Mesha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

Saturn Retrogrades in Aquarius for 140 Days. Time to Refocus, Strategize & Progress towards Your Life Goals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Mesha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

June 22, 2018 | Total Views : 47,827
Zoom In Zoom Out Print

அன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே

2018 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் 4 ஆம் தேதி வாக்கியப்படியும், அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று திருக்கணிதப்பஞ்சாங்கப்படி குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார்..

.தங்களது ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். 8 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதவதற்கில்லை. குரு பகவான் 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் இடம் பண வரவினையும் குடும்ப சந்தோஷத்தையும் குறிக்கும். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 12 ஆம் இடம் விரய ஸ்தானம் ஆகும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.

mesha-rasi-guru-peyarchi-palangal-2018-2019

மேஷ ராசி - தொழிலும் வியாபராமும்:

கூடுமானவரை இக் காலக் கட்டத்தில் கூடுதல் பணியை தானாக முன் வந்து எற்றுக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் நடப்பு வேலைகளை முடிப்பதே சற்று சிரமமாகும். அநாவசியமாக சிலர் வீண் பழிகளை சுமத்தலாம். இது பொறுமையை சோதிக்கக் கூடிய ஒரு காலமாகும். வேலை மாற்றத்திற்கும் இடம் உண்டு.சோம்பேறித்தனத்தை முற்றிலும் தவிர்க்கவும். ஏனென்றால் மேலதிகாரிகள் தங்களை இக் காலக் கட்டத்தில் கூர்ந்து கவனிக்கக் கூடும். வியாபார நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தும். குறித்த காலத்தில் வேலையே முடித்து தருவது சிரமமாகும். இதனால் மன அழுத்தம் உண்டாகும்.

 

இக் காலக் கட்டத்தில் எதிர்பாராத மராமத்து பராமரிப்பு செலவுகள் உண்டு. அவசரப்பட்டு முதலீடுகளில் இறங்க வேண்டாம். முதலீடு நிபுணர்களின் ஆலோசனை பெற்று பண முதலீடு செய்யவும். சொத்துக்கள் வாங்குவதற்கு இடம் உண்டு. எதற்கும் ஒரு முறைக்கு இரு முறை ஊர்ஜிதம் செய்து அதன் பின் முதலீடுகளை மேற்கொண்டால் மாத வரவு செலவு கணக்கில் பற்றாக்குறை இராது.

 

மேஷ ராசி - குடும்பம்:

கூடுமானவரை நட்புணர்வோடு உறவுகளை பராமரிக்கவும். வீட்டில் சற்று கடுமையான சூழல்களும் இந்த காலக்கட்டத்தில் இருக்கக் கூடும். உங்களுடைய சாணக்கியத்தனத்தால் மட்டுமே உறவுகளை பராமரிக்க முடியும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தனி கவனம் செலுத்தவும்.

மேஷ ராசி - கல்வி:

மாணவர்களிடையே தன்னம்பிக்கை மிகும். படிப்பில் நல்ல கவனமும் உண்டாகும். அயல் நாட்டு அழைப்புகளுக்கும் இடம் உண்டு. பொக்கிஷமான அறிவு விருத்திக்கு இடமுண்டு.

 

காதலர்களிடையே சிறு சிறு மனப் பிணக்கு ஏற்படலாம். கூடுமானவரை வெளிப்படையாக செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணைக்காக போதுமான நேரம் ஒதுக்கவும். இடையிடையே சிறு சிறு பயணங்கள் மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்துவது நல்லது.

மேஷ ராசி - ஆரோக்கியம்:

உணவு நேரங்களில் வேளை தப்பாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அஜீரணக் கோளாறுகள் தென்படுகின்றது. இயற்கை உணவுகளை அதிகமாக உட்கொள்வது நல்லது உடற்பயிற்சியை தவறாது மேற்கொள்ளவும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் மருத்துவ ஆலோசனைகள் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும்.மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • பணிகளில் தாமதம்
  • செலவுகள்
  • அஜீரணக் கோளாறுகள்
  • பொருளாதார இடர்பாடு
  • முன்னெச்சரிக்கை:
  • கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
  • எல்லாரிடமும் விட்டுக் கொடுத்து செல்லவும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் கல்வி உபகரணங்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு தனாமாக கொடுப்பது நல்லது. தினந்தோறும் “ஓம் பிருகஸ்பதியே நமஹ” என்று பாராயணம் செய்யவும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யவும்.

 

2019 குரு பெயர்ச்சி பற்றிய விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மற்ற ராசிகளுக்கான குருப்பெயச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...மேஷம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos