AstroVed Menu
AstroVed
search
search

துலாம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Thulam Rasi Palan 2022

dateApril 8, 2022

துலாம் மே மாத பொதுப்பலன் 2022

இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உங்கள் பணம் முடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான வேலைகள் தாமதப்பட வாய்ப்புள்ளது. ஒரு சிலர் கடன் வாங்க நேரலாம். அதிர்ஷ்டம் கூட வந்து வந்து செல்லும். என்றாலும் பணப் பற்றாக்குறையை நீங்கள் சந்திக்க மாட்டீர்கள். வெளி நாடு சென்று சிலர் பிரகாசிப்பார்கள். இந்த மாதம் பயணங்கள் கொள்வதற்கு ஏற்ற மாதம் ஆகும்.  பழைய நட்புகளின் மூலம் நீங்கள் பலன் அடைவீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு 

உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடனான உறவு சுமுகமாகவும் நல்லிணக்க உறவாகவும் இருக்கும். உங்கள் உடன் பிறப்புகள், சக பணியாளர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு திருப்திகரமாக இருக்கும். ஓரு சிலருக்கு தங்கள் காதலில் தோல்வியை சந்திக்க நேரலாம்.  ஓரு சில காதலர்கள் பிரியக் கூட நேரலாம்.  திருமணமானவர்களுக்கு  இடையே ஈகோ பிரச்சினை எழ வாய்ப்பு உள்ளது. தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட  வாய்ப்புள்ளது. புதிதாக திருமணமானவர்கள் உணர்ச்சிப் வசப்பட வாய்ப்புள்ளது.  

ஒரு சிலர் தங்கள் துணையால் ஏமாற்றப்படலாம். அனுசரித்து நடந்து கொள்வதும் விட்டுக் கொடுத்து செல்வதும் சிறப்பு.  தியாக உணர்வின் மூலம் ஒரு சிலரின் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்லுறவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு பொறுமை அவசியம். தக்க துணை அமைய சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை

நிதிநிலை 

நிதிநிலையைப் பொறுத்தவரை பணப்புழக்கம் இருக்கும். வங்கி இருப்பும் போதுமான அளவில் இருக்கும். பணப்பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. கடன் தொல்லைகள் இருந்தாலும் அதில் இருந்து இந்த மாத இறுதியில் விடுபடுவீர்கள். முதலீடுகளின் மூலம் கணிசமான லாபம்  பெறுவீர்கள். கடந்த கால சேமிப்புகளின் மூலம் வருவாய் கிட்டும். அதிக வருமானம் எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். மற்றபடி நீங்கள் இந்த மாதம் போதுமான பணம் சம்பாதிப்பீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை 

வேலை :

சொந்த தொழில் செய்பவர்கள்  நிலைமை செழிப்பாக இருக்கும். அரசாங்க வேலை செய்பவர்கள் அதிக பணம் சம்பாதிப்பார்கள். பலருக்கு புதிய வேலை கிட்டும். ஒரு சிலர் தங்கள் பணியிடத்தை மாற்றி அமைத்துக் கொள்வார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் வேலை கிட்டும். அதில் அவர்கள் வெற்றி காண்பார்கள்.  தொழில் நுட்பத் துறை நிறுவனப் பணியாளர்கள் வெற்றியும் ஆதாயமும் பெறுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு அங்கீகாரம் என அனைத்திலும் வெற்றி காண்பார்கள். ஒரு சிலருக்கு பிரச்சினை அல்லது நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்றாலும் பணியிடத்தில் மகிழ்ச்சி இருக்க வாய்ப்பில்லை. 

உத்தியோகத்தில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை

தொழில் :

மருத்துவம் மற்றும் ஒப்பனை துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் செழிப்புற இருக்கக் காண்பார்கள். போக்குவரத்து மற்றும் எண்ணெய் நிறுவன தொழில் இந்த மாதம் லாபம் பெற்றுத் தரும். உணவு, உணவகங்கள், போக்குவரத்துத் துறை சிறப்பாக நடக்கும்.  கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். ஆடை உற்பத்தித் தொழிலில் லாபம் கொழிக்கும். திரை அரங்குகள் சில நஷ்டங்களை சந்திக்கும். 

தொழில் வல்லுனர்கள் :

எழுத்து, எடிடிங், பைண்டிங் மற்றும் ஊடகத் துறையினர் சாதாரண வெற்றியைக் காண்பார்கள். திரை, சின்னத் திரை, பொழுதுபோக்கு போன்ற  துறையினர்  ஏமாற்றம் அல்லது தோல்வியை சந்திக்க நேரும். ஒரு சிலர் விளையாட்டுத் துறையில் பிரபலம் அடைவார்கள். ஜோதிடம், மறை கலை ஆன்மீக நடவடிக்கையில் இருக்கும் நிறுவனங்கள் வெற்றியும் வளர்ச்சியும் காண்பார்கள்.  பத்திரிகைத் துறையினர் மற்றும் ஆங்கரிங் செய்பவர்கள் செழிப்புடன் தங்கள் தொழிலை செய்வார்கள். 

ஆரோக்கியம்:

துலாம் ராசி அன்பர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஒரு  சிலர் தோல் நோய்களால் பாதிக்கப்படுவார்கள். நீங்கள் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் மனதில் புதிய உற்சாகம் மற்றும் ஆர்வம் காணப்படும்.. உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் சீராக இருக்கும். இந்த மாதம் இறுதியில் ஒரு சிலருக்கு ஜுரம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பிருகஸ்பதி பூஜை 

மாணவர்கள்:

துலாம் ராசி அன்பர்கள் தங்கள் கல்வியில் சிறப்பாக பயில்வார்கள். உங்கள் இலக்குகளை நீங்கள் எளிதில் அடைவீர்கள். உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக  இருப்பார்கள். போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் முதலியவற்றை நீங்கள்  சிறப்பாக எழுதி  முடிப்பீர்கள். ஒரு சில துலாம் ராசி மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பார்கள். மருத்துவம்., பொறியியல், மேலாண்மை, ஊடகம் போன்ற துறையினர் சிறப்பாக கல்வி பயில்வார்கள்.  ஆராச்சி மாணவர்கள் சிலதோல்விகளை சந்திக்க நேரும். 

கல்வியில் மேன்மை பெற : கணபதி பூஜை 

சுப நாட்கள் :-3,4,5,10,18,19,21,24,25,28,29
அசுப நாட்கள் :- 1,7,8,11,13,16,17,30,31 


banner

Leave a Reply