மனித வாழ்க்கையில் திருமணம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிலருக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் என்ன நடக்க வேண்டுமோ அது தடங்கலின்றி நடைபெறும். அதற்கு காரணம் அவர்களது ஜாதக அமைப்பு அவ்வாறு இருக்கும். சரியான நேரத்தில் கல்வி, வேலை, தொழில், திருமணம், புத்திர பாக்கியம் அமையும். ஆனால் சிலருக்கோ இவை எல்லாவற்றுக்கும் குட்டிக் கரணம் போட வேண்டிய சூழல் இருக்கும். அதிலும் குறிப்பாக சரியான வயதில் திருமணம் நடைபெறாமல் தள்ளிக் கொண்டே போகும். அதே போல திருமணம் நடைபெற்றாலும் குழந்தை பிறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும். இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தில் அமைந்துள்ள நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் தான். இந்த கிரகங்கள் ஜாதகத்தில் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும்.
ஜோதிடத்தில் நிழற்கிரகங்கள் என ராகுவும், கேதுவும் அறியப்பட்டாலும், இவைகள் இரண்டும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள். நவகிரகங்களில் ராகு, கேதுவின் பெருமைகளைப் பற்றியும், ஒவ்வொரு ராசிகளிலும் சஞ்சரிக்கும் போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றியும் பண்டைய ஜாதக நூல்களில் நமது முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
காலசர்ப்ப தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற கால சர்ப்ப ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்யுங்கள்
நாக தோஷம் ஏன் ஏற்படுகிறது?
முன்ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் இணைந்திருக்கும் போது துன்புறுத்தியிருந்தால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு நின்று கணவருக்கு தோஷத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதே போன்று பாம்பு தன்னுடைய பசிக்காக இரையைத் தேடி செல்லும் போது அதை துன்புறுத்தியிருந்தால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படுகின்ற லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று தொழிலுக்கு தோஷத்தை உருவாக்கும்.
பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் போது துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில் ராகுவோ, கேதுவோ நின்று தோஷத்தை ஏற்படுத்தும். ஜாதகத்திலே நாக தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு நான்கு, பதிமூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு என வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும் என்று சொல்லப்படுகிறது.
நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது?
புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும் கடுமையான தவம் செய்வதற்கு, கடுமையான விஷ ஜந்துக்களினால் ஆபத்து ஏற்படுமா என்ற அறிந்த பின்னரே சன்னியாசம் வழங்கப்பட்டது. இதற்காகத் தான் நாகதோஷம் பார்க்கப்பட்டது. பின்னாளில் இந்த தோஷத்தை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கும் அளவுக்கு போய்விட்டது.
ஜாதகத்தில் நாகதோஷம்:
ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேது தோஷம் இருக்கிறதா என கண்டறிய வேண்டுமென்றால், அந்த ஜாதகமானது பிறந்த நாள், நேரம், கிழமை, நட்சத்திர நிலை, கிரகங்களின் நிலை போன்ற அனைத்தும் சரியான முறையில் கணிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்க வேண்டியது அவசியம். அந்த ஜாதகத்தில் லக்னம் எனக் குறிப்பிடப்படும் ‘ல’ என்கிற எழுத்து ஜாதக கட்டங்களில் ஏதேனும் ஒரு கட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். இந்த லக்னம் தான் ஒருவருக்கு முதல் வீடு. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் மிதுன ராசியில் ‘ல’ என்கிற எழுத்து எழுதப்பட்டிருக்குமானால், அந்த மிதுன ராசி தான் அந்த ஜாதகரின் லக்னம் மற்றும் முதல் வீடாக அமைகிறது. இந்த மிதுன லக்னத்திற்கு அடுத்த கடகம், சிம்மம், கன்னி என கடிகார சுற்றுமுறையில் 12 வீடுகளை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
அந்த விதத்தில் ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் லக்னம், 2,7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது கிரகம் இருக்குமேயானால் அந்த ஜாதகருக்கு ராகு, கேது தோஷம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் மேற்கூறிய 1,2,7,8 ஆம் வீடுகளில் ராகு, கேது கிரகங்கள் இருந்தாலும், அந்த வீடுகள் ராகு, கேது கிரகங்களுக்கு உச்ச வீடாகவோ, அல்லது நட்பு வீடாக இருக்கும் பட்சத்தில் ராகு, கேது தோஷம் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் மேற்கூறப்பட்ட வீடுகள் ராகு, கேதுவுக்கு நீச்ச வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ராகு, கேது தோஷத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் லக்கினம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு – கேது கிரகங்கள் இருந்து, ராகு – கேது தோஷம் ஏற்பட்டிருக்குமானால் இதே போன்று ஜாதக அமைப்பை கொண்ட ஆண் அல்லது பெண் வரனை ராகு – கேது தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதால் ராகு – கேது தோஷ நிவர்த்தி உண்டாகிறது.
பரிகாரங்கள்:
கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருக்காளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும். ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.
Leave a Reply