27 நட்சத்திரங்களின் கடவுள், மரங்கள் மற்றும் பாடல்கள்
27 நட்சத்திரங்கள்:
வேத ஜோதிடம் எனப்படும் நமது பண்டைய ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவை - அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ஆகும்.
வான் வெளியில்; தொடர்ந்து, சுழன்று சென்று கொண்டிருக்கும் சந்திரன், இந்த 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் வழியாகவும் பயணம் மேற்கொள்கிறது. இவ்வாறு சந்திரன் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது பிறக்கும் குழந்தைக்கு, அந்த நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாக அமைகிறது.

27 நட்சத்திரங்களுக்கான பொதுவான பலன்கள் / குணங்கள்
இவ்வாறு அமையும் ஒருவரது ஜன்ம நட்சத்திரம் அவரது வாழ்க்கை, அதிர்ஷ்டம், எதிர்காலம், இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள் என அனைத்து முக்கிய அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அவரது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.
இவ்வாறு ஒவ்வொருவர் வாழ்கையிலும், இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள அவரவரது ஜன்ம நட்சத்திரத்தின் துணை கொண்டு, வாழ்வில் முன்னேற்றம் அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காண்போம்.
நட்சத்திரங்களின் அதிதேவதைகளும், மரங்களும்
இந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஆட்சி செய்யும் கடவுளர்கள் உள்ளனர். இவர்கள், நட்சத்திரங்களின் அதிதேவதைகளாக விளங்குகின்றனர். ஒருவரது ஜன்ம நட்சத்திரத்தின் கடவுளான, அந்த குறிப்பிட்ட அதிதேவதையைப் போற்றி வணங்குவதன் மூலம், அந்த நட்சத்திரத்தின் அருளைப் பெற இயலும். இது, வாழ்க்கையில் வளம், நலம், முன்னேற்றம் ஆகியவற்றைப் அடைய வழி வகுக்கும்.
மேலும், நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும், அதற்குரிய மரங்களும் உள்ளன. ஒருவர், அவரது ஜன்ம நட்சத்திரத்திற்குரிய மரத்தை, வீட்டிலோ, தோட்டத்திலோ, கோயிலிலோ நட்டு, வளர்த்து, நீர் ஊற்றிப் பராமரித்து வருவது, அந்த ஜன்ம நட்சத்திரத்தால் ஏற்படும் தோஷங்கள் போன்றவற்றை விலக்கி, அதன் அருளையும், நன்மையையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.
இவ்வாறு, ஜன்ம நட்சத்திரங்களின் அதிதேவதைகளாக விளங்கும் கடவுளர்களை வழிபடவும், அவைகளுக்குரிய மரங்களை வளர்த்துப் பயன் பெறவும் உதவும் வகையில், 27 நட்சத்திரங்களையும் ஆட்சி செய்யும் கடவுளர்கள் மற்றும் அந்த நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கள் குறித்த விவரங்கள் இங்கு தரப்படுகின்றன:              
   
நட்சத்திரம்  | 
			கடவுள்  | 
			மரம்  | 
		
| அஸ்வினி நட்சத்திரம் | விநாயகர் | எட்டி | 
| பரணி நட்சத்திரம் | ரங்கநாதர் | நெல்லி | 
| கிருத்திகை நட்சத்திரம் | ஆஞ்சநேயர் | அத்தி | 
| ரோஹிணி நட்சத்திரம் | சிவன் | நாவல் | 
| மிருகசீரிடம் நட்சத்திரம் | துர்கை | கருங்காலி | 
| திருவாதிரை நட்சத்திரம் | பைரவர் | செம்மரம் | 
| புனர்பூசம் நட்சத்திரம் | ராகவேந்திரர் | மூங்கில் | 
| பூசம் நட்சத்திரம் | சிவன் | அரசு | 
| ஆயில்யம் நட்சத்திரம் | பெருமாள் | புன்னை | 
| மகம் நட்சத்திரம் | விநாயகர் | ஆலம் | 
| பூரம் நட்சத்திரம் | ரங்கநாதர் | பலா | 
| உத்திரம் நட்சத்திரம் | ஆஞ்சநேயர் | அலரி | 
| அஸ்தம் நட்சத்திரம் | சிவன் | வேலம் | 
| சித்திரை நட்சத்திரம் | துர்க்கை | வில்வம் | 
| சுவாதி நட்சத்திரம் | பைரவர் | மருது | 
| விசாகம் நட்சத்திரம் | ராகவேந்திரர் | விலா | 
| அனுஷம் நட்சத்திரம் | சிவன் | மகிழம் | 
| கேட்டை நட்சத்திரம் | பெருமாள் | குட்டிப் பலா | 
| மூலம் நட்சத்திரம் | விநாயகர் | மா | 
| பூராடம் நட்சத்திரம் | ரங்கநாதர் | வஞ்சி | 
| உத்திராடம் நட்சத்திரம் | ஆஞ்சநேயர் | சக்கைப்பலா | 
| திருவோணம் நட்சத்திரம் | சிவன் | எருக்கு | 
| அவிட்டம் நட்சத்திரம் | துர்க்கை | வன்னி | 
| சதயம் நட்சத்திரம் | பைரவர் | கடம்பு | 
| பூரட்டாதி நட்சத்திரம் | ராகவேந்திரர் | கருமருது | 
| உத்திரட்டாதி நட்சத்திரம் | சிவன் | வேம்பு | 
| ரேவதி நட்சத்திரம் | பெருமாள் | இலுப்பை | 
மேலும், இந்த நட்சத்திரங்களின் அதிதேவதைகள் ஒவ்வொருவரையும் போற்றி வணங்க, பல மந்திரங்களும், பாடல்களும் உள்ளன. இவற்றை ஓதியும், பாடியும், அந்த கடவுளர்களை பத்தியுடனும், நம்பிக்கையுடனும் வணங்கி வருவதன் வழியாகவும், அந்த இறைவன், இறைவியின் அருளையும், அவர்கள் ஆட்சி செய்யும் ஜன்ம நட்சத்திரத்தின் ஆசியையும் பெற முடியும்.
நட்சத்திரங்களின் அதிபதி கிரகங்கள்:
27 நட்சத்திரங்களைப் போல, நமது ஜோதிட சாஸ்திரம், 9 கிரகங்களையும் கணக்கில் கொள்கிறது. நமது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும் இந்த 9 நவகிரகங்கள், 27 நட்சத்திரங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வாறு, ஒரு கிரகம் என்பது, 3 நட்சத்திரங்களின் அதிபதியாகத் திகழ்கிறது. 
இது, இவ்வாறு அமைகிறது:
| நட்சத்திரம் | அதிபதி கிரகம் | 
| அஸ்வினி, மகம், மூலம் | கேது | 
| 
			 பரணி, பூரம், பூராடம்  | 
			சுக்கிரன் | 
| கார்த்திகை, உத்திரம், உத்திராடம் | சூரியன் | 
| ரோகிணி, அஸ்தம், திருவோணம் | சந்திரன் | 
| மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் | செவ்வாய் | 
| திருவாதிரை, சுவாதி, சதயம் | ராகு | 
| புனர்பூசம், விசாகம், பூரட்டாதி | குரு (வியாழன்) | 
| பூசம், அனுஷம், உத்திரட்டாதி | சனி | 
| ஆயில்யம், கேட்டை, ரேவதி | புதன் | 
இந்த 9 கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும், ஒரு அதிதேவதை உள்ளார். அவர்கள் இவ்வாறு அமைந்துள்ளனர்.
| கிரகம் | அதிதேவதை | 
| சூரியன் | சிவபெருமான் | 
| சந்திரன் | பார்வதி தேவி | 
| செவ்வாய் | முருகப் பெருமான் | 
| புதன் | பகவான் விஷ்ணு | 
| வியாழன் (குரு) | பிரம்மா, தட்சிணாமூர்த்தி | 
| வெள்ளி | தேவி மஹாலக்ஷ்மி | 
| சனி | ஹனுமான், அய்யப்பன் | 
| ராகு | துர்கா தேவி | 
| கேது | கணபதி | 
இந்தக் கடவுளர்களை, அவர்களுக்குரிய மந்திரங்களை ஓதி, பாடல்களைப் பாடி வணங்கியும், அவர்களின் அருளைப் பெறலாம். அத்துடன் அவர்கள் ஆட்சி செய்யும் கிரகங்களின் அருளையும், அந்த கிரகங்கள் ஆளும் நட்சத்திரங்களின் ஆசியையும் பெறலாம்.
இவ்வாறு, அவரவரது ஜன்ம நட்சத்திரங்களின் தேவதைகளாக விளங்கும் கடவுளர்களை வழிபட்டு, போற்றிப் பாடி வணங்கி, அந்த நட்சத்திரங்களுக்குரிய மரங்களை நட்டு, வளர்த்துப், பாதுகாத்து, சக்தி வாய்ந்த அந்த ஜன்ம நட்சத்திரங்களின் அருளைப் பெற்று, வாழ்வில், அனைத்து வளங்களையும் அடைந்து மகிழ்வோமாக!






      
      




