Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
ரோகிணி நட்சத்திரம் பலன்கள் / குணங்கள், Rohini Natchathiram Palangal/Gunangal
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ரோகிணி நட்சத்திர பலன்கள்

ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தனது அழகாலும், திறமையாலும் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். மென்மையான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். எதிலும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். பாசமுள்ளவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் விளங்குவார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். சிறந்த கற்பனை வளமும், படைப்பாற்றல் திறன் இருக்கும். சில சமயங்களில் மன சஞ்சலங்களால் அமைதியை இழந்து தவிப்பார்கள். கடினமாக உழைக்கும் திறன் கொண்டவர்கள். எந்தத் தவறுகளையும் பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பரோபகார மனம் கொண்டவர்கள். பாரம்பரியமான சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும், நவீனத்தையும் விரும்புவார்கள். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் முழு அர்ப்பணிப்போடு செயல்படுவார்கள். இவர்களது வாழ்க்கை ஏற்ற, இறக்கங்களைக் கொண்டதாக இருக்கும். ஜன வசீகரம் நிறைந்த நட்சத்திரம் என்பதால் திரைத்துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள். குடும்பம் மற்றும் சமுதாய நியதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.

கல்வி

கல்வி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமையான சிற்பிகளாகவும், நடனம் மற்றும் இசைத்துறை கலைஞர்களாகவும், இயக்குனர்களாகவும் விளங்குவார்கள். பள்ளி, கல்லூரி கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டுக்களைப் பெறுவார்கள்.

தொழில்

தொழில்

நிர்வாகத் திறமை குறைவானவராக இருந்தாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். தொழிலாளர்களை சரிசமமாக நடத்துவார்கள். கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றை எழுதுபவர்களாகவும், திரைத்துறையில் பெரிய கலைஞர்களாகவும் இருப்பார்கள். உணவு விடுதி, ரெஸ்டாரெண்ட், லாட்ஜ் உரிமையாளர்களாகவும், பால் பண்ணை மற்றும் கரும்பு சார்ந்த துறைகளில் வல்லுனர்களாகவும் இருப்பார்கள். விற்பனைத் துறையிலும் சம்பாதிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். இரும்பு வியாபாரத்திலும் இருப்பார்கள்.

குடும்பம்

குடும்பம்

விட்டுக் கொடுக்கும் குணத்தைப் பெற்றிருப்பதால் குடும்பத்தில் எப்போதும் குதூகலம் நிலவும். சண்டைகள் வந்தாலும் எளிதாக பேசி சமாளித்து விடுவார்கள். நினைத்ததை நினைத்தபடி அடையக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். செல்வமும், செல்வாக்கும் நிறைந்திருக்கும். காதல் திருமணம் இவர்களுக்கு கைகூடும். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்புவதால் சோம்பேறித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

ரோகிணியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் உச்ச ராசியான ரிஷப ராசி என்பதால் அடிக்கடி ஜல சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். முகப்பரு, கண், மூக்கு, தொண்டைகளில் பிரச்னை, மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

ரோகிணி நட்சத்திர குணங்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரம் ரோகிணி. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். ராசிநாதன் சுக்கிரன். ரோகிணி நட்சத்திரம் உயிர்த்தன்மை, இயற்கை வளர்ச்சியின், உயிர்களின் பெருக்கம் ஆகிய குணாம்சங்களை வெளிப்படுத்துகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம் பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மை கொண்டது.

பொதுவான குணங்கள்

பொதுவான குணங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றுக் கொள்வதில் வல்லவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அன்பைப் பெற்றிருப்பார்கள். எதையும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பவர்கள். சுதந்திரமானவர்கள். பெரியோர்களின் அறிவுரை மதித்து நடப்பார்கள். மொழிப் பாடங்களில் பண்டிதராக விளங்குவார்கள். பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் சிறந்தவர்கள்.

வருங்காலத்தை முன்கூட்டியே உணரும் ஆற்றலைப் பெற்றவர்கள். பெண்கள் விரும்புவராக இருப்பார்கள். தங்க ஆபரணங்களையும், உயர்ந்த ரத்தினங்களையும் அணிபவராக விளங்குவார்கள். அதிர்ந்து பேசாத மென்மையான குணம் கொண்டவர்கள். சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக திருப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதிகம் பேசாமல் செயல் மூலமாக பல விஷயங்களை தெரியப்படுத்துவார்கள்.

சிறந்த படைப்பாற்றல் திறனும் கற்பனை வளமும் கொண்டவர்கள். மனசஞ்சலங்களால் சமயங்களில் அமைதியிழந்தும் காணப்படுவர். இவர்களின் அழகும், ஆடம்பர வாழ்க்கையும் மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும். கடின உழைப்பை மேற்கொள்பவர்கள். தங்களது படைப்பாற்றலாலும், புத்திசாலித்தனாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள். பிறர் தனக்கு எவ்வளவு தீங்குகள் விளைவித்தாலும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அவர்களுக்கு உதவும் பரோபகார மனம் கொண்டவர்கள். நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திர பகவான் இருப்பதால் எளிதில் மற்றவர் தவறுகளை மன்னித்து மறந்துவிடுவார்கள். மனதில் வஞ்சம் இருக்காது. ஜனங்களை கவரும் நட்சத்திரம் என்பதால் திரைத்துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள்.

எதையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெற்றவர்கள். பள்ளிகளில் கலை தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளுவார்கள். ரோகிணி நட்சத்திர ஆண்கள் தனது மனைவியிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமையான சிற்பிகளாகவும், நடனம் மற்றும் இசைக் கலைஞர்கள், படைப்பாற்றல் இயக்குனர்களாக திகழ்வார்கள். விவசாயம், சுற்றுச்சூழல் தொழில்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். விளம்ரபம், கதை எழுதுவது, மார்க்கெட்டிங் மற்றும் நகைகள் வடிவமைத்தல் போன்ற தொழில்களில் பெரிய உச்சங்களைத் தொடுவார்கள்.

ரோகிணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம்

முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்குரிய செவ்வாய் பகவானின் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். சுகபோகங்களை அனுபவிக்க ஆர்வம் கொள்வார்கள். தான தர்மம் செய்பவர்களாக இருப்பார்கள். எப்போதும் மனப்போராட்டத்துடன் செயலாற்றுவார்கள். பூர்வீக சொத்துக்களை அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள். காவல்துறை, ராணுவத்தில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ரோகிணி இரண்டாம் பாதம்

இரண்டாம் பாதம் சுக்கிர பகவான் ஆதிக்கத்திற்குள் வருகிறது. இதில் பிறந்தவர்களுக்கு செல்வத்திற்கு குறைவிருக்காது. சொகுசான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். எந்த விஷயத்தையும் கலையார்வத்தோடு ரசித்து செய்வார்கள். அழகியத் தோற்றமும் உடலமைப்பும் பிறரைக் கவரும் விதமாக இருக்கும். சாந்தமான குணத்தைப் பெற்றிருந்தாலும் நெருக்கடி வரும் வேளைகளில் வீராவேசத்தோடு செயல்படுவார்கள். தர்ம சிந்தனை, இரக்கம், பொதுநலத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். விரும்பியது கிடைக்காவிட்டால் பெரும் துன்பத்திற்குள்ளாவார்கள்.

ரோகிணி மூன்றாம் பாதம்

புதன் பகவானின் ஆதிக்கம் பெற்ற பாதம் இது. இதில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிறந்த சிந்தனைத் திறனோடு புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். சிறந்த கல்விமானாக இருப்பார்கள். கணிதம், அறிவியல் துறைகளில் மிகப்பெரிய சாதனைகளை படைப்பார்கள். ஓவியம், சிற்பம், நடனம், இசை ஆகிய கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். சிலர் இந்தக் கலைகளில் நிபுணத்துவம் பெற்று பெயரையும், புகழையும் சம்பாதிப்பார்கள். நடுத்தர வயதிற்குள்ளாகவே பெரும் செல்வந்தராகும் யோகம் பெற்றவர்கள்.

ரோகிணி நான்காம் பாதம்

ரோகிணி நட்சத்திரத்தின் நான்காம் பாதம் சந்திர பகவானின் ஆளுகைக்குள் வருகிறது. திடமான மனோபலத்தை பெற்றிருப்பார்கள். என்ன விரும்புகிறார்களே அதை அடைவதற்கு முயல்வார்கள். குடும்ப பற்றுள்ளவர்கள். எதையும் பொறுமையாக சாதிக்கும் குணம் கொண்டவர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள். அரிசி, மருந்து மீன் தொடர்பான தொழில்களில் மிகப்பெரிய செல்வத்தை ஈட்டுவார்கள். ஒரு சிலர் அரசியல் துறையில் ஈடுபட்டு பெரிய பதவிகளை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பெரும் பொருளையும், புகழையும் ஈட்டுவார்கள்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் கோயில். தாயார் சத்யபாமா, ருக்மணி. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் அகல இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இத்தலத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணரை தரிசித்து வந்தால் எந்த துன்பமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது ஐதீகம்.