Sins & Curses Removal Program: Invoke Shiva to help Destroy Sins & Curses, Remove Negativity & Grant Security, Success & Salvation Join Now
மிதுன ராசி பலன் 2024 | Gemini Horoscope 2024 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் வருட ராசி பலன் 2024

இந்த வருடம் உங்களுக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. சொத்து சம்மந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் வெற்றி உண்டு. குறிப்பாக பரம்பரை நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி உண்டாகும். இந்த வருடம் புதியதாக கடன் வாங்குவது கூடாது. அப்படியே சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் நீங்கள் உங்கள் கடனை திருப்பி செலுத்த கூடிய அளவு மட்டும் கடன் வாங்குவது சற்று உகந்தது. அரசு உத்தியோகத்தில் பணியில் உள்ள நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். அதனால் உங்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வருடத்தின் மத்தியில் நிலம் அல்லது அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சுய தொழிலில் உள்ளவர்கள் அக்டோபர், மற்றும் டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் தங்கள் தொழிலின் வளர்ச்சிக்காக அதிக தொழில் முதலீடுகளை செய்ய வேண்டியது வரலாம். உங்கள் சக்திக்கு மிகுதியான தொழில் முதலீடுகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் பொருளாதாரத்தில் அதிக இழப்புகளை சந்திக்காமல் தப்பிக்க முடியும்.

வருட ராசி பலன் 2024

மிதுனம்: குணாதிசயங்கள்

மிதுன ராசியினர் பன்முகத்திறமை வாய்ந்த நபர்கள். இவர்கள் பொதுவாக வணிகத் துறையில் இருப்பர். இவர்களிடம் நல்ல தொடர்பாடல் திறமை, புதுமை மற்றும் புத்திசாலித்தனம் காணப்படும். இருப்பினும் இவர்கள் விரைவான, திறமையான முடிவுகள் எடுக்கும் திறமை அற்றவர்கள். அவசர செயல்கள் / முடிவுகள் காரணமாக தவறுகளை செய்வார்கள். ஆனால் அதனை திருத்திக் கொள்ளும் திறமை இவர்களுக்கு உண்டு. மிதுன ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வர். இவர்கள் தன்னார்வத்துடன் செயல்படுபவர்கள்.

பரிகாரங்கள்:

  • வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் உள்ள சிறிய காமதேனு சிலைக்கு நைவேத்தியமாக மொச்சை சுண்டல் படைத்து வழிபட்டு வருவது தன நிலையை உயத்தும்.
  • சிறிய குதிரை சிலையை வரவேற்பு அறையில் வைப்பது உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • தங்கள் வீட்டு அருகில் உள்ள எதாவது ஒரு சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை பட்டு வஸ்திரத்தை உடுத்தி வருவது உங்கள் வாழ்க்கையின் அந்தஸ்தை உயர்த்தும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

அனைத்து வகையிலும் உயர்வு பெற லக்ஷ்மி பூஜை

சாதகமான மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC