AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2023 | March Matha Rishabam Rasi Palan 2023

dateFebruary 26, 2023

ரிஷபம்  மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2023

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் கவனம் முழுவதும் உறவுகளை வளர்த்துக் கொள்வதிலும் உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பதிலும் இருக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும்  உங்களில் ஒரு சிலர் இந்த மாதம் உங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பினைப் பெறுவீர்கள்.  பொறுமையாகாவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும். கோபம் மற்றும் உணர்ச்சி   வசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். மாதத்தின் இரண்டாம் பாதியில் நீங்கள் வெற்றியையும் ஆதாயங்களையும் காண்பீர்கள். வெளிநாட்டுப் பயணம், வாழ்க்கை வசதிகள், மற்றும் தொழில் நுட்ப பயன்பாடு போன்ற வகைகளில் இந்த மாதம் நீங்கள் செலவினங்களை சந்திப்பீர்கள்.   

உத்தியோகம் :

இந்த மாதம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். பணிகள் அதிகமாக காணப்படும். பணியிடத்தில் மாதத்தின் முதல் பாதியில் நீங்கள் சில மோதல்களை சந்திக்க நேரலாம்.  வங்கி, நிதித்துறை, ஆலோசனைத் துறை, ஆட்டோமொபைல் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சார்ந்த துறைகளில் பணியில் இருப்பவர்கள் இந்த மாதத்தின் முதல் பகுதியில் சாதகமான விளைவுகள் மற்றும் மாற்றங்களைக் காண நேரலாம். உத்தியோகம் நிமித்தமாக நீங்கள் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள நேரலாம். வெளிநாட்டு மக்கள் மற்றும் அந்நிய மொழி பேசுபவர்கள் மூலம் இந்த மாதம் நீங்கள் ஆதாயங்களைக் காண நேரலாம்.

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் முதல் பாதியில் உங்களுக்கேற்ற துணையை நீங்கள் கண்டு கொள்ள வாய்ப்புள்ளது. இரண்டாம் பாதியில் சில சோதனைக் கட்டங்களை நீங்கள் கடக்க நேரலாம். திருமணமான தம்பதியர் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள இயலும். புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் சண்டை சச்சரவுகள் விலகி சுமுக உறவை பராமரிக்க இயலும்.  

திருமண உறவில் நல்லிணக்கம் காண : ராகு பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் பண வரவு சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தக முதலீடுகள் மூலம் மத்திம  ஆதாயங்களே  கிட்டும்.ஆபத்தில்லாத பங்கு பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.. இந்த மாதம் உங்களால் பணத்தை சேமிக்க இயலும். அதன் மூலம் உங்கள் வங்கி இருப்பு உயரும். இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் ஊக்க வணிகம் மூலம் லாபம் காண்பீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட :  பிருகஸ்பதி பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம்  உங்கள் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் இரண்டாம் பகுதியை விட முதல் பாதியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டி வரலாம். தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். உங்கள் ரத்த அழுத்த அளவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  சூரியன் பூஜை

தொழில் :

வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு தொழில் செய்யும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சக தொழிலாளர்களுடன் சில ஈகோ பிரச்சினைகள் ஏற்படலாம் கவனம் தேவை. இந்த மாதம் உங்கள் வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் நீங்கள் இந்த மாதம் சிறப்பாக செயல்படுவீர்கள்.

உங்கள் தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை

தொழில் வல்லுனர்கள் :

வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் தொழில் செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி வரலாம். கடினமாக உழைத்தாலும் அதற்குரிய பலன்கள் உறுதியாக கிட்டும் என்பது மகிழ்ச்சியான விஷயம். மேலும் ஒரு சிலருக்கு எதிர்பாராத ஆதாயங்களும் கிட்டலாம். அதிக தொழில் வாய்ப்புகளைப் பெற நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியிருக்கும். இந்த மாத இறுதியில் நீங்கள் புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சிறந்த வாய்ப்புகள் உங்களை நாடி வரலாம். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  

உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் முழுவதும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். என்றாலும் உடல் நலத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லூரி மாணவர்கள் இந்த மாதம் சிறந்த வசதிகளை அனுபவிப்பார்கள். வெளிநாடு அசென்று மேற்கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : சரஸ்வதி பூஜை 


banner

Leave a Reply