Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
மிதுன ராசி பலன் 2025 | Gemini Horoscope 2025 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் வருட ராசி பலன் 2025

இந்த வருடம் உங்களின் தன நிலை உயரும். தன நிலையில் ஏற்றம் உண்டாவதால் உங்களின் சமூக அந்தஸ்திலும் நல்ல மாற்றம் உண்டாகும். நீங்கள் வசிக்கும் வீட்டில் கட்டுமான பணிகளுக்காகவும் புதிய மின்னணு சாதனங்கள் வாங்குவதற்காகவும் அதிக செலவுகள் செய்வீர்கள். காதல் உறவில் உள்ளவர்களுக்கு இடையே சிறிது மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே காதல் உறவில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து மனம் விட்டு பேசி கருத்து முரண்பாடுகளை களைவது நலம். திருமணத்தில் தாமதங்களை அனுபவித்து வந்தவர்களுக்கு இந்த வருடம் திருமணத்தில் இருந்த தடை நீங்கி திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். சுயமாக தொழில் செய்பவர்கள் கணக்குகளை கையாள்வதில் சற்று கவனம் தேவை. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிதாக கிடைத்த நட்பு மூலம் வேலை நுணுக்கங்களைக் கற்றுகொள்வீர்கள். இந்த வருடம் நீங்கள் நிறைய திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்வுகளில் பங்கு பெரும் வாய்ப்புகள் உள்ளது. வெளிமாநிலத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வது உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும்.

வருட ராசி பலன் 2025

மிதுனம்: குணாதிசயங்கள்

மிதுன ராசியினர் பன்முகத்திறமை வாய்ந்த நபர்கள். இவர்கள் பொதுவாக வணிகத் துறையில் இருப்பர். இவர்களிடம் நல்ல தொடர்பாடல் திறமை, புதுமை மற்றும் புத்திசாலித்தனம் காணப்படும். இருப்பினும் இவர்கள் விரைவான, திறமையான முடிவுகள் எடுக்கும் திறமை அற்றவர்கள். அவசர செயல்கள் / முடிவுகள் காரணமாக தவறுகளை செய்வார்கள். ஆனால் அதனை திருத்திக் கொள்ளும் திறமை இவர்களுக்கு உண்டு. மிதுன ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வர். இவர்கள் தன்னார்வத்துடன் செயல்படுபவர்கள்.

பரிகாரங்கள்:

  • புதன் கிழமை தோறும் விஷ்ணு பகவானுக்கு பசு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
  • சிறு குழந்தைகளுக்கு கல்விக்காக பண உதவிகள் செய்துவர உங்களுடைய தொழில் சிறக்கும்.
  • இளம் திருமணமான ஜோடிகளுக்கு புது ஆடைகள் வாங்கித்தர தன நிலையில் ஏற்றம் உண்டாகும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

குடும்பத்தில் ஐஸ்வர்யங்கள் கிடைக்க மஹா விஷ்ணு ஹோமம்

சாதகமான மாதங்கள் : ஜனவரி, மார்ச், ஜூன், ஜூலை,செப்டம்பர், அக்டோபர்.

சாதகமற்ற மாதங்கள் : பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC