-for-kumba கும்ப ராசி - நிதிநிலைமை இந்த மாதம் உங்கள் நிதி நிலைமைகளை நன்கு சமாளிப்பீர்கள். நிதி முதலீடுகளின் மூலம் உங்களுக்கு பண வரவு காணப்படும். இந்த மாதம் சேமிப்பை தொடங்க சாதகமான மாதம். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். நீங்கள் உங்கள் சமூக வட்டாரத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவு செய்வீர்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : கேது பூஜை கும்ப ராசி - வேலை இந்த மாதம் பணியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணிக்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். அவர்கள் பணியில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணிகளை முடிப்பதற்கான உங்கள் புதிய கருத்துகள் வெற்றிகளை பெற்றுத் தரும். உங்கள் அனைத்து செயல்களிலும் உங்களின் செயல் திட்டம் ஆதரவாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி பூஜை கும்ப ராசி - தொழில் இந்த மாதம் உங்கள் தொழில் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். ஆனால் எந்த முடிவையும் செயல்படுத்துவதற்கு முன் நன்றாக யோசித்து செயல்படவும். வாடிக்கையாளர்களிடமிருந்து நீங்கள் சுமூகமாக ஒப்புதல் பெறுவீர்கள். இந்த மாதம் தொழில் வளர்ச்சிக்கான புதிய மாற்றங்களை அமலாக்குவீர்கள். கும்ப ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் நீங்கள் நல்லுறவவை வளர்ப்பீர்கள். உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்கள் சிறந்த பணிக்கு நிர்வாகத்திடமிருந்து பாராட்டு பெறுவீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் நட்பான சூழ்நிலையை உருவாக்குவீர்கள். பதவி உயர்வு அல்லது ஊக்கத்தொகை பெறுவதற்கான வாய்ப்பு இந்த மாதம் உள்ளது. கும்ப ராசி - ஆரோக்கியம் வெளியிடங்களில் உணவு உண்பதன் காரணமாக இந்த மாதம் உங்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். அதிக உடல் உழைப்பு காரணமாக நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்களை உட்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : வைத்தியநாத பூஜை கும்ப ராசி - மாணவர்கள் இந்த மாதம் மாணவர்களுக்கு சாதனை நிறைந்த மகிழ்சிகரமான மாதம். விளையாட்டு நிகழ்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். இது உங்களுக்கு மனப் பதட்டத்திலிருந்து விடுபடவும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும். கல்வியில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் : 4, 5, 6, 7, 11, 17, 24, and 25 அசுப தினங்கள் : 2, 9, 12, 16, 21 and 29 banner

Leave a Reply

Submit Comment