x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2019 – தனுசு : Dhanusu Rasi 2019 (Sagittarius)

May 31, 2018 | Total Views : 22,831
Zoom In Zoom Out Print

தனுசு ராசி - பொதுப்பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த 2019ம்  ஆண்டு பல புதிய விஷயங்களை அனுபவித்து வாழக் கூடிய வருடமாக இருக்கும். இரவு பகல், நன்மை தீமை என வாழ்வில் அனைத்திலும் இரண்டு பக்கங்கள் இருப்பது போல உங்கள் வாழ்விலும் இந்த வருடம் கசப்பு இனிப்பு என இரண்டு உணர்வுகளும் மாறி மாறி வருவதற்கான சாத்தியம் உள்ளது. நீர் கலந்த பாலில் நீரைப் பிரித்து பாலை அருந்தும்  அன்னப்பறவை போல சிறந்ததை தேர்தெடுக்கும் திறமையில் தான் உங்கள் வாழ்க்கையின் இன்பம் அமையும். இதற்கு பொறுமை தேவை என்பதை நாங்கள் கூறவும் வேண்டுமா? திருவள்ளுவர் கூறும் நாவடக்கத்தை நினைவில் கொண்டு புதிய நபர்களிடம் உரையாடுங்கள். நேர்மறையாக சிந்திப்பது நல்லது என்று நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நீங்கள் அதனை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தன் கையே தனக்குதவி என்பது போல இப்பொழுது உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் இளம் வயதினராக  இருந்தால் உங்களை நீங்கள் சீர்படுத்திக் கொள்ளலாம். ஐம்பதைக் கடந்திருந்தால் உங்கள் குழந்தைகளின் வாழ்வை சீரமைத்து தரலாம். உங்கள் குழந்தையும் உங்கள் ராசியாக இருந்தால் கல்வியில் வளம் காண்பது இக்காலக் கட்டத்தில் சிறிது கடினம் என்று உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் சண்டையை தவிர்த்து சமாதானமாய் நடந்து கொள்ளுங்கள். குடும்பத் தேவைகளை மகிழ்வுடன் நிறைவேற்றுங்கள்.

new-year-rasi-palangal-2019-dhanusu

தனுசு ராசி - வேலை

தனுசு ராசிக் காரர்களுக்கு பணியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வளர்ச்சி காணப்படும். ஆனால் வலியில்லாமல் பலனில்லை அல்லவா? எனவே வேலைப் பளு அதிகமாகத் தான் இருக்கும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல நெளிவு சுளிவு அறிந்திருக்கும் நீங்கள் இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம். உலகத்தோடு ஒத்து வாழ்வதே நன்மை என்பதால் மற்றவர் விருப்பத்தையும் உணர்ந்து அதற்கேற்றார்ப்போல செயல்படுங்கள். எதிர்காலம் குறித்த  நம்பிக்கை அவசியம் தான். அது வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாக்குறுதி அளித்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

ஹனுமான் ஹோமம் செய்து உங்கள் பணியை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

தனுசு ராசி - நிதி நிலைமை

தனுசு ராசிக்கரர்களுக்கு பிறக்கும் இந்த புத்தாண்டு நிதி நிலையிலும் புதிய தொடக்கத்தை கொண்டு  வரும். எதிர்பாராத செலவுகள் வந்தால் என்ன? உங்களால் தான் சமாளிக்க இயலுமே.

நீங்கள் போட்டிருக்கும் பட்ஜெட்டை தாண்டி செலவுகள் செய்ய நேர்ந்தாலும் அந்த செலவு சுப நிகழ்சிக்கு என்றால் மகிழ்ச்சி இரட்டிப்பு தானே ஆகும். அதனால் கவலையை விடுங்கள். ஆனால் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அடக்கம் காட்டுங்கள். அவற்றை தள்ளிப் போடுங்கள். செலவு செய்ய பணம் தேவை என்று முதலீடு மற்றும் சேமிப்புகளில் கை வைக்காதீர்கள்.

லக்ஷ்மி ஹோமம் செய்து உங்கள் நிதிநிலையை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

தனுசு ராசி - காதல் மற்றும் உறவுநிலை

தனுசு ராசிக்காரர்களின் காதல் உறவில் பலன்கள் கலந்து காணப்படும். காதல் உறவு கைகூடி வர நீங்கள் சில தியாகங்களை செய்ய வேண்டும். சண்டையிடுவதை விட சரணடைவதே மேல் அல்லவா? எனவே உங்கள் துணையின் வார்த்தைப் படி நடந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் உங்களுக்கு இந்தக் காலக் கட்டத்தில் பலனளிக்காது. காலம் கணியும். அது வரை காத்திருங்கள். அவசரம் வேண்டாம். விழிப்புடன் செயல்படுங்கள். உறவில் உண்மையையும் நம்பிக்கையையும் மேற்கொள்ளுங்கள்.

ருத்ர ஹோமம் செய்து உங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

தனுசு ராசி - ஆரோக்கியம்

தனுசு ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு ஆரோக்கியமான ஆண்டாகவே இருக்கும். ஏற்கனவே இருக்கும் பிணிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறலாம். அதிக தண்ணீர் அருந்துவதன் மூலம் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். உணவு முறையில் கவனம் தேவை. காலை உணவை தவிர்த்தல் நல்லதல்ல. பயணங்களின் போது  தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் பழங்கள் சாப்பிடுங்கள். சத்தான உணவை உட்கொள்ளுங்கள். பயணத்தின் போது அதிலும் குறிப்பாக நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருங்கள். சில சமயங்களில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பதட்டம் தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தன்வந்திரி ஹோமம் செய்து உங்கள் முழு ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள்.

தனுசு ராசி - மாணவர்கள்

தனுசு ராசி மாணவர்கள், முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பதை உணர்ந்து அதிக முயற்சி செய்ய வேண்டும். அதிக முயற்சி இருந்தால் நீங்கள் தேர்வுகளில் வெற்றி காணலாம். அவ்வையாரின் ஊக்கமது கைவிடேல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கவனம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே வகுப்பில் கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள்.

கல்வியில் வெற்றி பெற சரஸ்வதி யந்திரம்

பொதுப் பரிகாரம்

மஹா சுதர்சன ஹோமம்

வீட்டுப் பரிகாரங்கள்

 • உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு வீட்டில் செய்த இனிப்புகளை வழங்குங்கள்
 • உங்கள் வீட்டு / குடும்ப / அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள்.

ஜெபிக்க வேண்டிய மந்திரம் “ஓம் பக்தவத்சலாய நமஹ” - தினமும் 108 முறை

சாதகமான மாதங்கள்: மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட்

பாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, ஜூலை, டிசம்பர்

இந்த மாதங்களில் உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கவும். பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களை செய்யவும்.

 • shanmugam
  shanmugam2723@gmail.com
  SIR,
  November 14, 2018
 • shanmugam
  shanmugam2723@gmail.com
  SIR, VERY VERY USEFUL FOR LIFE
  November 14, 2018

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos