மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Meenam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த மீன ராசி நேயர்களே!
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வாக்கியப்படியும், அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று திருக்கணிதப்பஞ்சாங்கப்படி குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார்..
தங்களது ராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 9 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 1 ஆம் இடம் 3 ஆம் இடம் மற்றும் 5 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 1 ஆம் இடம் வெற்றி தோல்வியையும் ஆளுமையையும் 3 ஆம் இடம் இளைய சகோதரம், சிறு தூரப் பிரயாணம் மற்றும் தகவல் தொடர்பையும் 5 ஆம் இடம் புத்திர பாக்கியம் ஊக வாணிபம், பூர்வ புண்ணியம் இவற்றையும் குறிக்கும்.
இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
மீன ராசி - தொழிலும் வியாபராமும்:
இக் காலகட்டத்தில் வருமானம் உயரும். சார்நிலை அலுவலரின் ஒத்துழைப்பினால் வேலையினை குறித்த காலத்தில் முடிக்க முடியும். பொதுவாக தொழிலில் வளர்ச்சி காணும் காலம் இது. அயல் நாட்டு பயணங்களுக்கு இடம் உண்டு.
மீன ராசி - பொருளாதாரம்:
அனாவசிய செலவுகள் தவிர்க்கப்படும். ஊக வாணிபம் கூட கை கொடுக்கும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எதிர்காலத்தை உத்தேசித்து சிறு சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் எண்ணம் உருவாகும்.
மீன ராசி - குடும்பம்:
குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அனுசரணையைப் பெற முடியும். பாசிடிவான எண்ணங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு கை கொடுக்கும். சமூக நிகழ்வுகளில் பங்கேற்க முடியும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
மீன ராசி - கல்வி:
மேற்கொண்ட கல்வியை இனிதே முடிக்க முடியும். ஆசிரியர் விரிவுரையாளருடன் நல்லுறவு உண்டு. எல்லாப் பணிகளுமே சுலபமாக முடியும். பொது அறிவு விருத்தி ஆகும்.
மீன ராசி - காதலும் திருமணமும்:
சிறு சிறு உரசல்கள் இருந்தாலும் அவைகளை களைந்து உறவுகளை வலுப்படுத்த முடியும். விட்டுக் கொடுக்கும் மனோபாவம் உண்டாகும். திருமணம் குறித்து தெளிவாக இருந்தால் இக்காலகட்டத்தை பயன்படுத்தி திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
மீன ராசி - ஆரோக்கியம்:
இக்காலக் கட்டத்தில் ஆரோக்கியம் பேண முடியும். எனினும் அஜீரணக் கோளாறுகளை தவிர்க்க, உணவு வேளைகளை தப்பாதிருக்கவும். நிறைய பழம் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
- வருமான உயர்வு
- வெளிநாட்டுப் பயணம்
- குடும்பத்தில் சுப நிகழ்வுகள்
- கல்வியில் முன்னேற்றம்
- நல்ல ஆரோக்கியம்
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும். ஓம் பிரகஸ்பதியே நமஹ என வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கவும்.
மற்ற ராசிகளுக்கான குருப்பெயச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம்

Leave a Reply
Dhanalakshmi
Mesam Ashwin I star Ku eppadi erukku
September 30, 2018
Vinothkumar
Namaste Dhanalakshmi,
Please see the below video for Mesha rasi predictions:
https://www.youtube.com/watch?v=4mwmtiBCUlQ&t=18s
Thanks,
Vinoth KumarNovember 3, 2018
Siva
Thx
October 27, 2018
A.N.VIJAYAKUMAR
Pl. inform the guru peyartchi palangal for 2018-19 for meena rasi
July 13, 2018
Sales
Kindly visit our website www.astroved.com.
July 25, 2018
S.sathiya
Guru mudium matham and year
July 21, 2019
Sales
Namaste,
Jupiter transit will end during Oct 2020.
Thanks & Regards,
Astroved support.
July 23, 2019
S.sathiya
Guru mudium matham and year
July 21, 2019
Sales
Namaste,
Jupiter transit will end during Nov 2019.
Thanks & Regards,
Astroved support..
July 23, 2019