மேஷம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Mesham Rasi Palan 2022

மேஷம் மே மாத பொதுப்பலன் 2022:
இந்த மாதம் உங்கள் மனதில் பதட்டமும் படபடப்பும் இருக்கும். ஆனால் மாத மத்தியில் நிலைமை சீராகும். உங்கள் உத்தியோகத்தைப் பொறுத்தவரை முன்னேற்றம் மந்த நிலையில் இருக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் இந்த மாத இறுதியில் கூடும். மேலதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சுமுக உறவு இருக்கும். உங்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவிகளைப் புரிவார்கள். உங்கள் முயற்சிகள் சிலவற்றில் பலன் காண தாமத நிலை இருக்கும். மாத ஆரம்பத்தில் நீங்கள் சில தோல்விகளை சந்திப்பீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / திருமண உறவு :
உங்கள் காதல் வாழ்வில் சுரத்து குறைவாக இருக்கும். ஓரு சிலர் பிரிந்து செல்லக் கூட நேரலாம். உங்கள் துணை உங்களை ஏமாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சிறு சிறு சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
உங்கள் திருமண வாழ்க்கை இனிமை மிக்கதாக இருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க இயலாத காரணத்தால் சில பிரச்சினைகள் எழும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக, உறுதுணையாக, அக்கறை காட்டுபவராக இருப்பார்கள். ஒரு சிலருக்கு குழந்தைப் பேறு கிட்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : லட்சுமி பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் உங்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. உங்கள் வருமானம் இந்த மாதம் கூடும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக வாழ்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவ செலவுகளும் இந்த மாதம் இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் உத்தியோகம் வாயிலாக அதிக பணம் சம்பாதிப்பீர்கள். அதே சமயம் உங்கள் பொழுது போக்கைக் கூட நீங்கள் பணமாக மாற்றிக் கொள்வீர்கள். செலவுகள் இருந்தாலும் உங்கள் சேமிப்பும் கூடும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம் :
உங்கள் உத்தியோகத்தைப் பொறுத்தவரை ஏற்ற இறக்க நிலை இருக்கும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிட்டும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இந்த மாதம் அதனைப் பெற இயலும். நீங்கள் புதிய தொழில் நுட்பங்களைக் கற்று உங்களை மற்றும் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். இதனால் நீங்கள் பணியிடத்தில் பாராட்டும் அங்கீகாரமும் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் வங்கித் துறையில் பணிபுரிபவர்கள் அமோக வெற்றி காண்பார்கள்.
உங்கள் உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை
வியாபாரம்:
ஹோட்டல், ட்ராவல்ஸ் மற்றும் உணவு சார்ந்த தொழில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். விவசாயம் மற்றும் சொத்துக்களை வாங்கி விற்கும் தொழிலில் நல்ல லாபம் கிட்டும். சுய தொழில் செய்பவர்கள் சிறப்பாக செயலாற்றி தங்கள் முயற்சிகளின் மூலம் நல்ல லாபம் ஈட்டுவார்கள். போக்குவரத்து மற்றும் ஒப்பனை மற்றும் ஆடை உற்பத்தி துறையில் நல்ல லாபம் காண இயலும்.
உங்கள் தொழில் மேம்பட : சுக்கிரன் பூஜை
தொழில் வல்லுனர்கள் :
தொழில் வல்லுனர்களுக்கு இது சற்று சவாலான மாதமாக கடினமான மாதமாக இருக்கும். பணிகள் அதிகமாக இருப்பதுடன் ஒரேமாதிரியான பணியை மீண்டும் மீண்டும் செய்வது சற்று சலிப்பை வழங்கும். மருத்துவம், பொறியியல், மற்றும் ஐடி துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் ஊடகத் துறையை சார்ந்தவர்கள் நல்ல ஆதாயம் காண்பார்கள். அரசியலில் இருப்பவர்கள் பிரபலம் அடைவார்கள். விளையாட்டு மற்றும் பொழுது போக்குத் துறையினர் உயர் அந்தஸ்த்து மற்றும் பிரபலம் அடைவார்கள்.
ஆரோக்கியம் :
உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும். என்றாலும் குளிர் ஜுரம் போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து போகும். நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலை குறித்த கவலை உங்களை வாட்டும். உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : புதன் பூஜை
மாணவர்கள் :
மேஷ ராசி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். போட்டித் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி வெற்றி காண்பார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஒரு சிலருக்கு கல்வி உதவித் தொகை கிட்டும். நீங்கள் புதிய விஷயங்களைக் கற்று உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்வீர்கள்.கணினி அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி சார்ந்த மாணவர்கள் அமோக வெற்றி காண்பார்கள்.
கல்வியில் மேன்மை பெற: கணபதி பூஜை
சுப நாட்கள் :- 2, 3, 10, 12, 15, 22, 23, 24, 27, 30
அசுப நாட்கள் :- 1, 4, 5, 9, 13, 18, 19, 26,
