Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கருப்பசாமி மூல மந்திரம் | Karuppaswamy Moola Mantra

October 20, 2020 | Total Views : 38,577
Zoom In Zoom Out Print

கருப்பசாமி மூல மந்திரம்:

தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே கருப்பசாமி மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக விளங்கி வருகிறார். கருப்பசாமி துடியான கிராம காவல் தெய்வம். கருப்பன், கருப்பசாமி, கருப்பாயி போன்ற பெயர்களை தென்னாட்டு தமிழர்கள் இன்றளவும் தங்களது குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வதைக் காணலாம். கருப்பசாமி இல்லாத கிராமங்களே எனலாம். அதுவும் தென்தமிழ் நாட்டில் உள்ள அம்மன் ஆலயங்களில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கும்.

அடர்ந்த மீசையும், சிவந்த உதடும், உருட்டிய விழிகளும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு கம்பீரமாக தோற்றமளிப்பவர் கருப்பசாமி. உயர்ந்த உருவமும், கருத்த மேனியும், வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எல்லா எதிரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குபவர். பொய் சொல்வதோ, ஏமாற்றுவதோ இவரிடம் செல்லுபடியாகாது. நம்பியவருக்கு காவலராகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருக்கிறார் கருப்பசாமி.

கருப்பசாமி பரமசிவனின் அம்சம் என்றும், பத்ரகாளியின் அம்சம் என்றும் கருதி வணங்கப்படுகிறார். இவருக்கு பெரியாண்டவர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கூப்பிட்ட குரலுக்கு விரைந்து வந்து தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதில் தன்னிகரற்ற காவல் தெய்வமாக விளங்குகிறார் கருப்பசாமி.
மக்கள் தங்களது சொத்து, சுகம், மக்கள், மாடு, நிலம் போன்ற எல்லா செல்வங்களுக்கும் கருப்பசாமியே காவல் என்று நம்புகின்றனர்.
 
எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்படாமல் இருக்கவும் இவரே கதி என்று கருப்பசாமிக்கு படையல் இடுகின்றனர். கருப்பசாமியும் தன்னை வணங்கும் அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார். கருப்பசாமி அருளை பெற, ஜோதிடம் குறித்த தகவல்களை பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
 

 

 

கருப்பசாமி மூல மந்திரம்:

ஓம் க்ரூம் அசிதாங்காய  
மகாவீர பராக்ரமாய 
கதாதராய
தூம்ர நேத்ராய 
தம்ஷ்ட்ரா கராளாய 
மாலாதராய 
நீலாம்பரதாய
சர்வ பாபக்னே 
சர்வ பயாக்னே 
சிவபுத்ராய 
க்ருத்தாய 
க்ருபாகராய ஸ்வாஹா
 
சக்தி வாய்ந்த இந்த கருப்பசாமி மூல மந்திரத்தை நாள்தோறும் உச்சரித்து வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை காற்றைப் போல விரைந்து வந்து நிறைவேற்றுவார் அய்யன் கருப்பசாமி.  
banner

Leave a Reply

Submit Comment