மகம் ஜெகத்தை ஆளும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் எல்லோருக்கும் அந்த யோகம் அமைந்துவிடுவதில்லை. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சுதந்திர மனப்போக்கைக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய விஷயங்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை விரும்பமாட்டார்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்களாக இருப்பார்கள். கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பார்கள். எப்போதும் உண்மையே பேசுபவர்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பார்கள். அது போல் இவர்களிடம் கோபமும், குணமும் சேர்ந்தே இருக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அனுபவ அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நேரம், காலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். இவர்களது நேர்மையே அடையாளமாகவும், பலமாகவும் இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மருந்து, மாந்தீரிகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் புகழ் பெற்று விளங்குவார்கள்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கடினமான பணியையும் செய்து முடித்துவிடுவார்கள். பரந்த மனப்பான்மையும், சிறந்த நிர்வாகத் திறனையும் பெற்றவர்கள். எந்த பணியாக இருந்தாலும் தானே முன்னின்று செலயாற்ற வேண்டும் என்று எண்ணுபவர்கள். பலர் பேராசிரியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பு, விளம்பர மாடல் போன்ற துறைகளில் ஈடுபடுவார்கள். வக்கீல், நீதிபதி, ஜோதிட நிபுணர், வீட்டு உள் அலங்காரம், கட்டிட வடிவமைப்பாளர், புராதான கலாச்சாரம் மற்றும் நாகரீகம் தொடர்பான தொழில்களில் ஈடுபடுவார்கள்.
எதையும் முன்கூட்டி அறியும் திறன் பெற்றவர்கள் என்பதால் குடும்பத்தில் அனுசரித்து செல்வார்கள். காதல் திருமணம் செய்வதை விரும்புவார்கள். இளவயதிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவில் திருமணம் நடைபெறும். எப்போதும் எதையாவது மனதில் போட்டு குழப்பிக் கொண்டேயிருப்பார்கள். மனைவி, பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். இவர்களிடம் உதவி பெற்று வாழ்பவர்கள் கூட முன்னால் முகஸ்துதி பாடி விட்டு பின்னால் தூற்றிக் கொண்டிருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலின் பின்புறம் வலி ஏற்படும். சிறுநீரக பிரச்னையும், இதய பிரச்னையும், தண்டு வட பிரச்னையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. சிம்ம ராசியை சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள். சிறந்த தெய்வ பக்தியைக் கொண்டவர்கள். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களுக்கு முக்கியத்தும் அளிப்பார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள்.
எதையும் வெளிப்படையாக பேசும் தன்மையுடையவர்கள். புகழ் பெறுவதற்காக எதையும் இழக்கத் துணிபவர்கள். பேச்சிலும், வாதத்திலும் திறமைமிக்கவர்கள். நிர்வாகத் திறமை கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் உடையவர்கள். உண்மையே பேசுவார்கள். தோல்வியை தாங்கும் சக்தி இவர்களுக்கு இல்லை.
நியாயமான கோபமும், குணமும் ஒருங்கேப் பெற்றவர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். குறைந்த நேரமே தூங்குவார்கள். கவர்ச்சியான உடழலகைப் பெற்றவர்கள். சிற்றின்பத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். சுகபோகங்களை சிறுவயதிலேயே அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். கலை மீது கொண்ட ஆர்வத்தால் உயர் கல்வியில் தடைகள் ஏற்படும்.
தொழில்முனைவோராக இருக்கவே விரும்புவார்கள். யாரிடமும் கை கட்டி பணிபுரிய விரும்பாதவர்கள். பேராசிரியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பாளர், விளம்பர மாடல் போன்ற துறைகளில் செயல்படுவார்கள். மருந்து, மாந்தீரிகம், ஜோதிடம், சரித்திரம், புராண இதிகாசங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
எந்த காரியத்திலும் தனித்தன்மையோடு காணப்படுவார்கள். தங்களுக்கான விஷயத்தில் அடுத்தவர் தலையீட்டை விரும்பாதவர்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இளம் வயதிலோயே வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகத்தைப் பெற்றவர்கள்.
இதன் அதிபதி செவ்வாய் பகவான். சொத்துக்கள் சேர்ப்பதில் ஆசை கொண்டவர்கள். நல்ல அழகான தோற்றத்தைப் பெற்றவர்கள். எளிதில் பிறரை வசீகரிக்கும் குணங்களைப் பெற்றவர்கள். எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர்கள்.
இரண்டாம் பாதத்தை ஆட்சி செய்வது சுக்கிரன். பிறருக்கு உதவும் இரக்கக் குணம் கொண்டவர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள். இசை, நடனம், நாடகம், தகவல் தொடர்பு துறைகளில் கோலோச்சுவார்கள். ஆத்திரத்தோடு அனுதாபமும் இருக்கும்.
புதன் இந்த பாதத்தை ஆள்கிறார். எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். சொன்ன சொல் தவறமாட்டார்கள். இனிமையான இல்லறம் அல்லது பற்றில்லாத துறவறம் என்று எல்லைகளுக்கப்பால் சிந்திக்கும் குணம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும், பிறருக்கு உதவுகின்ற குணத்தையும் பெற்றவர்கள்.
இதன் அதிபதியாக சந்திரன் ஆள்கிறார். பேராசை, பொறாமை, முன்கோபம் போன்ற குணங்களைக் கொண்டவர்கள். சுயநலவாதிகள். ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர்கள். நன்றியை மறப்பவர்கள். எப்போதும் தான் முதன்மையாக திகழ வேண்டும் என எண்ணுபவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம், விராலிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். தாயார் மரகதவல்லி, மாணிக்கவல்லி. மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களது தோஷங்கள் அகல இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர். மாசி மகத்தன்று சிவனுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜை நடைபெறும். மகம் நட்சத்திரக்காரர்கள் இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெறுவதற்காக சிவன் சன்னதியில் நெய் தீபமேற்றுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடுள்ளவர்கள் குறை நீங்க சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.