கன்னி மார்ச் மாத பொதுப்பலன்கள் 2023
கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் கவனம் முழுவதும் உங்கள் உத்தியோகம் மற்றும் தொழிலிலும் மற்றும் குழந்தைகளின் நல் வாழ்விலும் இருக்கலாம். அவர்கள் வேலை மற்றும் குடும்பத்தில் குறிப்பாக குழந்தைகளிடம் கணக்கிடும் போக்கை வெளிப்படுத்தலாம் மாத ஆரம்பத்ததில் உங்கள் வருமானம் சிறப்பாக இருக்கும். நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் குழந்தைகளிடம் தரமான நேரத்தை செலவிட முயற்சி செய்ய வேண்டும்.
உத்தியோகம் :
உங்கள் உத்தியோகம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வழிகாட்டியின் ஆலோசனை மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் பணியிடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கென சிறந்த இடத்தைப் பிடிப்பீர்கள்.
காதல் / குடும்ப உறவு :
இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிட்டும். மாதத்தின முதற்பகுதியில் கவனிப்பு, அன்பு, அக்கறை இருக்கும் என்றாலும் மாத பிறபகுதியில் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த முற்படலாம். தம்பதிகளுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படலாம். உறவை சுமுகமாக தக்க வைத்துக் கொள்ள விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
உங்கள் நிதிநிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும். உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். என்றாலும் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். முதலீடுகள் மூலம் நீங்கள் சிறந்த ஆதாயங்களைக் காண்பீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட: சுக்கிரன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் முழுவதும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகலாம். மாத ஆரம்பத்தில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை நீங்கள் சந்திப்பீர்கள். உணர்ச்சி வசப்படாமல் இருக்க முயலுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் தூக்கமின்மை காரணமாக அவதியுற நேரலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
தொழில் :
வியாபாரம் அல்லது தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் தொழிலில் சில போராட்டங்கள் மற்றும் தடைகளை சந்திக்க நேரலாம். தொழில் மூலம் வருமானம் பாதிக்கப்படலாம். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் தடைகளைத் தாண்டி சாதிக்க இயலும். யோசித்து முடிவுகளை எடுப்பதன் மூலம் தொழிலில் வெற்றி காண இயலும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் கணிசமான பணத்தை சம்பாதிக்க இயலும்.
தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை
தொழில் வல்லுனர்கள் :
கன்னி ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சில கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரும். தங்கள் துறைகளில் பல சவால்களை சந்தித்த பின்னரே வெற்றி காண இயலும். குறிப்பாக மார்கெடிங் மற்றும் வாடிக்கையாளர் தொடர்புத் துறைகளில் இருப்பவர்கள் சில தோல்விகளை சந்திக்க நேரும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த அதிக முயற்சிகளை மேற்கொள்ள நேரலாம்.
தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை
மாணவர்கள் :
மாணவர்களின் படிப்பு சீரான ஓட்டத்துடன் இருக்கும். தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் வகையில் தயாராவார்கள். கிரக நிலைகளும் அவர்களுக்கு சாதகமாக உள்ளது. என்றாலும் கவனமின்மை காரணமாக படிப்பில் சில சிறு தடைகளை அவர்கள் சந்திக்க நேரலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை

Leave a Reply