கன்னி ராசி - பொதுப்பலன்கள்
இந்த ஆண்டு நீங்கள் அதிக பொறுப்புகளை சந்திக்க நேரும். பொறுப்புகளை சரியாக செய்யும் பொழுது அதன் பலன் சிறப்பாகத் தானே இருக்கும். நீங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் எதிர்காலம் சிறப்பாக மகிழ்ச்சியாக இருக்கும். வித்தியாசமாக சிந்திக்கும் பொழுது உங்களால் சிறப்புற முடிவுகளை எடுக்க இயலும். அதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் வாழ்வை அதன் போக்கில் வாழ கற்றுக் கொள்ளுங்கள். லேசான மனம் சிறப்பாக செயல்படுவதன் மூலம் நீங்கள் பல திட்டங்களை தீட்டி அதன் மூலம் பயன் பெறுவீர்கள். நல்ல பலன்களை காணும் போது மகிழ்ச்சிக்கு குறைவேது? வாழ்க்கை உங்களை அழைத்துச் செல்லும் போக்கில் நீங்கள் அமைதியாக பயணம் செய்யுங்கள். யதார்த்தத்தை யதார்த்தமாக எற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம் ஆகும். மார்ச் 2௦19 முதல் ஆண்டின் இறுதிவரை சனி கிரகத்தின் மூலம் நீங்கள் சாதகமான விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. சனியின் கிரக நிலை காரணமாக உங்களுக்கு ஒய்வு என்பது கிடைப்பது அரிதாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்குள் தன்னம்பிக்கை ஏற்படுத்தும். பிறகென்ன. எந்த சூழ்நிலையாய் இருந்தால் என்ன? அதையும் ஒரு கை பார்த்து விடுங்கள். பிறருக்கு அறிவுரை வழங்கும் வள்ளலாகவும் நீங்கள் இருப்பீர்கள்.
கன்னி ராசி - வேலை
இந்த ஆண்டில் நீங்கள் அலுவலத்தில் பம்பரம் போல பணியாற்றுவீர்கள். நீங்கள் உங்கள் நேரத்தை உறவினர்களோடும் நண்பர்களோடும் சேர்ந்து செலவு செய்கிறீர்களோ இல்லையோ ஆனால் உங்கள் சக பணியாளர்களிடம் அதிக நேரத்தை செலவு செய்வீர்கள். இது போதாதா நீங்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு. உங்கள் அடித்துக் கொள்ள வேறு யாராலும் இயலாது. இந்த நிலையை நீங்கள் இந்த வருடம் முழுவதும் தக்க வைத்துக் கொள்வீர்கள். கன்னி ராசி காரர்களே உங்கள் மன நிலையைப் பொருத்து நீங்கள் இந்த சூழ் நிலையை இரண்டு விதமாக கருத இடமுண்டு.
ஒரு சிலர் பணிகள் அதிகம் இருந்தாலும் தாங்கள் அதிகாரத்திற்கான அங்கீகாரம் பெற்று இருப்பதைக் கண்டு மகிழ்வீர்கள். அதற்கு மாறாக வேறு சிலர் இவ்வளவு பணிகளா? நமக்கு சிறிது நேரம் ஒய்வு கிடைக்காதா என ஏங்குவீர்கள். எல்லாம் உங்கள் மன நிலையைப் பொறுத்தது தான். நான்கு பேர் கூடினால் கண்டிப்பாக முரண்பாடுகள் இருக்கத் தானே செய்யும். எனவே சக பணியாளர்களிடம் நல்லுறவு இருந்தாலும் நீங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகலாம். இந்த சூழ்நிலையில் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விடாதீர்கள். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே. எனவே முடிவுகளை எடுக்கும் முன் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
தொழில்முறை வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு லட்சுமி குபேர ஹோமம்
கன்னி ராசி - நிதி நிலைமை
இந்த ஆண்டு நீங்கள் உங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டிய காலக்கட்டம் ஆகும். முக்கியமான விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளுங்கள். பணம் சொத்து நிலம் போன்ற எந்த விஷயத்திலும் புதிய முயற்சிகளை எடுக்காதீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் குடும்ப அங்கத்தினர்களின் ஆலோசனை பெறாமல் நீங்களாக முடிவு எடுப்பது உசிதமல்ல. முக்கியமாக அவர்களை கலந்து ஆலோசிக்காமல் ஆவணங்கள் எதிலும் கையொப்பம் போடாதீர்கள். திட்டமிட்டு செலவு செய்வதன் மூலம் நிதிநிலைமையை ஓரளவு சமாளிக்கலாம். பட்ஜெட் போட்டு பணம் செலவு செய்யுங்கள்.இப்படி நிலைமை இருக்கின்றதே என்று கவலைப் படாதீர்கள். மார்ச் 2௦19க்குப் பிறகு உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.
நிதி நிலைமை மேம்பட லட்சுமி ஹோமம்
கன்னி ராசி - காதல் மற்றும் உறவுநிலை
இந்த ஆண்டு உங்கள் உறவு நிலையைப் பொறுத்தவரையில் மறக்க முடியாததாக இருக்கும். உங்கள் துணையின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மலரும். நல்ல முடிவுகள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும். நீங்கள் உங்கள் துணையின் மீது நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஆரம்பக் காலத்தில் உங்கள் உறவில் சில பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டாலும் வீட்டில் உள்ள மூத்தவர்கள் தலையிட்டு நல்ல அறிவுரைகளை வழங்குவார்கள். பெற்றோர் உங்கள் உறவை ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யலாம். குரு கிரகம் பின்னர் வரக்கூடிய காலத்தில் உங்களுக்கு இனிப்பான சாதகமான முடிவுகளை வழங்க இருப்பதால் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
உறவு ஒற்றுமை மேம்பட உமா மகேஸ்வர ஹோமம்
கன்னி ராசி - ஆரோக்கியம்
இந்த ஆண்டு அவ்வப்பொழுது காய்ச்சல், வைரஸ் தொற்று மற்றும் மன அழுத்தம் தொடர்பான உபாதைகள் போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் சோர்ந்து போக அனுமதிக்காதீர்கள். மன அழுத்தம் சம்மந்தமான அறிகுறிகள், இரத்த அழுத்தம், சோர்வு மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகளுக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்கள் படிப்படியாக அதிலிருந்து நிவாரணம் பெறுவர். ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவும் இல்லாதவராக நீங்கள் இருந்தால் வீட்டில் சமைத்த உணவை உட்கொண்டு உங்கள் உடல் நலத்தைப் பராமரியுங்கள். ஒரு வேளை நீங்கள் பயணம் செய்பவராக இருந்தால். அப்போது வீட்டில் சமைக்கப்பட்ட உணவு இல்லாமல் போனால் எளிதில் ஜீரணமாகும் உணவை உண்ண வேண்டும். பருவகால உணவை விரும்புங்கள். பண்டிகை காலங்கள் மற்றும் விருந்துகளில் அதிகம் உண்ணாதீர்கள். ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டால் உங்கள் மருத்துவ ஆலோசகர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபட இது சிறந்த நேரம்.
திடீர் உடல் நலப் பிரச்சனை தீர சுதர்சன ஹோமம்
கன்னி ராசி - மாணவர்கள்
நீங்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தாலும் உங்கள் சோம்பேறித்தனம் மற்றும் பற்று இல்லாத மன நிலை உங்கள் விருப்பத்தைத் திசை திருப்பி விளையாட்டுகளிலும் பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடச் செய்யும். பெற்றோர்கள். தங்களுடைய குழந்தைகளை படிப்பிலும் அதே நேரத்தில் பிற நடவடிக்கைகளிலும் ஈடுபட ஊக்கம் அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது மனரீதியாக படிப்பில் விருப்பத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய உந்துதலினால் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். விளையாட்டு அல்லது பொழுதுபோக்குக்கிற்கு பிறகு படிப்பில் ஈடுபடுவதில் கவனமாய் இருங்கள். .
தேர்வுகளில் சிறந்து விளங்க சரஸ்வதி ஹோமம்
பொதுப் பரிகாரம்:
தன்வந்தரி ஹோமம்
வீட்டுப் பரிகாரங்கள்
- முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்
- உங்கள் உணர்ச்சி அல்லது கோபத்தை பிறரிடம் காட்டாதீர்கள்.
- தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டிலும் நிலையான அணுகுமுறையைப் பின்பற்றவும்
ஜபிக்கவும் “ஓம் ஸ்ரீ பிரதம பூஜ்யாய நமஹ” அல்லது ஓம் ஹம் ஹனுமதே நமஹ”
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும் பங்கு கொள்ளவும் கீழே உள்ள இனைப்பை க்ளிக் செய்யவும்
சாதகமான மாதங்கள்: பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஜூலை, செப்டம்பர்
பாதகமான மாதங்கள்: ஜனவரி, மார்ச், மே, நவம்பர், டிசம்பர்
இந்த மாதங்களில் உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கவும். பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களை செய்யவும்
Leave a Reply