AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Viruchigam Rasi Palan 2022

dateApril 8, 2022

விருச்சிகம் மே மாத பொதுப்பலன் 2022

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்தமாதம் சிறந்த பலன்கள் கிட்டும் மாதமாக இருக்கும்.  இந்த மாதம் நீங்கள் நிலுவையில் இருக்கும் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் யாவும் தீர்வுக்கு வரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் உத்தியோகம் மற்றும் பொது வாழ்வில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் திட்டங்களை தீட்டி அதனை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு சாதகமான முறையில் வெற்றி காண்பீர்கள்.  உங்கள் முக்கிய பணிகளை நீங்கள் சிறப்பாக முடிப்பீர்கள். உங்களில் ஒரு சிலர் வெளி நாடு செல்லும் வாய்ப்பு உள்ளதும். உங்கள் அந்தஸ்து, செல்வம் மற்றும் செல்வாக்கு உயரும் உங்களின் சில விருப்பங்கள் இந்தமாதம் நிறைவேறும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு 

குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். இனிமையாக இருக்கும். உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது உடன் பிறப்புகள் உங்களுக்கு உதவிகளைப் புரிவார்கள். உங்களின் முன்னேற்றம் கண்டு பெற்றோர் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவார்கள்.  காதலர்களுக்கு இது இனிமை நிறைந்த மாதமாக இருக்கும். திருமணத்திற்குக்  காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியுடன், இணக்கமுடன்  வாழ்வார்கள். வாழ்க்கை அமைதியாக நகரும். பரஸ்பரம் ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் விசுவாசம் மற்றும் நம்பிக்கை மேலோங்கி இருக்கும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை 

நிதிநிலை :

விருச்சிக ராசி  அன்பர்கள் இந்த மாதம் தங்கள் செல்வ நிலை உயரக் காண்பார்கள். உங்கள் வருமானம் பெருகும். நீங்கள் பல வகைகளில் இருந்தும் பணம் சம்பாதிப்பீர்கள்.  புதிய நட்பு அல்லது தொடர்புகள் மூலம் நீங்கள் பண ஆதாயம் பெறுவீர்கள். மேலும் உங்கள் பொழுதுபோக்கு இந்த காலக் கட்டத்தில் வருமானத்தை பெற்றுத் தரும். உங்கள் வருமானம் உயரும் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.  உங்கள் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஊக வணிகம், முதலீடு மற்றும் மியுச்சுவல் பண்டுகள் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது.  

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதிபூஜை 

உத்தியோகம் : 

அரசியல் சார்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெறுவார்கள்.  உங்கள் ஒழுக்கம் மற்றும் நேரம் தவறாமை உங்களுக்கு பணியிடத்தில் புகழை பெற்றுத் தரும். மார்கெடிங், மேலாண்மை  சார்ந்த துறையினர் வெற்றி காண்பார்கள். ஆசிரியர்கள், ஜோதிடர்கள், நல்ல ஆதாயம் காண்பார்கள். ஒரு சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கிட்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த வேலை வாய்ப்பு கிட்டும். ஒரு சிலருக்கு வெளி நாட்டில் சிறந்த வாய்ப்புகள் கிட்டும் வாய்ப்பு உள்ளது. 

உத்தியோகத்தில் மேன்மை பெற : சூரியன் பூஜை 

தொழில்:

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். உணவுப் பொருட்கள், உணவகங்கள் பிரயாணம்  சார்ந்த தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். மருத்துவம், ஒப்பனை பொருட்கள் மூலம் நல்ல லாபங்களை எட்ட முடியும்.  ஆலோசனை, சுய தொழில் போன்றவற்றில் விரைவான வெற்றி கிட்டும்.  சமூக ஊடகம், விளம்பரம் துறையினர் செழிப்பும் வெற்றியும் காண்பார்கள். மரச் சாமான்கள், நிலக்கரி, இரும்புப் பட்டறை, பளிங்குக் கற்கள், கேட்ஜெட்ஸ் போன்றவற்றின் மூலம் சிறந்த லாபம் காண இயலும்.  

உங்கள் தொழிலில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை 

தொழில் வல்லுநர் : 

கலைத் துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வளர்ச்சி காண்பார்கள். உங்கள் படைப்புத் திறன் உச்சிக்கு செல்லும். உங்கள் முயற்சிகளுக்கு விரைவான வெற்றி கிட்டும். எழுத்து, எடிட்டிங், ஊடகம் சார்ந்த தொழில்  பெரிய வெற்றியை அளிக்கும். மருத்துவம், பொறியியல் மற்றும் ஐடி துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பொதுப் பணித் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் தாங்கள் விரும்பும் நல்ல பலன்களை அடைவார்கள். 

டிசைனிங், அச்சுத் தொழில்,செழிப்பாக நடக்கும். நடிகர்கள், நாட்டியக் கலைஞர்கள், பாடகர்கள், தயாரிப்பளர்கள் இவர்கள் வெற்றி காண கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். 

ஆரோக்கியம் : 

உங்கள் ஆரோக்கியத்தில் சில உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். ஒற்றைத் தலைவலி அல்லது தோல் நோய் போன்ற உபாதைகளுக்கு நீங்கள் ஆளாக நேரலாம். விட்டமின் குறைபாடு காரணமாக எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி அனுபவிக்க நேரலாம். உங்கள் வாகனத்தை  கவனமாக ஒட்டவும். மருத்துவ செலவுகள் இந்த மாதம் சற்று கூடுதலாக இருக்கும். தியானம் அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள இயலும்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள் : 

விருச்சிக ராசி மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொண்டால் தான் வெற்றி காண இயலும். கவனச் சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது எனவே மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். வெளிநாடு சென்று படிக்க நினைப்பவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். ஒரு சிலருக்கு கல்வி உதவித் தொகை கிட்டும். ஒரு சிலர் தங்கள் ஆராய்ச்சி படிப்புகளில் வெற்றி காண்பார்கள். 

உங்கள் கல்வியில் முன்னேற்றம் காண : கணபதி பூஜை 

சுப நாட்கள் :- 3,4,6,10,15,16,17,19,28,29,30
அசுப நாட்கள் :- 1,2,7,8,14,22,27,31 


banner

Leave a Reply