Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

முருகன் 125 பெயர்கள் | Lord Murugan Names In Tamil | Murugan Peyargal

November 24, 2020 | Total Views : 8,793
Zoom In Zoom Out Print

முருகன் என்றால் அழகு, இளமை என்று பொருள்படும். தமிழ்ச் சமுதாயத்தில் முருக வழிபாடு தொடர்பான சான்றுகள் ஏறக்குறைய தொல்காப்பிய காலத்திலிருந்து இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. உணவை உற்பத்தி செய்யும் காலத்தில் அல்லாமல், உணவைத் தேடி அலையும் காலத்தில் தோன்றிய கடவுள் முருகன் என்றும் சொல்லப்படுகிறது. இயற்கையை வணங்கிய கால கட்டம் அது.

கடவுளை வணங்குவதற்கு ஒரு உருவத்தை தேடினார்கள் மக்கள். அப்போது கூட ஒரு மனித உருவத்தை அவர்கள் வணங்க முற்படவில்லை. உணவைத் தேடி மிருகங்களை வேட்டையாடவும், அம்மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் அவர்கள் வடிவமைத்திருந்த கருவி தான் வேல். அதனால் வேலை வணங்க ஆரம்பித்தார்கள். வேலைப் பயன்படுத்துபவன் வேலன். இந்த வேலன் தான் பின்னர் முருகன், முதல் உருவ வணக்கம்  வேலில் தான் தோன்றியது.

இந்தியாவில் இந்துக் கடவுள்களை குறிக்கக்கூடிய ஆறு விதமான சமயங்கள் இருக்கின்றன.  அவை, சைவம் - சிவன் வழிபாடு, சாக்தம் - சக்தி வழிபாடு, காணாபத்யம் - கணபதி வழிபாடு, வைணவம் - திருமால் வழிபாடு, கௌமாரம் - முருகன் வழிபாடு. சௌரம் - சூரிய வழிபாடு என ஆறு வகையான சமயங்கள் இருக்கிறது. ஜோதிடம், ஆன்மீகம்,இன்றைய பஞ்சாங்கம் இன்றைய நட்சத்திர பலன், வார ராசி பலன்கள் குறித்த தகவலை அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது. முருகனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயமே கௌமாரம் என்று கூறப்படுகிறது.

பூமியிலே முதலில் தோன்றியது மலை. மலையும், மலை சார்ந்த பகுதியையும், ‘குறிஞ்சி நிலம்’ என்று அழைப்பது தமிழர் மரபு. அந்த குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுள் முருகன். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று  கூறுவார்கள். இத்தனை சிறப்புகள் வாய்ந்த தமிழுக்கு முதல்வன் சிவன். அந்த சிவன் முதலில் ஞானத்தைப் போதித்தது முருகனுக்கே என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்புகளும், தனித்துவமும் வாய்ந்த முருகப்பெருமானுக்கு பல அழகிய பெயர்கள் உண்டு. அவற்றில் சில பெயர்களை இக்கட்டுரையில் காண்போம்.

முருகப்பெருமானின் பெயர்கள்:

1. சக்திபாலன்
2. சரவணன், 
3. சுப்ரமண்யன், 
4. குருபரன், 
5. கார்த்திகேயன், 
6. சுவாமிநாதன்,
7. தண்டபானி, 
8. குக அமுதன், 
9. பாலசுப்ரமணியம், 
10. நிமலன், 
11. உதயகுமாரன், 
12. பரமகுரு, 
13. உமைபாலன், 
14. தமிழ்செல்வன், 
15. சுதாகரன், 
16. சத்குணசீலன், 
17. சந்திரமுகன், 
18. அமரேசன், 
19. மயூரவாஹனன், 
20. செந்தில்குமார்,
21. தணிகைவேலன், 
22. குகானந்தன், 
23. பழனிநாதன், 
24. தேவசேனாபதி, 
25. தீஷிதன்.
26. கிருபாகரன், 
27. பூபாலன், 
28. சண்முகம், 
29 .உத்தமசீலன், 
30. குருசாமி, 
31. திருஆறுமுகம், 
32. ஜெயபாலன், 
33. சந்திரகாந்தன், 
34. பிரபாகரன், 
35. சௌந்தரீகன், 
36. வேல்முருகன், 
37. பரமபரன், 
38. வேலய்யா, 
39. தனபாலன், 
40. படையப்பன், 
41. கருணாகரன், 
42. சேனாபதி, 
43. குகன், 
44. சித்தன், 
45. சைலொளிபவன், 
46. கருணாலயன், 
47. திரிபுரபவன், 
48. பேரழகன், 
49. கந்தவேல், 
50. விசாகனன்.
51. சிவகுமார், 
52. ரத்னதீபன், 
53. லோகநாதன், 
54. தீனரீசன், 
55. சண்முகலிங்கம், 
56. குமரகுரு, 
57. முத்துக்குமரன், 
58. அழகப்பன், 
59. தமிழ்வேல், 
60. மருதமலை 
61. சுசிகரன், 
62. குமரன், 
63. தயாகரன், 
64. ஞானவேல், 
65. சிவகார்த்திக்
66. குஞ்சரிமணாளன், 
67. முருகவேல், 
68. குணாதரன், 
69. அமுதன், 
70. செங்கதிர்செல்வன், 
71. பவன்கந்தன், 
72. திருமுகம், 
73. கதிர்காமன், 
74. வெற்றிவேல், 
75. ஸ்கந்தகுரு.
76. பாலமுருகன், 
77. மனோதீதன்,
78. சிஷிவாகனன், 
79. இந்திரமருகன்,
80. செவ்வேல், 
81. மயில்வீரா, 
82. குருநாதன், 
83. பழனிச்சாமி, 
84. திருச்செந்தில், 
85. சங்கர்குமார், 
86. சூரவேல், 
87. குருமூர்த்தி, 
88. சுகிர்தன், 
89. பவன், 
90. கந்தசாமி, 
91. ஆறுமுகவேலன், 
92. வைரவேல், 
93. அன்பழகன்,  
94. முத்தப்பன், 
95. சரவணபவன், 
96. செல்வவேல் 
97. கிரிசலன், 
98. குலிசாயுதன், 
99. அழகன், 
100. தண்ணீர்மலயன்.
101. ராஜவேல், 
102. மயில்பிரீதன், 
103. நாதரூபன், 
104. மாலவன்மருகன், 
105. ஜெயகுமார், 
106. செந்தில்வேல், 
107. தங்கவேல், 
108. முத்துவேல், 
109. பழனிவேல், 
110. கதிர்வேல், 
111. ராஜசுப்ரமணியம், 
112. மயூரகந்தன், 
113. சுகதீபன், 
114. குமரேசன், 
115. சுப்பய்யா, 
116. கார்த்திக், 
117. சக்திதரன்,
118. முத்துக் குமரன், 
119. வேலவன், 
120. கதிர் வேலன், 
121. விசாகன், 
122. கந்தன், 
123. விசாகன், 
124. குமாரன், 
125. அக்னி பூ.

முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவபிரானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.

banner

Leave a Reply

Submit Comment