கன்னி மே மாத ராசி பலன் 2022 | May Matha Kanni Rasi Palan 2022

கன்னி மே மாத பொதுப்பலன் 2022
இந்த மாதம் உங்களுக்கு முன்னேற்றம் கிட்டும் மாதமாக இருக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றி உங்களை நாடி வரும். இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் அந்தஸ்து மற்றும் செல்வாக்கு உயரும். நீங்கள் வெற்றியைக் கொண்டாடுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூட கிட்டும். பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிட்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு
உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இணக்கமான உறவு இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நல்ல அனுசரணை, நெருக்கும் விட்டுக் கொடுத்து செல்லுதல் போன்றவை காரணமாக உறவு மேலும் நெருக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுடனும் உங்களுக்கு நல்லுறவு இருக்கும். புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்வீர்கள். அவர்கள் மூலம் நல்ல ஆதாயம் காண்பீர்கள்.
திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த மாதம் தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டு கொள்வார்கள். காதலர்கள் இந்த மாதம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமான தம்பதிகள் இனிய தருணங்களை கண்டு களிப்பார்கள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்வார்கள். உறவில் அன்பும் உண்மையும் மதிப்பும் மரியாதையும் இருக்கும். சில காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றிக் கொள்வார்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை
நிதிநிலை :
கன்னி ராசி அன்பர்கள் நிதிநிலை இந்த மாதம் வளமுடன் இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. உங்கள் முயற்சிகளுக்கான நல்ல பலன்களை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் வருமான வாய்ப்புகள் கூடும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணம் சம்பாதிப்பீர்கள். எனவே உங்கள் வருமானம் உயரும். உங்கள் சேமிப்பும் உயரும். ஊக வணிகம் மற்றும் முதலீடுகள் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள். வட்டிப் பணம் மற்றும் சொத்துக்களின் மீதான வாடகை போன்றவை மூலம் உங்கள் சொத்து மதிப்பு உயரும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை
உத்தியோகம் :
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறந்த வளர்ச்சி காணப்படும். சுய உத்தியோகத்தை அதாவது ப்ரீ லான்சிங் செய்பவர்கள் இந்தமாதம் நல்ல வளர்ச்சி காண்பார்கள். ஒரு சிலர் அரசியலிலும் சிறந்த வெற்றியைக் காண்பார்கள். கலைத் துறையினர் பரிமளிப்பர்கள். ஒரு சிலர் பெரிய நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். சட்டம் மற்றும் பாதுகாப்புத் துறையில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். ஆலோசகர்கள் ஒரு நல்ல அந்தஸ்து மற்றும் புகழ் பெறுவார்கள். ஒரு சிலருக்கு வழக்குகளில் வெற்றி கிட்டும்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : புதன் பூஜை
தொழில் :
ஆடை உற்பத்தி, ஒப்பனைப் பொருட்கள் போன்ற துறையினர் நல்ல லாபம் காண்பார்கள். உணவு, துரித உணவு தயாரிப்பாளர்கள் சிறந்த வருவாய் ஈட்டுவார்கள். மருத்துவம், பால் சார்ந்த துறைகள், உணவு, உணவகம் மற்றும் பிரயாணம் சார்ந்த துறையினர் செழிப்பைக் காண்பார்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் வெற்றி காண்பீர்கள். போக்குவரத்துத் துறையில் இருப்பவர்கள் சற்று பின்னடவை சந்திக்க நேரலாம். ஊடகம் மற்றும் எழுத்துத் துறையினர் பிரபல்யம் அடைவார்கள்
உங்கள் தொழில் மேம்பட : சனி பூஜை
தொழில் வல்லுனர்கள் :
ஊடகம், எழுத்து, எடிடிங் மற்றும் விளம்பரம் சார்ந்த துறையினர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் மற்றும் சாதகமான நேரமாக இந்த மாதம் இருக்கும். மருத்துவர், பொறியாளர் சிறப்பாக செயல்படுவார்கள். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறையினர் தங்கள் துறையில் வெற்றி காண்பார்கள். வங்கி மற்றும் மேலாண்மைத் துறையினர் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்புற நடக்கக் காண்பார்கள். மார்கெடிங், பொதுப்பணி மற்றும் விளம்பரத் துறையினர் மகிழ்ச்சி காண்பார்கள்.
ஆரோக்கியம் :
கன்னி ராசியினரின் உடல் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சிறிது பதட்டத்தை அளிக்கும். அவர்களுக்கு சளி இருமல் ஜுரம் போன்ற சிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் இந்த மாதம் கூடுதலாக இருக்கும். சிறிய உபாதைகள் ஏற்படும் என்றாலும் அது விரைவில் குணமாகி விடும். மருத்துவ செலவுகள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேரலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
மாணவர்கள்
கன்னி ராசி மாணவர்கள் மிகச் சிறப்பாக கல்வி பயில்வார்கள். தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி வெற்றி காண்பார்கள். ஒரு சிலர் நுழைவுத் தேர்வுகளை சிறப்புற எழுதி சிறந்த கல்லூரி அல்லது பல்கலைக் கழகங்களால் தெரிவு செய்யப்படுவார்கள். போட்டித் தேர்வுகளை மாணவர்கள் சிறப்புற எழுதுவார்கள். கன்னி ராசி மாணவர்கள் இந்த மாதம் மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் கல்வி பயில்வார்கள்
கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை
சுப நாட்கள் :- 1,2,3,6,14,15,20,27,28,28,31
அசுப நாட்கள் :- 4,5,8,9,19,20,23,30
