Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
தனுசு ராசி பலன் 2025 | Sagittarius Horoscope 2025 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
sagittarius

தனுசு வருட ராசி பலன் 2025

இந்த வருடம் உங்களுக்கு தன வருவாயில் ஏற்றத்தையும், உத்தியோகத்தில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் யோகமான வருடமாக இருக்கப்போகிறது. பரம்பரை சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். இந்த வருடம் புதியதாக வீடு வாங்கும் யோகமும் ஏற்படப்போகிறது. தனியார் உத்தியோகத்தில் பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். வேலை பளு அதிகமாக இருக்கும் போதும் வேலையை குறித்த நேரத்தில் முடித்து உங்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். இந்த வருடத்தில் ஜூலை மாதத்திற்கு பிறகு வண்டி வாங்கும் வாய்ப்பு உள்ளது. திருமாண உறவில் உள்ளவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தங்கள் துணையுடனான புரிதல் அதிகரித்து இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்து காணப்படும். தகவல் தொடர்புத் தொழிலில் உள்ளவர்கள் வருடத்தின் ஆரம்பத்தில் புதிய தொழில் முதலீடுகளை செய்வீர்கள். வருடத்தின் மத்தியில் உங்களின் பொருளாதார நிலை அதிகரித்து காணப்படும். காதல் உறவில் உள்ளவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடப்பதன் மூலம் இருவருக்கும் இடையே அன்பு அதிகரித்து காணப்படும். இந்த வருடம் புத்திர பாக்கியம் தாமதப்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்திற்கு பிறகு குழந்தை பாக்கியமும் ஏற்படும்.

வருட ராசி பலன் 2025

தனுசு: குணாதிசயங்கள்

தனுசு ராசியில் பிறந்தவர்கள் தைரியம் மிக்கவர்கள். லட்சியம் கொண்டவர்கள். ஆர்வமூட்டும், தத்துவ, மத/ சம்பிரதாய மனப்பான்மை மற்றும் கடவுள் பயம் மிக்கவர்கள். அவர்கள் எந்த விஷயத்திலும் அதன் நன்மையைக் கருத்தில் கொண்டு நல்லது கெட்டது ஆராய்ந்து அதற்கேற்ப தனது இறுதி முடிவை எடுப்பவர்கள். இவர்கள். பொருளாதாரம், சட்டம், ஆன்மீக விஷயங்கள் போன்றவற்றில் ஆர்வம் மிக்கவர்கள்.இவர்கள் ஆசிரியர். விரிவுரையாளர், வங்கி அலுவலர், நிர்வாகம், ஆலோசகர் மற்றும் போதகராக ஆவார்கள்

பரிகாரங்கள்:

  • வியாழக் கிழமைகளில் வீட்டில் உள்ள சிறிய காமதேனு படத்திற்கு தீப தூப வழிபடு செய்வது நல்லது.
  • ஏழை மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது தன நிலையை உயர்த்தும்.
  • சிறிய யானை சிலையை தொழில் செய்யும் இடத்தில் வைப்பது தொழிலில் லாபத்தை கொடுக்கும்.
  • தங்கள் வீட்டு அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு வியாழக்கிழமை சென்று வழிபாடு செய்து வருவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

தன வருவாய் அதிகரிக்க குரு பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜூன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூலை, ஆகஸ்ட், நவம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC