AstroVed Menu
AstroVed
search
search

புத்தாண்டு ராசி பலன்கள் 2019 – மகரம் : Makara Rasi 2019 (Capricorn)

dateSeptember 19, 2018

மகர ராசி - பொதுப்பலன்கள்

இந்த ஆண்டில் நீங்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் செயல்படுவீர்கள். முக்கியமான விஷயங்களை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி காண்பீர்கள். வாழ்வில் புதிய மைல்கல்லை அடைவீர்கள் என்றாலும் வரும் பிப்ரவரி மாதம் நீங்கள் சூழ்நிலையை திறமையாகக் கையாள வேண்டியிருக்கும். இந்த ஆண்டு உங்களை மேம்படுத்திக் கொள்ள நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். நண்பர்களும் சக பணியாளர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பிறருடன் கலந்து பழகி அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். அறிமுகமல்லாத நபர்களுடன் அதிகம் பேச்சு வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். உங்களைச் சுற்றி நடப்பவைகளை கண்காணியுங்கள். உங்கள் மனதில் சிறிது குழப்பம் காணப்படும். எனவே விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம். பண விஷயங்களிலும் உங்கள் முயற்சிகளிலும் நீங்கள் சிறிது ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன் வீட்டில் உள்ள மூத்தவர்களிடம் அல்லது நம்பகமானவர்களிடம் ஆலோசனை பெற்றிடுங்கள். வீடு சமூகம் என இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் பரபரப்பாக இருக்கும் காரணத்தால் உங்கள் தூக்கம் கெட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டில் சிறப்பாக திட்டமிட்டு உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிப்பீர்கள்.

Makara Rasi Palan 2019

மகர ராசி - வேலை

தொழிலைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நீங்கள் மிகவும் பரபரப்பாக செயலாற்றுவீர்கள். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். சவாலான சூழ்நிலை காணப்படுகின்றது. நேரத்தோடு வேலையை முடிப்பதன் மூலம் வெற்றியை எதிர்பார்கலாம். சில சமயங்களில் வெற்றி கிடைக்காமலும் போகலாம். காலம் கனியும் வரை பொறுமையோடு காத்திருந்தால் உங்கள் திறமைகளும் வெளிப்படும்,வெற்றிக் கனியையும் பறிக்கலாம். பயணங்கள் அதிகம் செய்ய நேரும். எனவே அலைச்சலை தவிர்க்க பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டியது அவசியம்.

இந்த ஆண்டு, நீங்கள் உங்கள் தொழிலில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். உங்கள் செலவினங்களை சந்திக்க நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில்  உங்களுக்கு  முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரத்திலும் சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருப்பவர்கள் அதிக பயணம் செய்ய நேரிடும். வேலையில் நோக்கமற்ற அலைச்சலைத்  தவிர்க்க திட்டமிட்டு செயல்படுங்கள்.  சவாலான சூழலில் நீங்கள் வேலை செய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது. எனினும், மற்றவர்களுக்கு அது கடினமாக தோன்றினாலும் நீங்கள் அதை வெகு சுலபமாக கையாளுவீர்கள். பொறுமையுடன் முடிக்க வேண்டிய முக்கிய பணிகளை உங்கள் அலுவலகத்தில் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் பணிபுரிபவராக இருந்தால் அலுவலகத்தில் பல விதமான தொல்லைகளை சந்திக்க நேரும். உங்கள் பொறுமை மூலம் நீங்கள் அவற்றை எல்லாம் சமாளித்து விடுவீர்கள். சோர்வாக இருப்பது போன்ற உணர்வு எப்பொழுதும் காணப்படும். என்றாலும் மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் உங்கள் கடின உழைப்பிற்கு சரியான நேரத்தில் வெகுமதி மற்றும் பாராட்டு கிடைக்கும்.

தொழிலில் வெற்றி அடைய ஹனுமன் ஹோமம்

மகர ராசி - நிதி நிலைமை

இந்த 2019 ஆம் ஆண்டில் நிதி நிலைமையில் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதற்கு உங்கள் பொறுமை, விடாமுயற்சி மற்றும் செயல்திறன் ஆகியவைமுக்கிய காரணமாக  இருக்கும். உங்கள் பணப் பெட்டி நிரம்பி வழியும் அளவிற்கு பண வரவு காண்பீர்கள். அதே சமயத்தில் பெரிய பெரிய செலவினங்களையும் நீங்கள் எதிர் கொள்ள நேரும். தேவையற்ற செலவுகளை மேற்கொண்டு பின்னர் வருந்துவதற்கு இடம் அளிக்காதீர்கள். எனவே திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்ளுங்கள். பணத்தை பயனுள்ள வகையில் முதலீடு செய்யுங்கள். குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டிற்காக முதலீடு செய்யுங்கள். வாங்கியிருக்கும் கடனை அடைத்து விடுங்கள். தான தரமங்களுக்கும் சிறிது செலவழியுங்கள். இந்த வருடம் ஜூலை மாதத்திற்குப் பிறகு உங்கள் தந்தையின் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள்.

செல்வச் செழிப்பு பெற தன ஆகர்ஷன யந்திரம்

மகர ராசி - காதல் மற்றும் உறவு

மகர ராசி காதலர்களுக்கு இந்த வருட நாட்கள் இனிமையாக இருக்கும். உங்கள் காதலுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். வருட ஆரம்பத்தில் உறவில் சில குழப்பங்கள் காணப்படும். உறவில் சிறிய விரிசல் ஏற்பட்டு பிரிந்த காதலர்கள் கூட ஒன்று கூடும் காலம். என்றாலும் அவ்வப்போது கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் ஏற்படும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை புரிந்து கொண்டு உறுதியுடன் பொறுமை காப்பதன் மூலம் உறவில் வெற்றி காணலாம். எனவே முடிவுகளில் அவசரம் வேண்டாம். ரகசிய காதல்கள்  அம்பலமாகும் நேரம் இது. உங்கள் துணையுடன் அமைதியாக இருங்கள். உறுதியான வார்த்தைகளைப் பேசுங்கள். வாழ்க்கை சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள்.

திருமண வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சினைகள் தீர உமா மகேஸ்வர பூஜை

மகர ராசி - ஆரோக்கியம்

இந்த ஆண்டில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்றாலும் நீங்கள் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு மார்ச் மாதம் உங்கள் இடது கண்ணில் சிறிய அளவில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. அதே சமயத்தில் உங்கள் நோய்களுக்கு சிகிச்சை காண நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை கண்டறியும் காலம் இது. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நிகழ்சிகளில் பங்கு கொள்ளுங்கள். மேலும் உடற் பயற்சி மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.   மேலும் நல்ல உணவுப் பழக்கம் சிறந்த ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். எனவே வெளியில் உண்பதை தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ளுங்கள். பழம் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவை தவிர்க்காதீர்கள். பயணங்களை  முன் கூட்டியே திட்டமிடுங்கள். வேகப் பயணத்தை தவிர்த்திடுங்கள்.  

நல்ல ஆரோக்கியம் பெற ராம ரக்ஷ யந்திரம்

மகர ராசி - மாணவர்கள்

இந்த ஆண்டு மாணவர்கள் எளிதில் வெற்றி காண்பது கடினம். சிறப்பாக கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். சோம்பேறித்தனத்தை அறவே ஒழிக்க வேண்டும். மந்த இயல்பை கைவிட்டு விட்டு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். குழந்தைகள் அதிக முயற்சி செய்ய பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

தேர்வுகளில் வெற்றி பெற சரஸ்வதி ஹோமம்

பொது பரிகாரம்

கணபதி ஹோமம்

வீட்டுப் பரிகாரங்கள்

  • பயணங்களின் போது ஏழைகளுக்கு இனிப்பு வழங்கவும்  
  • உங்கள் உதவியை எதிர்பார்ப்பவர்களுக்கு  உதவிகரமாகவும்  ஆதரவாகவும்  இருங்கள்.

ஜெபிக்க வேண்டிய மந்திரம் “ஓம் ராம பக்தாய நமஹ” - தினமும் 108 முறை

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும் பங்கு கொள்ளவும்  கீழே உள்ள இனைப்பை க்ளிக் செய்யவும்

சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மே, ஜூன், அக்டோபர்

பாதகமான மாதங்கள்: ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்

இந்த மாதங்களில் உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கவும். பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களை செய்யவும்


banner

Leave a Reply

  • Karpagam


    Super

    December 8, 2018

  • PARVEEN


    super

    November 22, 2018